உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கடன் சுமையில் தவிப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு

கடன் சுமையில் தவிப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு

புதுடில்லி இந்தியாவின் பெருநகரங்களில் பணியாற்றி வரும் தொழிலாளர்களில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது அதிக எண்ணிக்கையிலானோர் கடன் சுமையில் சிக்கித் தவிப்பதாக 'பேங்க்பஜார் 2024 ஆஸ்பிரேஷனல் இண்டெக்ஸ்' ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தியாவின் பெருநகரங்களில் பணியாற்றி வரும் 22 முதல் 45 வயதுக்குட்பட்ட 1,529 தொழிலாளர்களிடையே நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 13.40 சதவீதம் பேர் மட்டுமே கடன் இல்லாமல் இருப்பதாக தெரிவித்துள்ளனர். கடந்த 2022ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 19 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது குறைந்துள்ளது. கிட்டத்தட்ட 91.20 சதவீதம் பேர் 25 லட்சம் ரூபாய் வரையிலான கடனை கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த எண்ணிக்கை முன்பு 88 சதவீதமாக இருந்தது. இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 40 சதவீதம் பேர் பெண்கள்; 60 சதவீதம் பேர் ஆண்கள். இவர்கள் அனைவருமே மாதம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 30,000 ரூபாய் சம்பளம் பெறுபவர்கள். கடன், கிரெடிட் கார்டு வசதிகளை பெற்று ஆன்லைன் பரிவர்த்தனை மேற்கொள்ளத் தெரிந்தவர்கள். இதற்கிடையே மெட்ரோ அல்லாத நகரங்களில் வசிப்பவர்களில் 28 சதவீதம் பேர், படிப்பு செலவுகள், மருத்துவ தேவைகள் உள்ளிட்ட காரணங்களுக்காக கடன் வாங்கியுள்ளனர். இவை குறைந்த மதிப்பிலான கடன்களாகவே இருந்தாலும், அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யவே குறிப்பிட்ட சதவீத மக்கள் சிரமப்படுவது தெரிகிறது. முக்கிய பிரச்னைகள் விலைவாசி உயர்வு ,குடும்ப பொறுப்புகள் ,குறைந்த சேமிப்புஅதிக ஆர்வம்வீடு, சொத்துகள் வாங்குவது உடல்நலம் காப்பதுஉறவுகள்புகழ்வேலையில் வளர்ச்சிவிரைவாக ஓய்வு பெறுவதுமாறுபடும் விருப்பம்மக்களின் கடன் வாங்கும் தன்மை பிராந்திய வாரியாக மாறுபடுகிறது. தென்னிந்தியாவில் வாகன கடன் அதிகமாகவும்; கிழக்கு இந்தியாவில் கல்வி கடன் அதிகமாகவும்; மேற்கு மற்றும் வட இந்தியாவில் வீடு, சுற்றுலாக் கடன் அதிகமாகவும் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Kasimani Baskaran
நவ 01, 2024 05:27

முதலீடுகளில், சேமிப்பில் கவனம் செலுத்தவேண்டும். அதை விட்டுவிட்டு பெரிதாக அகலக்கால் வைத்தால் டர்ர்ர் என்று கிழிய வாய்ப்புண்டு.


அப்பாவி
நவ 01, 2024 03:31

இந்தியாவே 150 லட்சம் கோடி கடனில் இருக்காம். நம்ம கடன் ஒரு பெரிய எமவுண்ட்டா? வெறும் பாஞ்சி லட்சம்தான் கோவாலு.2047 க்குள்ளாற அடைச்சிருவேன். இல்லே அதுக்குள்ளே மேலே போயிருவேன்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை