உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராகுல் வீட்டில் இண்டி கூட்டணி தலைவர்கள் ஆலோசனை

ராகுல் வீட்டில் இண்டி கூட்டணி தலைவர்கள் ஆலோசனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி; லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வீட்டில் இண்டி கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.டில்லியில் இன்று நிருபர்களை சந்தித்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், கர்நாடகா வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள், போலி முகவரிகள் என மோசடி நடந்தது குறித்தும், தகுதி வாய்ந்தவர்கள் நீக்கப்பட்டதுடன், தகுதிஇல்லாதவர்களும் சேர்க்கப்பட்டதாக புகார் தெரிவித்து இருந்தார். இதனை தேர்தல் கமிஷன் மறுத்துஇருந்ததுஇந்நிலையில், டில்லியில் ராகுல் வீட்டில் 'இண்டி' கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா,காங்கிரஸ் தலைவர் கார்கே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்,சிவசேனா வின் உத்தவ் தாக்கரே,தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்,திமுக எம்பி திருச்சி சிவா, திரிணமுல் காங்கிரசின் அபிஷேக் பானர்ஜி, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிகர்நாடகா முதல்வர் சித்தராமையா, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்இந்த கூட்டம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி., கவுரவ் கோகாய் கூறுகையில், இண்டி கூட்டணி தலைவர்கள் மற்றும் பல்வேறு மாநில முதல்வர்களை தனது வீட்டுக்கு ராகுல் கலந்துரையாட அழைப்பு விடுத்தார். இதில் 24 கட்சிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். நேர்மறையான சூழலில் பேச்சுவார்த்தை நடந்தது. பொது மக்களின் நலன் மற்றும் தேச நலன் சார்ந்து பார்லிமென்டில் அரசை கேள்வி எழுப்பப்பட்டது. இது குறித்து கலந்துரையாடல் நடந்தது. போலி வாக்காளர் பட்டியல் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் ராகுல் பேசினார்.பல்வேறு கட்சி தலைவர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர். இது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. பத்திரிகையாளர் சந்திப்பில் காட்டிய ஆதாரங்களை இங்கு ராகுல் பகிர்ந்து கொண்டார். இவ்வாறு அவர் கூறினார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி .ராஜா கூறியதாவது: வரும் 11ம் தேதி தேர்தல் கமிஷன் அலுவலகம் நோக்கி பார்லிமென்டில் இருந்து பேரணி நடக்கும் என தெரிவித்துள்ளனர். இண்டி கூட்டணி தலைவர்கள் கூட்டத்துக்கு ராகுல் முதல்முறையாக அழைப்பு விடுத்துள்ளார். கூட்டணி கட்சி தலைவர்களுடன் நடந்த கலந்துரையாடியதை வரவேற்கிறோம். இன்றைய கூட்டம் ஆக்கப்பூர்வமானதாக இருந்தது. வாக்காளர்பட்டியல் சிறப்பு திருத்தப்பணி, தேர்தல் கமிஷன் செயல்பாடு, வாக்காளர் பட்டியலில் நடக்கும் குளறுபடிகள் குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது. கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிராவில் நடந்த குளறுபடிகள் குறித்து ராகுல் விளக்கினார். பீஹாரில் இன்று நடந்தது, நாடுமுழுதும் நடக்க வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்தார். இது தீவிரமான விஷயம். நாட்டின் ஜனநாயகத்துக்கு ஏற்பட்ட சவால். இதனை கேட்ட தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Subburamu Krishnasamy
ஆக 08, 2025 12:21

It is an antinationals meet.


Kasimani Baskaran
ஆக 08, 2025 04:08

பலர் வெளிவந்தபின்னரும் கூட ஹிந்தி கூட்டணி இருக்கிறது என்பதை நம்பித்தான் ஆகவேண்டும். நம்பாதவன் ரத்தம் கக்கிச் சாவான்.


தாமரை மலர்கிறது
ஆக 08, 2025 00:52

தேர்தல் கமிஷனுக்கு எதிராக ஆதாரங்கள் காட்டுகிறேன் என்று ராகுல் பொய் சொல்லிக்கொண்டு திரிகிறார். தேர்தல் கமிஷன் கொடுக்காத இவரே ஏதோ ஒரு தகவலை காட்டி, அங்கு என்பது பேர் தங்கி உள்ளார்கள் என்று கதை உடுகிறார். இவர் காட்டும் ஆதாரங்களை கோர்ட் குப்பை தொட்டியில் கடாசிவிடும் என்ற அச்சத்தில் தானே, கோர்ட்டுக்கு போகவில்லை. ஸ்டாலினை பார்த்து பொய் பேசுவதற்கு கற்றுக்கொண்டுவிட்டார். பொய் சொல்வதற்கு ஆஸ்கார் அவார்டு கொடுக்க வேண்டும் என்றால், அது ராகுலுக்கு தான். ட்ரம்பை மிஞ்சிவிட்டார். முடிந்தால், கோர்ட்டுக்கு போய் ஜெயிச்சு காட்டு. இல்லையெனில் பொய் சொல்வதை ராகுல் நிறுத்த வேண்டும். ஜனநாயகத்தை கேலி கூத்தாக்கும் ராகுலுக்கு தூக்கு தண்டனை கூட குறைவான தண்டனை தான்.


M Ramachandran
ஆக 07, 2025 23:55

துரோகி நாடுகளுடன் கை கோர்க்கும் அயல் நாட்டுத்தூதுவர்கள் கூட்டம்.


GMM
ஆக 07, 2025 22:34

வாக்காளர் பெயர் வீடு வீடாக சென்று முன்பு சேர்த்தது மாநில ஊழியர்கள். தேர்தல் ஆணையம் பயிற்சி கொடுத்து தேர்தல் நடத்துவதும் மாநில அரசு ஊழியர்கள். முன் கள பணியாளர்கள் மாநில அரசு ஊழியர்கள். மாநில அரசின் ஊழியர்கள் உதவி இல்லாமல் ராகுல் கூறும் புகார் தோன்றாது. தேர்தல் ஆணையம், மத்திய அரசு நேரடி பங்கு கொள்ளாது? ராகுல் இதனையும் ஆலோசிக்கவும்.


Bala
ஆக 07, 2025 22:20

Height of imperialist approach by the so called prince.


Ramesh Sargam
ஆக 07, 2025 22:14

அங்கு கூடியிருந்த பல கூட்டணி தலைவர்கள் ராகுல் பேசினப்புறம் மொத்தமா ஒரு மாதிரி, அதாவது ஏதோ பித்து பிடித்ததுபோல ஆயிட்டாங்களாம்.


Ramesh Sargam
ஆக 07, 2025 22:12

அட இன்னும் அந்த இண்டி கூட்டணி இருக்குதா? நான் அது மொத்தமா போச்சுன்னு நெனெச்சேன்.


Murugesan
ஆக 07, 2025 21:39

ஊரைக்கொள்ளையடித்து ஊழல் பணத்தில வாழுகின்ற கேவலமான அயோக்கிய ஸ் அமெரிக்க பாக்கிஸ்தான் நாட்டு கைக்கூலி அயோக்கியர்கள் இவனனுங்க தாய் நாட்டிற்கு எதிராக, சீக்கிரமாக நாசமாக போவானுங்க


KRISHNAN R
ஆக 07, 2025 21:38

ஆக... .. நல்லவர் வாழ்க


A viswanathan
ஆக 08, 2025 00:27

பிஸ்கெட் டும் டீ யும் குடித்து கொண்டு வருவார்கள்.