உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முதிர்ச்சியற்றவர்!

முதிர்ச்சியற்றவர்!

பிரதமர் மோடி அமெரிக்காவிடம் சரண்டர் ஆனதாக ராகுல் கூறியுள்ளார். இதன் வாயிலாக ஆப்பரேஷன் சிந்துாரில் வெற்றி பெற்ற நம் படையை அவமதித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு தேவையான முதிர்ச்சி தனக்கு இல்லை என்பதை இதன் வாயிலாக அவர் வெளிப்படுத்தியுள்ளார்.சுதான்ஷு திரிவேதி, ராஜ்யசபா எம்.பி., - பா.ஜ.,

மலிவான அரசியல்!

பா.ஜ., தலைவர்கள் ஆப்பரேஷன் சிந்துார் பெயரில் மலிவான அரசியல் செய்கின்றனர். பஹல்காம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் எப்படி அங்கு வந்தனர்? அவர்கள் பிடிபட்டனரா? போர் நிறுத்த அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டது ஏன்? இவை குறித்து விவாதிக்க பார்லி.,யில் சிறப்பு கூட்டத்தை கூட்டுங்கள்.ஆதித்யா தாக்கரே, எம்.எல்.ஏ., - சிவசேனா உத்தவ் அணி

மவுனம் ஏன்?

வெளிநாட்டு மாணவர்களை பாதிக்கும் வகையில் விசா கட்டுப்பாடுகளை அமெரிக்கா அமல்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கைகளை சீனா கடுமையாக விமர்சித்துள்ளது. அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் மூன்றில் ஒருவர் இந்திய மாணவர் என்ற போதும் மத்திய அரசு வாய் திறக்கவில்லை. ஜெய்ராம் ரமேஷ், பொதுச்செயலர், காங்கிரஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ