உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மும்பையில் சட்டவிரோத பைக் டாக்சி: பயணியாக மாறி கண்டுபிடித்த அமைச்சர்

மும்பையில் சட்டவிரோத பைக் டாக்சி: பயணியாக மாறி கண்டுபிடித்த அமைச்சர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மஹாராஷ்டிராவின் மும்பையில், பயணி போல நடித்து, சட்டவிரோதமாக, 'பைக் டாக்சி'கள் இயக்கப்படுவதை மாநில போக்குவரத்து துறை அமைச்சர் பிரதாப் சர்நாயக் கண்டுபிடித்தார்.மஹாராஷ்டிராவில், 'பைக் டாக்சி' எனப்படும், இருசக்கர வாகன பொதுப் போக்குவரத்துக்கு மாநில அரசு தடை விதித்துள்ளது. இதற்கென தனியாக விதிகள் இல்லாததாலும், பயணியரின் பாதுகாப்பு கருதியும் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.எனினும், மும்பையில் பைக் டாக்சி சேவைகள் இயங்குவதாக மாநில போக்குவரத்து துறை அமைச்சர் பிரதாப் சர்நாயக்குக்கு சந்தேகம் ஏற்பட்டது; அதை அவரது துறை அதிகாரிகள் மறுத்தனர்.உண்மையை கண்டறிய அமைச்சரே களத்தில் இறங்கினார். தன், 'மொபைல் போன்' வாயிலாக, 'ரேபிடோ பைக் டாக்சி'யை வேறு நபர் பெயரில், 'புக்' செய்தார். அடுத்த சில நிமிடங்களில், மந்த்ராலயம் எனப்படும் மாநில தலைமை செயலகம் முன் பைக் டாக்சி வந்தது.ஓட்டுநரிடம் சென்ற அமைச்சர், அவரிடம் 500 ரூபாய் அளித்தார். அதை ஏற்க மறுத்த ஓட்டுநரிடம் தான் போக்குவரத்து துறை அமைச்சர் என, பிரதாப் சர்நாயக் அறிமுகம் செய்து கொண்டார்.பின், “நீங்கள் சட்டவிரோதமாக பைக் டாக்சியை இயக்குகிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?” எனக் கேட்டார். ஓட்டுநர் மன்னிப்பு கேட்டதும், “உங்கள் மீது வழக்குப்பதிவு செய்வது எங்கள் நோக்கமல்ல. ''இந்த பைக் டாக்சியை இயக்குவதன் பின்னணியில் இருப்பவரை கண்டுபிடித்து தண்டனை வழங்குவதே நோக்கம்,” என தெரிவித்த அமைச்சர், ஓட்டுநரை அனுப்பி வைத்தார். அதன்பின், கண்காணிப்பை தீவிரப்படுத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Anbuselvan
ஜூலை 04, 2025 08:28

இங்கே கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு மேலாக ஆட்டோவில் மீட்டர் என்பது ஒரு பேருக்குத்தான். அதற்கு முன்பு கட்டுப்பாடு இருந்தது ஆனால் என்னமோ மேட்டரில் சூடு போடுவார்கள் அதனால் மீட்டர் தாறுமாறாக தொகையை காண்பிக்கும். இப்போது உபேர், ஓலா, ராபிடோ வந்த பிறகு குறைந்த பட்சம் வாடிக்கையாளர்களுக்கு எவ்வுளவு தொகை என தெரிய வரும். எப்போ ஒரு ஆட்சியாளர் அரசு துறை பணியார் ஊதிய உயர்வு கேட்டு போராடிய போது உங்களுக்கு சம்பளம் எல்லாம் கூட்ட முடியாது நீங்க கிம்பளம் வாங்கிக்குங்க நாங்க கண்டுக்க மாட்டோம் என்றாரோ ஆண்டு தொலைந்தது தமிழ்நாடு. தமிழ்நாட்டில் முளைத்த இந்த விஷ செடி நாடு முழுவதும் முளைத்து உள்ளது என்பது வருந்த தக்க விஷயம்.


Kasimani Baskaran
ஜூலை 04, 2025 03:53

ஓட்டுநர் அமைச்சரை அடையாளம்கண்டது சிறப்பு..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை