உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரேபரேலியா? வயநாடா? குழப்பமாக உள்ளது என்கிறார் ராகுல்

ரேபரேலியா? வயநாடா? குழப்பமாக உள்ளது என்கிறார் ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வயநாடு: வயநாடு அல்லது ரேபரேலி தொகுதிகளில் எந்த தொகுதியில் எம்.பி.,யாக நீடிப்பது என்பதில் குழப்பமாக உள்ளது என காங்கிரஸ் எம்.பி.,ராகுல் கூறியுள்ளார்.

நன்றி

லோக்சபா தேர்தலில் உ.பி., மாநிலம் ரேபரேலி மற்றும் கேரள மாநிலம் வயநாட்டில் வெற்றி பெற்றார். இரண்டில் ஒன்றை அவர் ராஜினாமா செய்ய வேண்டும். இது குறித்து விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என காங்கிரஸ் கூறியுள்ளது. நேற்று ( ஜூன் 11) ரேபரேலி சென்ற ராகுல் வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

உத்தரவிட முடியாது

இன்று கேரள வந்த ராகுல், மலப்புரம் பகுதியில் நடந்த பேரணியில் பங்கேற்றார். தொடர்ந்து அங்கு நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது: நாட்டில் உள்ள ஒவ்வொரு வரலாறும் பாரம்பரியமும் நமது அரசியல் சாசனத்தை பாதுகாக்கிறது. தங்களுக்கு என்ன வேண்டும் என்பது குறித்தும், இந்திய மக்களுக்கும் பிரதமர் உத்தரவிட முடியாது என்பதை கேரளா, உ.பி., உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் எடுத்து காட்டி உள்ளன. அரசியல்சாசனம் எங்களது குரல். அதனை தொடாதீர்கள் எனவும் பிரதமரிடம் மக்கள் தெரிவித்துள்ளனர். தேர்தலுக்கு முன்னர், அரசியல் சாசனத்தை கிழிப்போம் என பா.ஜ., வினர் பிரசாரம் செய்னர். ஆனால் தேர்தலுக்கு பின் அரசியல் சாசனத்தை பிரதமர் வணங்கினார். வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி நூலிலையில் வெற்றி பெற்றார். அங்கு அவர் தோற்கடிக்கப்பட்டு இருப்பார். அயோத்தியில் பா.ஜ., தோல்வி அடைந்துள்ளது. இதன் மூலம், வன்முறை மற்றும் வெறுப்புணர்வை நாங்கள் ஆதரிக்க மாட்டோம் என அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். இவ்வாறு ராகுல் பேசினார்.

எந்த முடிவு

பிறகு வயநாட்டில் நடந்த கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: இரண்டாவது முறையாக என்னை வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி. அரசியல்சாசனத்தை பாதுகாக்கவே, 2024 லோக்சபா தேர்தல் நடந்தது. அன்பு மற்றும் பாசத்தால், வெறுப்புணர்வு தோற்கடிக்கப்பட்டது. அடக்கத்தால், ஆணவம் தோற்கடிக்கப்பட்டது.

மக்களே எனது கடவுள்

துரதிஷ்டவசமாக பிரதமர் மோடியை போல் நான் கடவுளால் வழிநடத்தப்படுபவன் அல்ல. நான் சாதாரண மனிதன். ஏழை மக்களே எனது கடவுள். வயநாடு மக்களே எனது கடவுள். என்னை பொறுத்தவரை, நான் மக்களுடன் பேசுவேன். நான் என்ன செய்ய வேண்டும் என அவர்கள் கூறுவர். வயநாடு அல்லது ரேபரேலி தொகுதிகளில், எதில் எம்.பி.,யாக நீடிக்க வேண்டும் என்பதில் குழப்பம் உள்ளது. எந்த முடிவு எடுத்தாலும் இரு தொகுதி மக்களும் மகிழ்ச்சி அடைவார்கள். தேர்தலின் போது, பா.ஜ., 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என மோடி கூறினார். பிறகு 400 மறைந்து 300 ஆனது. இதன் பிறகு, நான் பயாலிஜிக்கலாக பிறக்கவில்லை. இதனை தனதுதாயார் இறந்த பிறகு தான் உணர்ந்ததாக கூறினார். மேலும், நான் எந்த முடிவும் எடுப்பது கிடையாது. இந்த பூமிக்கு என்னை கொண்டு வந்தது பரமாத்மா. அவர் தான் அனைத்து முடிவுகளையும் எடுக்கிறார். மோடியின் பரமாத்மா, அவரை அதானி மற்றும் அம்பானிக்கு ஆதரவாக முடிவு எடுக்க வைக்கிறார். காலை, மோடியிடம், நீங்கள் மும்பை விமான நிலையத்தை அதானியிடம் கொடுக்க போகிறீர்கள் என பரமாத்மா கூறினார். தற்போது ஏழு விமான நிலையங்களை கொடுத்துள்ளீர்கள். தற்போது, மின் நிலையங்களையும் கொடுக்கிறீர்கள். இவ்வாறு ராகுல் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

நிக்கோல்தாம்சன்
ஜூன் 13, 2024 09:27

தாய்லாந்து ட்ரிப் எப்போ /


பேசும் தமிழன்
ஜூன் 13, 2024 08:11

வயநாடு.. உங்கள் கூட்டாளி மார்க்க ஆட்கள் அதிகம் உள்ள தொகுதி.. உ.பி எப்போது வேண்டுமானலும் கவிழ்த்து விடும்.. பப்பு நன்றாக யோசித்து முடிவு எடுங்கள். அப்படியே மோடி அவர்களுக்கு ஒரு கோரிக்கை வையுங்கள். ஒருவர் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிட வேண்டும் என்று சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று !!!


பேசும் தமிழன்
ஜூன் 13, 2024 08:06

ஏற்கனவே மண்டை குழம்பி தான் இருக்கிறார்.. இதிலே புதிதாக என்ன இருக்கிறது.. குழம்ப ???


rsudarsan lic
ஜூன் 12, 2024 17:25

என்னிக்காவது எப்பவாவது ஏ துக்காகவாவது முடிவு எடுத்திருக்கலாம்?


V Subramanian
ஜூன் 12, 2024 17:23

2 தொகுதி மக்கள் என்னாவது


Hari Bojan
ஜூன் 12, 2024 16:50

இரண்டு குதிரைகளையும் கட்டி ஆளவேண்டியதுதான் ஆனால் ஒன்று நிச்சயமாக கீழே தள்ளிவிடுமென்பதில் சந்தேகமேயில்லை


Rpalnivelu
ஜூன் 12, 2024 16:27

வயநாடு தான் பெஸ்ட்


என்றும் இந்தியன்
ஜூன் 12, 2024 16:17

இதற்குத்தான் சொல்வது அறிவிழந்த அரசியல்வாதிகள் சட்டம் செய்வது என்பது. முதலில் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் நிற்கலாம் என்ற சட்டத்தை உடனே நீக்கவேண்டும். இப்போது என்ன நடக்கும்??இரண்டாவது தொகுதியில் ராஜினாமா செய்து அந்த தொகுதியில் தேர்தல் ஆணையம் தகுந்த நடவடிக்கை எடுத்து தேர்தல் நடத்தி ..... . இதற்கு ஆகும் செலவு பல தேர்தல் அதிகாரிகளின் அனாவசியமான நேர விரயம்???ஒருவருக்கு ஒரு தொகுதி மட்டுமே என்று உறுதி செய்யவேண்டும் சட்ட மாற்றம்


Raja
ஜூன் 13, 2024 15:34

மக்களின் வரிப்பணம் வீணாவதுடன், அந்த பகுதி மக்களுக்கு தேர்தல் முடியும் வரை தாலுகா அலுவலகம், ரெஜிஸ்ட்ரார் அலுவலகம் என ஒரு வேலையும் நடக்காது. ஒரு வேட்பாளர் ஒரு தொகுதி என்ற சட்டம் வரவே வரத்து, அரசியல் பொறுக்கிககள் அதை செய்ய மாட்டார்கள்.


ஆரூர் ரங்
ஜூன் 12, 2024 16:09

என்றுதான் தெளிவாக இருந்திருக்கிறீர்?இப்போ மட்டுமா குழப்பம்?


Jayaraman
ஜூன் 12, 2024 15:50

இரண்டு தொகுதிகளில் ஜெயித்த வேட்பாளர், 2 தொகுதிகளுக்கும் MP யாக இருக்க வேண்டும். ஆனால் ஒரு சம்பளம், வசதிகள் மட்டுமே பெற வேண்டும். சபையில் இவர் ஓட்டு போடும்போது, இவருடைய ஓட்டு , "ஒன்று " என்றே கணக்கிட வேண்டும்.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி