உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 5 மாதங்களில் 1,65,136 பேருக்கு நாய்க்கடி: 17 பேர் ரேபிஸ் நோய்க்கு பலி; கேரளாவில் ஷாக்

5 மாதங்களில் 1,65,136 பேருக்கு நாய்க்கடி: 17 பேர் ரேபிஸ் நோய்க்கு பலி; கேரளாவில் ஷாக்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்; கேரளாவில் 5 மாதங்களில் ரேபிஸ் தாக்குதலில் 17 பேர் பலியான சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.தமிழகத்தில் தெருநாய்க்கடி, ரேபிஸ் தாக்குதலைத் தொடர்ந்து சுகாதார நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. தமிழகத்தை போன்றே கேரளாவிலும் தெருநாய்க் கடியால் ரேபிஸ் தாக்குதலுக்கு ஆளாகி வருவோரின் எண்ணிக்கை மெல்ல, மெல்ல உயர்ந்து வருகிறது.அம்மாநிலத்தில் கடந்த 5 மாதங்களில் மட்டும் 17 பேர் ரேபிஸ் தாக்கி பலியாகி உள்ளனர். அதிலும், தெரு நாய்க்கடிக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை மட்டும் 1,65,136 பேர் ஆகும். இந்த விவரங்கள் அனைத்தும் சமூக ஆர்வலர் ராஜூ என்பவரின் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளி வந்துள்ளது. குறிப்பாக எர்ணாகுளம் மாவட்டத்தில் மட்டுமே 9,619 பேர் தெருநாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே போல, திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம், ஆலப்புழா, திருச்சூர், பாலக்காடு ஆகிய மாவட்டங்களிலும் நாய்க்கடிக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.ரேபிஸ் உயிரிழப்பில், ஆழப்புழா மாவட்டம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் மட்டும் 4 பேர் ரேபிஸ் தாக்கி பலியாகி உள்ளனர். கொல்லம், மலப்புரம் மாவட்டங்களில் தலா 3 பேரும், எர்ணாகுளம், கோழிக்கோடு, திருவனந்தபுரம் மாவட்டங்களில் தலா ஒருவரும் ரேபிஸ் தாக்கி உயிரிழந்துள்ளனர்.இதையடுத்து, தெருநாய்களை கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை முறைகள் பற்றிய விழிப்புணர்வை மிஷன் ரேபிஸ் என்ற தன்னார்வ அமைப்பின் விரைவில் செயல்படுத்த சுகாதாரத் துறையினர் திட்டமிட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Pandi Muni
ஜூலை 06, 2025 20:31

மாட்டிறைச்சி அதிகம் உண்ணும் பகுதிகளில் திரியும் நாய்கள் மனிதனை தாக்குகின்றன


Ramesh Sargam
ஜூலை 06, 2025 20:15

சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களில் கூட நாய்க்கடி பிரச்சினை அதிகம் இருக்கிறது. ஆனால் செய்தி வருவதில்லை, அவ்வளவுதான். குறிப்பாக நான் வசிக்கும் ராமமூர்த்தி நகர் சுற்றுவட்டாரத்தில் ஆயிரத்துக்கும் அதிக நாய்கள் உள்ளன. கடந்த சில நாட்களாக குப்பைகள் சரியாக அகற்றப்படாதால் பாம்புகளும் அடிக்கடி தென்படுகின்றன. இங்குள்ள அரசு பிரதிநிதிகளான MLA, Corporators, Government Officers இவர்களில் யாரையாவது அல்லது அவர்கள் குடும்ப உறுப்பினர்களை நாய் அல்லது பாம்பு கடிக்கவேண்டும். அப்பவாவது ஏதாவது நடவடிக்கை எடுப்பார்களா என்று பார்க்கவேண்டும்.


சிட்டுக்குருவி
ஜூலை 06, 2025 17:19

கார்போரேஷன் எல்லைக்குள் தெருநாய்கள் இல்லாமல் இருக்க நாய்கள் காப்பகம் ஆரம்பிக்கவேண்டும் .அதற்கு பொதுமக்களிடமிருந்து உணவு பராமரிப்புக்கு உதவியை நாடலாம் .மக்களிடம் ஆர்வலர்கள் நிறையபேர் இருப்பார்கள் .நாய்கள் வீடுகளில் மட்டுமே வளர்க்கலாம் .தெருநாய்களே இருக்ககூடாது .


KRISHNAN R
ஜூலை 06, 2025 15:48

வடிவேலு ஒரு படத்தில்,அடிக்கணும்னு முடிவு பண்ணுறீங்க... அடிங்க என்று சொல்வார்... அது போல கடிக்கனும் என்று நாய்கள் கடிக்குது....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை