உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராணுவத்திற்கு அதிக செலவு செய்யும் நாடுகளில் இந்தியா 5வது இடம்; இதோ பட்டியல்!

ராணுவத்திற்கு அதிக செலவு செய்யும் நாடுகளில் இந்தியா 5வது இடம்; இதோ பட்டியல்!

புதுடில்லி: ராணுவத்திற்கு அதிக செலவு செய்யும் நாடுகள் பட்டியலில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தானை விட 9 மடங்கு அதிகமாக இந்தியா செலவு செய்கிறது.காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடந்துள்ளது. அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு, பயங்கரவாதிகளுக்கு தக்க பாடம் புகட்ட இந்தியா ராணுவம் தயாராக உள்ளது. இந்ந சூழலில் , ஸ்டாக்ஹோம் சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம் ராணுவத்திற்கு பல்வேறு நாடுகள் செலவிடும் ரூபாய்கள் குறித்து தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=18b91zv3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ராணுவத்தில் அதிக பணம் செலவிடும் 'டாப் 10' நாடுகள் விபரம் பின்வருமாறு:1. அமெரிக்கா - 997 பில்லியன் டாலர்கள்2. சீனா- 314 பில்லியன் டாலர்கள்3. ரஷ்யா- 149 பில்லியன் டாலர்கள் 4. ஜெர்மனி- 88 பில்லியன் டாலர்கள்5. இந்தியா- 86 பில்லியன் டாலர்கள்6. இங்கிலாந்து- 82 பில்லியன் டாலர்கள்7. சவுதி அரேபியா- 80 பில்லியன் டாலர்கள்8. உக்ரைன்- 65 பில்லியன் டாலர்கள்9.பிரான்ஸ்- 65 பில்லியன் டாலர்கள்10. ஜப்பான்- 55 பில்லியன் டாலர்கள்(குறிப்பு: ஒரு பில்லியன் டாலர் மதிப்பு இந்திய ரூபாய் படி ரூ.8 ஆயிரத்தி 520 கோடி ஆகும்)அதேநேரம் பாகிஸ்தான் வெறும் 10 பில்லியன் ராணுவ செலவுடன் 29வது இடத்தில் உள்ளது. இந்திய ராணுவம் பாகிஸ்தானை விட பன்மடங்கு பலம் வாய்ந்தது என்பதை இந்த பட்டியல் எடுத்துரைக்கிறது. இந்திய ராணுவத்திற்கான வருடாந்திர செலவு கடந்த ஆண்டு 86 பில்லியன் டாலர்கள், அதாவது ரூ.7 லட்சத்தி 32 ஆயிரத்தி 658 கோடி ஆகும். பாகிஸ்தானை விட 9 மடங்கு அதிகமாக இந்தியா செலவு செய்கிறது.ராணுவத்திற்கு அதிகம் செலவிடும் நாடுகள் பட்டியலில் 2வது இடத்தில் இருக்கும் சீனா, கடந்த 2024ம் ஆண்டில் 314 பில்லியன் டாலர்கள் நிதி ஒதுக்கி உள்ளது. இது கடந்த 2023ம் ஆண்டை விட 7 சதவீதம் அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

N Sasikumar Yadhav
ஏப் 30, 2025 03:34

பயங்கரவாத இசுலாம் மட்டும் இல்லாமலிருந்தால் இவ்வளவு பணமும் வளர்ச்சி திட்டங்களுக்கு உதவும்


VSMani
ஏப் 29, 2025 16:13

இந்திய ராணுவம் பாகிஸ்தானை விட பன்மடங்கு பலம் வாய்ந்தது என்றால் எப்படி தீவிரவாதிகள் நம் நாட்டிற்குள் நுழைந்து அப்பாவி உயிர்களை கொல்கிறார்கள் ?


Kumar Kumzi
ஏப் 29, 2025 16:35

முரசொலி படிக்கும் ஓசிகோட்டர் கொத்தடிமையின் அறிவு வேறு எப்படி இருக்கும்


Rajah
ஏப் 29, 2025 18:12

உங்களை போன்றவர்களின் உதவியுடன் வருவதால்தான் தடுக்க முடியவில்லை. அவர்களை தடுப்பதற்கு முன்னர் உங்களை போன்றவர்களை களை எடுக்க வேண்டும்.


Bhakt
ஏப் 29, 2025 19:45

அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் எப்படி சம்பந்தம் இல்லையோ அப்படித்தான் அறிவிக்கும் அறிவாலயத்துக்கும் சம்பந்தம் இல்லை.


Murthy
ஏப் 29, 2025 15:05

பாதிப்பணம் ஊழல் அதனால் இவர்கள் சொல்லும் பணத்தில் பாதிதான் உண்மையாக செலவுசெய்யப்படுகிறது.


M R Radha
ஏப் 29, 2025 18:23

அது மௌன மோகன் சிங் ஆட்சியில் அதாவது திருட்டு த்ரவிஷன்கள் உள்ளேயே இருந்து லட்சம் கோடி ஊழல்களில் கொடி கட்டி பறந்த போது அப்படி நடந்திருக்கலாம்


J.Isaac
ஏப் 29, 2025 19:13

ராதா அவர்களே இத்தனை கோடி செலவழித்தாலும், நவீன தொழில் நுட்பம் நிறைந்த இந்த காலத்தில் நாலு பேர் உள்ளே வந்து 26 அப்பாவி ஜனங்களை கொலை செய்துவிட்டார்களே


சமீபத்திய செய்தி