உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இரு வாரங்களில் ரூ. 10 கோடி வசூலித்த காங்கிரஸ்

இரு வாரங்களில் ரூ. 10 கோடி வசூலித்த காங்கிரஸ்

புதுடில்லி: கடந்த இரு வாரங்களில் ரூ. 10 கோடி வரை பொதுமக்களிடம் இருந்து காங்கிரஸ் நன்கொடை வசூலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.பார்லிமென்ட் லோக்சபா தேர்தல் செலவுகளை எதிர்கொள்ளவும், நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காக போராடவும், 'நாட்டுக்காக நன்கொடை' என்ற பிரசார இயக்கத்தை, காங்கிரஸ் சமீபத்தில் துவக்கியது.இதன்படி, வீடு வீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்தும் மற்றும் 'ஆன்லைன்' வாயிலாகவும், நிதி திரட்டப்பட உள்ளது.அத்துடன் பார்கோடு வாயிலாக, பொதுமக்கள் நன்கொடை செலுத்தும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜெய் மக்கான் கூறியது, பல்வேறு வழிகளில் நன்கொடை வசூலித்ததில் கடந்த இரு வாரங்களில் ரூ. 10 கோடி வரை கட்சிக்கு நிதி கிடைத்துள்ளது. நாட்டின் முன்னேற்றத்தை கட்டமைக்க, உங்கள் பங்களிப்பை செலுத்துங்கள் என்றார்.'


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

பேசும் தமிழன்
ஜன 03, 2024 12:31

வெறும் 10 கோடி மட்டும் தான் இதுவரை... வெள்ளையாக்கி இருக்கிறார்களா ??? நம்பவே முடியவில்லை !!!


தமிழ்
ஜன 03, 2024 11:53

இது என்ன பிரமாதம். தேர்தல் பத்திரம் விற்பனை இப்போதான் ஆரம்பிச்சிருக்காங்க. அதோட ரிசல்ட் பாருங்க, பிஜேபி தான் உலகத்திலேயே நம்பர் ஒண்ணாக இருக்கப்போகுது.


சந்திரசேகர்
ஜன 03, 2024 10:08

ஒருவேளை காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் எல்லோருக்கும் அரசு வேலை கிடைத்து விடும். விலை ஏறிய பொருள்கள் அனைத்தும் விலை வீழ்ச்சி அடைந்து விடும். அதற்கு முன்னோட்டமாக காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் இதை நிறைவேற்றி மக்களின் நம்பகத்தன்மையை பெற்று ஓட்டு கேட்கலாம்


VENKATASUBRAMANIAN
ஜன 03, 2024 08:46

இன்னமும் சில முட்டாள்கள் உள்ளனர். கோடிக்கணக்கில் சொத்து சேர்த்தவர்களுக்கு கொடுக்கிறார்கள்


SIVA
ஜன 03, 2024 08:32

சத்யமூர்த்தி பவன் இடத்தின் மதிப்பு மட்டுமே நூறு கோடி ரூபாய் , பாவம் இது ரொம்ப ஏழ்மையான கட்சி ....


Ramesh Sargam
ஜன 03, 2024 06:28

ரூ.பத்து கோடி, ராகுல், பிரியங்கா, சோனியா, கார்கே இவர்கள் விமான பயணத்துக்கே பத்தாது.


Rajarajan
ஜன 03, 2024 06:15

அடடே ஒரு கருப்பு வெள்ளையாகிறதே ஆச்சர்ய குறி. அது இருக்கட்டும். இந்தியாவில் வேலைவாய்ப்பு இல்லை என்று யார் சொன்னது ? காங்கிரஸ்க்கு உண்மையிலேயே நாட்டின் மீது அக்கறை இருக்குமானால், நாட்டை சீர்திருத்த உங்கள் கட்சி மற்றும் ஓவ்வொரு காங்கிரஸ் உறுப்பினர் தங்கள் சொத்துக்களை விற்று, நாட்டுக்கு பயன்படுத்தலாமே ?? அப்படி முன்னாள் சுதந்திர வீரர்கள் பாடுபட்ட வரலாறு காங்கிரஸில் உண்டே. காதில் பூ சுற்றலாம், ஆனால் இப்படி முழம் கணக்கில் சுற்ற கூடாது.


வாய்மையே வெல்லும்
ஜன 03, 2024 05:31

ஒரு படத்தில் வசனம் இப்படி வரும்.. "நீ என்னை இன்னும் பயித்தியக்காரனாவே நினைச்சுட்டு இருக்க இல்ல ?" என்று.. அந்த பதில் தான் மக்கள் இடம் இருந்து வரப்போகுது.. ராபர்டு வைதேரா விடம் இல்லாத வெளிநாட்டு பணமா ? சோனியா அன்டினியோ விடம் இல்லாத பணமா ? அட நம்ம ராவுளு மிக மிக ஆடம்பர ஊழலில் திளைத்தவர்.. அவரிடம் இல்லாத பணமா ? அதுவும் வேணாம் ராபர்டு மனைவி ப்ரியங்காவிடம் இல்லாத பனமா ?? எதுக்கு நாட்டில் உள்ள ஏழைகளிடம் இன்னும் சுரண்டி திங்க ஆசை ? செம்ம காண்டு வருது ஓடிப்போய்டுங்க


Kasimani Baskaran
ஜன 03, 2024 05:27

இது சீனாவிடம் காங்கிரஸ் வாங்கும் நன்கொடையில் ஒரு சிறு பகுதி கூட கிடையாது...


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி