உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வேலை வாய்ப்பை உருவாக்கினால் ஊக்கத்தொகை; மத்திய அரசு திட்டம்

வேலை வாய்ப்பை உருவாக்கினால் ஊக்கத்தொகை; மத்திய அரசு திட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அடுத்த இரண்டு ஆண்டுகளில், தனியார் துறையில் 3.50 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதை ஊக்குவிப்பதற்கான 'பிரதான் மந்திரி விக்ஷித் பாரத் ரோஜ்ஹர் யோஜனா' திட்டத்தை பிரதமர் மோடி நேற்று துவக்கி வைத்தார்.கடந்த 15ம் தேதி, நாட்டின் சுதந்திர தின உரையின் போது, பிரதமர் மோடி, 'நாட்டின் இளைஞர்களுக்காக 1 லட்சம் கோடி ரூபாய் செலவில், புதிய வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டம் அறிமுகப்படுத்தப்படும்; இத்திட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகளில், நாட்டில் 3.50 கோடி புதிய வேலைகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தார்.தனியார் துறையில் 3.50 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதை ஊக்குவிக்க முயற்சிமுதல்முறை வேலைவாய்ப்பு பெறும் இளைஞர்கள், அதிக வேலைகளை உருவாக்கும் நிறுவனங்கள் என, இரு தரப்பினரையும் ஊக்குவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டம், 2025, ஆக., 1, முதல் வரும் 2027, ஜூலை 31ம் தேதி வரை அமலில் இருக்கும். இதற்கான, பிரத்யேக போர்ட்டலை பிரதமர் மோடி நேற்று துவங்கி வைத்தார்.இது குறித்து மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட் வியா தெரிவித்துஉள்ளதாவது: இரண்டு பகுதிகளாக அமல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தில், பகுதி - ஏ என்பது முதல் முறை பணியாளர்களுக்கு, அடிப்படை சராசரி மாத சம்பளத்தில் இருந்து 15,000 ரூபாய் வரை, ஒருமுறை ஊக்கத்தொகை, இரண்டு தவணைகளாக செலுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நிறுவனங்களுக்கு

பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனம், ஒவ்வொரு பணியாளருக்கும், மாதம் 3,000 ரூபாய் வீதம், குறைந்தபட்சம் 6 மாத காலம் ஊக்கத்தொகை பெறலாம். தயாரிப்புத்துறை நிறுவனங்களுக்கு நான்கு ஆண்டுகள் வரை ஊக்கத்தொகை அமலில் இருக்கும்.

வேலை தேடுவோருக்கு

பகுதி ஏ - என்பது முதல் முறை பணியாளர்களுக்கு, அடிப்படை சராசரி மாத சம்பளத்தில் இருந்து 15,000 ரூபாய் வரை, ஒருமுறை ஊக்கத்தொகை, இரண்டு தவணைகளாக செலுத்தப்படும். இதில், 1 லட்சம் ரூபாய் வரையில் சம்பளம் பெறுவோர் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை இரண்டு ஆண்டுகள் அமலில் இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

நிக்கோல்தாம்சன்
ஆக 19, 2025 17:04

நிறுவனங்கள் தொடங்க இருக்கும் சிக்கல்கள் , உதாரணம் எனது விவசாய நண்பர் குறித்து பலமுறை கூறியுள்ளேன் , அவர் இயந்திரிங்கள் எல்லாம் சோலாரில் ஓடக்கூடிய வகையில் வைத்துள்ளார் , அவர் அரசு கரெண்ட் பெற்றுக்கொள்ளவில்லை , நீரும் நிலத்தடி நீர் , எந்த அரசு நிறுவனத்தையும் சாராமல் விவசாயம் நிலத்தில் பாறை இருக்கும் இடத்தில் மெஷின் தயாரிக்கும் வேலையை செய்து வருகிறார் GST வேண்டும் என்றால் நிரந்தர முகவரி வேண்டும் என்று கூறியுள்ளார்கள் , அவர் எப்படி பெறுவது என்று அலைவது காண்கையில் மிகுந்த வேதனையா இருக்கு


wahid
ஆக 19, 2025 16:41

நான் கொடுக்கிறேன் வேலை, ஒன்றல்ல இரண்டல்ல சிவகாசி ஒட்டுமொத்த மக்களுக்கு வேலை கொடுக்கிறேன். மேலும் உலகம் முழுவதும் உள்ள பட்டாசு தொழிற்சாலைகளை மூடுகிறேன் விரைவில்.


SENTHIL NATHAN
ஆக 19, 2025 11:59

இவ்வாறு செய்வதற்கு பதிலாக நிறுவனங்கள் மீதான வரி விதிப்பு, தனிநபர் வருமான வரி போன்றவற்றை குறைக்கலாம். அரசு துறைகளில் மேலும் பல துறைகளில் தனியார் பங்களிப்பு செய்ய வைக்கலாம். இன்று பல நிறுவனங்கள் திறமையான ஊழியர்கள் இல்லாமல் தடுமாறுகின்றன. ஊழியர்கள் பயிற்சிக்கு ஊக்கம் அளிக்கலாம். கல்வி நிறுவனங்களின் பாடத் திட்டங்களை தொழிற்துறை களின் எதிர்பார்ப்பிற்கேற்ப மாற்றி அமைத்திட வேண்டும்


அப்பாவி
ஆக 19, 2025 11:54

ஆட்சிக்கு வந்தால் வர்ஷத்துக்கு ரெண்டு கோடி வேலை குட்ப்போம் ஹை. பாஞ்சி லட்சம் போட்வோம் ஹை. 2014 லே சொன்னோம் ஹை. எப்டி.இர்ந்த நாம் எப்டி ஆயிட்டோம் ஹை.


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஆக 19, 2025 09:42

தொழில் துவங்க, வேலைக்கு செல்ல இலவச ஊக்கத்தொகை - லஞ்சம் என்றும் சொல்லலாம். ஓசி என்றால் இந்தியர்களுக்கு இனிப்பு மிட்டாய். நம்ம ஆளுங்க அந்த இலவச பணம் கிடைக்கு வரை தொழில் செய்வார்கள், வேலைக்கு போவார்கள். அது நின்ற அடுத்த நாள் நஷ்டக்கணக்கு எழுதி கம்பெனியை மூடிவிடுவார்கள். அதிகாரிகள் அந்த இலவச ஊக்கத்தொகையை கொடுப்பதற்கு லஞ்சத்தில் கமிஷன் கேட்பார்கள். உயர்மட்டமாக இல்லாத தொழிலை இருப்பதாக காட்டி, போகாத வேலைக்கு போனதாக சொல்லி இலவச ஊக்கத்தொகை வாங்கும் கூட்டம் அதிகாரிகளுக்கு கமிஷன் கொடுக்கவும் தயங்காது. அப்புறம்?


புதிய வீடியோ