உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி: ஐ.ஐ.டி. பாபா ஆரூடம்

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி: ஐ.ஐ.டி. பாபா ஆரூடம்

புதுடில்லி: பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோற்கும் என்று பிரபல சாமியாரான ஐ.ஐ.டி. பாபா ஆரூடம் கூறி உள்ளார்.சாமியார்களில் பல ரகம் உண்டு. அவர்களில் பிரபலமானவராக அறியப்படுபவர் ஐ.ஐ.டி. பாபா. சர்ச்சையான விஷயங்களை பேசுவதால் சமூக வலைதளங்களில் இவரின் பேச்சுகள், நடவடிக்கைகள் பிரபலம். மகா கும்பமேளாவில் பங்கேற்றதன் மூலம் ஏகமாக பிரபலமாகி இருக்கிறார் ஐ.ஐ.டி. பாபா. இவர் தற்போது புதிய ஆரூடம் ஒன்றை கூறி இருக்கிறார். துபாயில் இன்றைய (பிப்.23) இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோற்கும் என்று கூறி இருக்கிறார். இந்த போட்டியில் விராட் கோலி உள்ளிட்ட எந்த முக்கிய வீரரும் எடுக்கும் முயற்சிக்கும் பலனில்லை என்று தெரிவித்துள்ளார். அவரது வீடியோ வைரலாகி உள்ள நிலையில், ஆரூடத்தை கண்டு பலரும் கண்டித்து விமர்சனம் செய்து வருகின்றனர். ஐ.ஐ.டி. பாபாவின் உண்மையான பெயர் அபே சிங். ஐ.ஐ.டி., மும்பையில் படித்தவர். கனடாவில் உயர்ந்த பணியில் இருந்தவர், ஆன்மிகத்தின் மீதான ஈர்ப்பு காரணமாக சாமியாராக மாறியவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Premanathan Sambandam
பிப் 24, 2025 09:59

எல்லா சாமியார்கள், சர்வ மதத்திலும் குரு ஸ்தானத்தில் இருப்பவர்கள், அரசியல் பிரமுகர்கள்,அரசு அதிகாரிகள் எல்லோருமே இந்த புண்ணிய பாரதத்தில் இப்போது fraud பார்ட்டிகளாகவே இருக்கிறார்கள் மக்கள் அறிவு கெட்டவர்களாக இருப்பதால் தான் இவர்கள் உழைப்பு இல்லாமல் OC காசில் ஒய்யாரமாக வாழ்கிறார்கள் வந்தே மாதரம்


sridhar
பிப் 24, 2025 08:24

இதுபோன்ற ஹேஷ்யங்கள் இதுபோன்ற சாதாரண விஷயத்துக்கு ஒரு ஆன்மீகவாதிக்கு தேவையா .


சகுரா
பிப் 23, 2025 22:09

ஆரூடம் பொய்யாகி விட்டது. காவி உடுப்பதை தவிர்ப்பது நல்லது. அதன் மதிப்பை கெடுக்க வேண்டாம்


பெரிய ராசு
பிப் 23, 2025 22:06

இந்தியா ஜெயிச்சிருச்சு. பிராடு சாமியார் .இவனை துவைத்து தொங்க விடங்க மக்களே , கேடுகெட்டவன் நாட்டுக்கு கேடு இவன்


Ramesh Sargam
பிப் 23, 2025 22:04

இந்தியா ஜெயித்து விட்டது. இப்ப இந்த டுபாக்கூர் சாமி என்ன சொல்லப்போகிறார்?


Ramesh Sargam
பிப் 23, 2025 20:39

முற்றும் துறந்தவரைத்தான் சாமியார் என்று கூறவேண்டும். இவர் என்ன எல்லா சுக,துக்கங்களை துறந்தவரா? அப்படி என்றால் கிரிக்கெட் மீது ஏன் நாட்டம்? ஐ.ஐ.டியில் படித்ந்து இருக்கலாம். ஆனால் இப்படி ஆரூடம் கூறுகிறேன் என்று ஏதோ கூறி அந்த பெருமைமிகு ஐ.ஐ.டியின் பெயரை கெடுக்கக்கூடாது.


முக்கிய வீடியோ