உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சென்னையில் அதிகரித்த கடல்நீர்மட்டம்: பார்லி.,யில் மத்திய அரசு தகவல்

சென்னையில் அதிகரித்த கடல்நீர்மட்டம்: பார்லி.,யில் மத்திய அரசு தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கடந்த 1993 - 2020ம் ஆண்டு காலகட்டத்தில் சென்னையில் கடல் நீர்மட்டம் ஆண்டுக்கு 4.31 மி.மீ., உயர்ந்துள்ளது,'' என மத்திய அரசு கூறியுள்ளது.இது தொடர்பாக பார்லிமென்டில் மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங் அளித்த பதிலில் கூறியுள்ளதாவது: பல்வேறு காரணங்களினாலும், பருவநிலை மாற்றம் காரணமாக ஆண்டுக்கு ஆண்டு கடல் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இது மெதுவாக உயர்ந்து வருவதால், அது குறித்து ஆய்வு செய்ய 30 ஆண்டுகள் தேவை. ஆனால் கடல் நீர்மட்டம் உயர்வு தொடர்பாக ஆய்வு செய்ய 5 ஆண்டுகள் என்பது போதுமான காலம் அல்ல. இருப்பினும் பல்வேறு அறிவியல் ஆய்வுகளின்படி, 1900 -2000 காலகட்டத்தில், கடல் நீர்மட்டம் ஆண்டுதோறும் 1.7 மி.மீ., உயரம் அதிகரித்து உள்ளது. 1993 - 2015 ல் இந்திய பெருங்கடலின் வட பகுதியில் ஆண்டுக்கு 3.3 மி.மீ., உயரம் அதிகரித்து காணப்படுகிறது. சமீபத்திய ஆய்வுகளும், இந்திய கடல் பகுதிகளில் கடல் நீர்மட்டம் உயர்ந்து வருவது தெரியவந்துள்ளது.செயற்கைக்கோள் மூலம் நடத்தப்பட்ட ஆய்வுகளில், 1993- 2020 காலகட்டத்தில் சென்னை- 4.31 மி.மீ.,மும்பை- 4.59 மி.மீ.மர்மகோவா -4.10 மி.மீ., கொச்சி -4.10 மி.மீ.,விசாகப்பட்டினம்- 4.27 மி.மீ.,பிரதீப் -4.43 மி.மீ., ஆண்டுதோறும் அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் ஜிதேந்தர் சிங் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
டிச 19, 2024 10:22

இறைவா கடல் மட்டத்தை சீக்கிரமாக உயர்த்தி சுடுகாடாக மாறிய கடற்கரையை மீண்டும் கடற்கரையாக மாற்ற கடலுக்கு சக்தியை கொடுக்கவும் உன் அருளாலே உன் பாதம் பணிந்து வணங்கி கேட்டு கொள்கிறேன்.


சிட்டுக்குருவி
டிச 19, 2024 03:12

இதற்க்கு பெரிய ஆராய்சியெல்லாம் எதற்க்கு.ராமர் பாலம் கட்டியது நீர்மட்டளவு.அந்த பாளத்திற்கு மேலுள்ள நீர்மட்டமெல்லாம் அதற்கப்புறம் உயர்ந்தவையே.பாலத்திற்கு மேலுள்ள நீர் வுயரத்தை ராமர் ராவண பொருக்குபிந்தய வருடங்களால் வகுத்து பாருங்கள்.சராசரி வருடாந்திர உயர்வு தெரியும்.இதை உங்கள் ஆராய்ச்சி முடிவுடன் சரிபார்த்துகொள்ளுங்கள்.


ديفيد رافائيل
டிச 18, 2024 22:03

கண்டிப்பா ஒரு காலத்தில் சென்னை கடலுக்கடியில் தான் இருக்கும். இது கண்டிப்பா நடக்கும்.


Murugesan
டிச 18, 2024 21:54

ஆண்டவா சீக்கிரமாக கடல் மட்டத்தை உயர்த்தி தமிழகத்தை கொள்ளையடித்து தனது குடும்பத்தை உலக பணக்காராக்கிய திருட்டு தலைவனின் சாமதியை கொஞ்சம் கவணி


Vasahar Kanjayan
டிச 19, 2024 02:00

உ ர் ரைட் அண்ட் Correct


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை