உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தமிழக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

தமிழக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

மூணாறு; கேரள மாநிலம் மூணாறில் தமிழகத்தை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை விடப்பட்டது. அதனால் மூணாறுக்கு தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தது. மாட்டுபட்டி, குண்டளை அணைகள், ராஜமலை உட்பட முக்கிய சுற்றுலாப் பகுதிகள் அனைத்தும் களை கட்டின.

இதமான சூழல்

மூணாறில் கடந்த 2 நாட்களாக வெயில் குறைந்து வானம் மேக மூட்டத்துடன் மந்தமான காலநிலை நிலவுகிறது. ஒருவித குளிருடன் இதமான சூழல் நிலவியது. இது சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தது. அதேசமயம் மூணாறைச் சுற்றி ஒரு சில எஸ்டேட் பகுதிகளில் காற்றுடன் சாரல் மழை பெய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !