உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜார்க்கண்டில் இண்டியா கூட்டணி முறிந்தது: கம்யூ., தனித்து போட்டி

ஜார்க்கண்டில் இண்டியா கூட்டணி முறிந்தது: கம்யூ., தனித்து போட்டி

ராஞ்சி: ஜார்க்கண்டில், கேட்ட தொகுதிகள் தராததால், அங்கு ' இண்டியா' கூட்டணியில் இருந்து வெளியேறிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனித்து களமிறங்கி உள்ளது.தேசிய அளவில் பா.ஜ.,வுக்கு மாற்றாக 'இண்டியா' கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இதில், காங்கிரஸ், தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூ., இந்திய கம்யூ., ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகள் உள்ளன.ஜார்க்கண்ட் சட்டசபைக்கு நவ.,13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில்,மொத்தமுள்ள 81 தொகுதிகளில் இண்டியா கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகள் 70 தொகுதிகளை எடுத்துக் கொண்டன. எஞ்சிய 11 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கின. இதற்கு கூட்டணி கட்சிகள் இடையே அதிருப்தி எழுந்தது. அங்கு தனித்து போட்டியிடுவோம் என லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூறியிருந்து.இந்நிலையில், ஜார்க்கண்டில் 'இண்டியா' கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 15 தொகுதிகளில் தனித்து போட்டியிட போவதாக அறிவித்துள்ளது. எந்தெந்த தொகுதிகளில் போட்டி, வேட்பாளர் பட்டியலையும் அக்கட்சி அறிவித்துள்ளது.இது தொடர்பாக அக்கட்சியினர் கூறுகையில், '' நாங்கள் 'இண்டியா' கூட்டணியில் இடம்பெற்று இருந்தோம். தொகுதிகள் குறித்து காங்கிரஸ் மற்றும் ஜேஎம்எம் கட்சிகளின் மூத்த தலைவர்களிடம் பேசினோம். அவர்கள் எங்களுக்கு பல வாக்குறுதிகள் அளித்தனர். ஆனால், ஏமாற்றம் தான் மிஞ்சியது. எனவே தனித்து களமிறங்கி உள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

பேசும் தமிழன்
அக் 23, 2024 08:01

இண்டி கூட்டணி என்று எழுதுங்கள்.. இண்டியா கூட்டணி எப்படி வரும் ??அவர்கள் தான் நாட்டை...நாட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள் என்றால் ....அதற்க்கு துணை போகலாமா ??? உண்மையான பெயரை தானே பிரசுரிக்க வேண்டும் !!!!


Raman
அக் 23, 2024 08:01

கம்யூனிஸ்ட்ஸ தேசத்துரோகிங்கதானே - எங்கிருந்தாலும் ஒண்ணுதான்.


பேசும் தமிழன்
அக் 23, 2024 07:56

இந்தி கூட்டணி என்பதே ஏமாற்று வேலை தான்..... இவர்களுக்கு எந்த கொள்கையும் கிடையாது.... இவர்களின் ஒரே நோக்கம்..... நாட்டை கொள்ளை அடிப்பது மட்டுமெ !!!


Kumar Kumzi
அக் 23, 2024 07:25

நொண்டி கூட்டணியின் லட்சணம் இது தான் பதவி கிடைக்கவில்லை என்றால் நாட்டையும் காட்டி கொடுக்க தயங்க மாட்டானுங்க


Mani . V
அக் 23, 2024 05:45

பிரதமர், ஜனாதிபதி கனவு அவ்வளவுதானா?


தாமரை மலர்கிறது
அக் 23, 2024 01:56

மஹாராஷ்டிராவிலும் இண்டி கூட்டணி விரைவில் கலைந்துவிடும்.


Narayanan Sa
அக் 22, 2024 22:22

இது போல எல்லா மாநிலங்களிலும் நடக்கும்


Ramona
அக் 22, 2024 21:35

அது இண்டி கூட்டணி தானே, எப்படி இந்தியா கூட்டணி ஆகிறது..


Kumaravelan
அக் 22, 2024 22:09

INDI KOOTTANI


vadivelu
அக் 23, 2024 06:46

மாறுபட்டுள்ள கொள்கை, கருத்து கொண்டுள்ள கட்சிகளின் கலக்கல் , இது ஒரு மேலும் கலங்கிய கூவம்