உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  சட்டவிரோத ஊடுருவல் வழக்கு; 4 மாநிலங்களில் அமலாக்கத்துறை சோதனை

 சட்டவிரோத ஊடுருவல் வழக்கு; 4 மாநிலங்களில் அமலாக்கத்துறை சோதனை

லக்னோ: நம் அண்டை நாடான வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் மற்றும் வங்கதேசத்தில் இருந்து மியான்மருக்கு தப்பி வந்ததாக நம்பப்படும் ரோஹிங்கியர்கள் நம் நாட்டுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவினர். இவர்களுக்கு உதவிய ஒரு கும்பல் மீது, உத்தர பிரதேசத்தின் பயங்கரவாத எதிர்ப்பு படையினர் கடந்த 2024ல் ஒரு வழக்குப்பதிவு செய்தனர். அவர்களுக்கு இந்தியர்களாக அடையாளப்படுத்த உதவும் ஆதார், பான் உள்ளிட்ட ஆவணங்களை, அந்த கும்பல் போலியாக தயாரித்து கொடுத்தது. அந்த கும்பலை சேர்ந்தவர்கள், பிரிட்டனை சேர்ந்த நிறுவனங்களிடம் பண உதவி பெற்றதாகவும், போலி வங்கி கணக்குகள் மூலம் அந்த பணத்தை சட்டவிரோத நடவடிக்கைக்கு பயன்படுத்தியதாகவும் அமலாக்கத்துறை சந்தேகிக்கிறது.இதையடுத்து உ.பி.,யில் உள்ள லக்னோ மண்டலத்தை சேர்ந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், பணமோசடி தடுப்பு சட்டத்தின்படி நான்கு மாநிலங்களில் அதிரடி சோதனை நடத்தினர். உத்தர பிரதேசத்தின் சஹாரன்பூர், டில்லியில் உள்ள ஜாமியா நகர், ஹரியானாவின் பரிதாபாத் மாவட்டத்தில் உள்ள பல்லாப்கார், மேற்கு வங்கத்தின் தெற்கு 24, வடக்கு 24 பர்கானாஸ் மற்றும் முர்ஷிதாபாத் உட்பட 13 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !