உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்திய செமி கண்டக்டர் சிப் உலகில் மாற்றத்தை ஏற்படுத்தும்: பிரதமர் மோடி உறுதி

இந்திய செமி கண்டக்டர் சிப் உலகில் மாற்றத்தை ஏற்படுத்தும்: பிரதமர் மோடி உறுதி

புதுடில்லி: ''இந்தியாவில் தயாரிக்கப்படும் மிகச்சிறிய சிப் உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்'' என பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்தியா முதல்முறையாக செமிகண்டக்டர் சிப்களை தயாரிக்கும் பணியை தொடங்கி உள்ளது. இதற்கு முன்னதாக சிப்களை இந்தியா உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வந்தது. மத்திய அரசின் முயற்சியால் இந்தியாவிலேயே சிப் தயாரிக்கும் தொடங்கப்பட்டுள்ளது.இன்று (செப் 02) டில்லியில் நடந்த செமிகண்டக்டர் தொடர்பான மாநாட்டில், இஸ்ரோவின் செமிகண்டக்டர் ஆய்வகம் தயாரித்த விக்ரம் என பெயரிடப்பட்ட 32 பிட் சிப்-ஐ மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட அதனை பிரதமர் மோடி பெற்றுக்கொண்டார்.மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: நான் ஜப்பான் மற்றும் சீனாவுக்கு சென்றுவிட்டு நேற்று இரவு தான் திரும்பி வந்தேன். அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களை விரைவில் தொடங்குவோம். இந்தியா அரிய கனிமங்களுக்கான தேவையை பூர்த்தி செய்ய உறுதிபூண்டுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் மிகச்சிறிய சிப் உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இதற்கான நாள் வெகு தொலைவில் இல்லை. செமிகண்டக்டர் திட்டங்களில் 18 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது. உலகம் இந்தியாவை நம்புகிறது. கடுமையான சவால்கள் இருந்த போதிலும் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவீதம் வளர்ச்சி அடைந்து உள்ளது. 2023ம் ஆண்டில் இந்தியாவின் முதல் செமிகண்டக்டர் உற்பத்தி ஆலைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த துறையில் இந்தியாவின் வளர்ச்சியை உலகம் உன்னிப்பாக கவனிக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

ManiMurugan Murugan
செப் 03, 2025 00:26

அருமை இந்தியாவில் தான் முதன்முதலில் பங்கா முறை அதைப் பார்த்து தான் மின்சார விசிறி வந்தது என்பார்கள் நமது முன்னோர்களின் கண்டுபிடிப்புகள் பல திருத்தப்பட்ட து என்பார்கள் அது பல செய்திகளை படிக்கும் போது கேட்கும் போது உண்மை என்று தோன்றும் கேரளாவில் இன்றும் கரித்துள் இறுக்கி வெடிபடபோடுவார்கள் அதனைப் பார்க்கும் போது எவ்வளவு யோசித்து உள்ளார்கள் அதுப் போல் பலத்துறையில் பாரதம் வளர்ச்சி அடையவேண்டும்


Sankar Ramu
செப் 02, 2025 17:05

பொய்யான முதலீட்டுக்காக வெளி நாடு சென்றால் ஒரு வாரம் ரெஸ்ட் எடுக்கும் முதல்வர் எங்க, மறு நாளே உழைக்கும் பிரதமர் மோடி எங்கே? வாழ்க பாரத பிரதமர்.


Thravisham
செப் 02, 2025 20:31

மோடிதான் உண்மையான மகாத்மா.


Vasan
செப் 02, 2025 16:24

Chips manufacturing is not new to Tamilnadu. Already there are several manufacturing units who manufacture various types of chips, some salty, some spicy, made of potato, banana, etc. TN rising


vivek
செப் 02, 2025 17:42

and finally all goes to tasmac


நாஞ்சில் நாடோடி
செப் 02, 2025 15:14

வாழ்க பாரதம்...


Palanisamy Sekar
செப் 02, 2025 14:37

ஒரு இந்தியன் என்கிற முறையில் இவ்வளவு காலம் காங்கிரசின் ஆட்சியை கண்டிருந்த என்போன்றோருக்கும் மோடிஜியின் அயராத உழைப்பும் நாட்டை சீர்தூக்கி உலக அரங்கில் முதன்மை நாடாக திகழ அவர் உழைக்கின்ற உழைப்பு இந்த நாடே மோடிஜிக்கு கடன் பட்டுள்ளது. எப்படித்தான் இவ்வளவு தூரம் பயணித்தும் கூட சோர்வடையாது தேசப்பணியினை செய்கின்றாரோ தெரியவில்லை. இப்படி ஒருவர் பாரத நாட்டிற்கு கிடைத்ததற்கு நம் நாடு புண்ணியம் செய்திருக்கவேண்டும். பல்வேறு விமர்சனங்களையெல்லாம் புறந்தள்ளிவிட்டு நாட்டை முன்னேற்ற உழைக்கின்ற உழைப்புக்கு இந்த தேசத்து மக்கள் என்றென்றும் போற்றுவார்கள். ஒவ்வோர் செயலும் அற்புதம் அருமை கேட்க படிக்க அவ்ளோ மகிழ்ச்சி.


MUTHU
செப் 02, 2025 17:33

பழனிசாமி சேகர். காங்கிரஸ் அரசு நாட்டிற்கு செய்த துரோகங்களில் இதுவும் ஒன்று. 1990 களில் சாப்ட்வேர் தயாரிப்பில் இந்தியர்கள் கோலோச்ச துவங்கிய காலங்களில் ஹார்ட்வர் டங்கள் ஒப்பந்தந்தில் கையெழுத்திட்ட மண்ணு சிங்க்கு அனைத்து ஹார்ட்வர் பொருட்களும் நேரடி இறக்குமதி என்று அறிவித்தார். அடிமைச்சிந்தனை படைத்த இந்தியர்கள் அன்னிய பொருட்களை வாங்குவதே கெளரவம் என்று நினைத்து மின்னணு பொருட்களை நேரடியாய் பெற ஆரம்பித்தனர். சீனாவின் எழுச்சியினால் இந்தியா இதில் பின்தங்க ஆரம்பித்தது. ஊழலினால் ஒவ்வொரு மாநிலத்திழும் அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டன. அதன் பின்பே இந்தியா இந்த துறையில் மங்க ஆரம்பித்தது.


திகழ்ஓவியன்
செப் 02, 2025 14:10

அதனால் தான் தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய செமி கண்டக்டர் இண்டஸ்ட்ரி குஜராத்துக்கு மாற்றம் , இதில் மோடி தனிப்பட்ட முறையில் இறங்கி நடவடிக்கை எடுத்துள்ளார் , ஒரே நாடு கதி இது தான்


vivek
செப் 02, 2025 14:45

கமிஷன் கேட்டாயா .


Shekar
செப் 02, 2025 15:03

நமக்கு கட்டிங் தரவில்லை என்றால் உடனே நம்ம அல்லக்கைகள் ஐயோ அம்மா சுற்றுச்சூலுக்கு ஆபத்து உடனே தொழிற்சாலையை மூடு அப்படின்னு கிளம்பி வரும். இங்கு நடக்கும் கூத்துகளை பார்த்து எந்த ஒரு கம்பனியும் பயந்து அடுத்த மாநிலங்கள் தேடி ஓடிவிடும்


ஆரூர் ரங்
செப் 02, 2025 15:51

சாம்சங் பட்டபாடு எல்லா மின்னணு நிறுவனங்களுக்கும் தெரியும்.


Sankar Ramu
செப் 02, 2025 17:03

ஏன் பொய் முதல்வரின் முதலீடு வரவில்லையா?


ASIATIC RAMESH
செப் 02, 2025 13:25

வாழ்த்துக்கள்... முடிந்தவரை தற்சார்பு திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்துங்கள். நன்றி.


புதிய வீடியோ