வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஆட்சியில் அணைத்து துறைகளிலும் கொள்ளைகள் தொடர்கிறது
மேலும் செய்திகள்
மணல் விற்பனை முறைகேடு விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு
23-Aug-2025
பாட்னா: பீஹாரின் பாட்னா பகுதியில் சட்டவிரோதமாக மணல் குவாரி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் ஆகியவற்றில் ஈடுபட்டதாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.இது குறித்து பாட்னா எஸ்எஸ்பி கார்த்திகேயா கே.ஷார்ம் கூறியதாவது:பீஹார் மாநிலம் புறநகர் பகுதியில் சிலர், சோன் நதிக்கரையில் உள்ள அம்னாபாத்தில் சட்டவிரோத மணல் குவாரி மற்றும் பணம் பறித்தலில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் பேரில் நடத்திய சோதனையில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.கைதானவர்கள் அனிஷ் குமார் கும்பலை சேர்ந்தவர்கள் என்றும், இவர்கள் சோன் நதிக்கரையில் உள்ள அம்னாபாத்தில் சட்டவிரோத மணல் குவாரி அமைக்க மற்றும் மிரட்டி பணம் பறித்தலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. கைதானவர்களிடமிருந்து ஏ.315 ரக போர் துப்பாக்கி, கைதுப்பாக்கி மற்றும் 49 பயன்படுத்தப்படாத தோட்டாக்கள் ஆகியவை மீட்கப்பட்டது. இவர்களுடன் தொடர்புள்ளவர்கள் குறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது.இவ்வாறு கார்த்திகேயா கே. ஷார்ம் கூறினார்.
ஆட்சியில் அணைத்து துறைகளிலும் கொள்ளைகள் தொடர்கிறது
23-Aug-2025