உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஐசியூவுக்கு மாற்றப்படும் ஆபத்தான நிலையில் இண்டியா கூட்டணி: உமர் அப்துல்லா

ஐசியூவுக்கு மாற்றப்படும் ஆபத்தான நிலையில் இண்டியா கூட்டணி: உமர் அப்துல்லா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இண்டியா கூட்டணி, ஆபத்தான நிலையில் உள்ளது, மேலும் ஐசியூவுக்கு மாற்றப்படக்கூடிய அபாயத்தில் உள்ளது என்று ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.டில்லியில் இன்று நடைபெற்ற ஆங்கில நாளிதழ் தலைமைத்துவ மாநாட்டில் உமர் அப்துல்லா பேசியதாவது:கூட்டணியில் உள்ள உட்பூசல்கள், பாஜவின் தொடர்ச்சியான தேர்தல் முயற்சிகளுக்கு ஈடு கொடுக்க முடியாததால், இண்டியா கூட்டணி ஆபத்தான நிலையில் இருக்கிறது, அது அவசர சிகிச்சை பிரிவான ஐசியூவுக்கு மாற்றப்படக்கூடிய ஆபத்தில் உள்ளது.இண்டியா கூட்டணியில் அமைப்பு ரீதியான, தொடர் தோல்விகளை சுட்டிக்காட்டுவது அவசியமாகிறது. இந்த தொடர் தோல்விக்கு, பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு திரும்பியது, பீஹாரில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜேஎம்எம்) தொகுதி பங்கீட்டில் விலக்கப்பட்டது ஆகிய நடவடிக்கைகள் இண்டியா கூட்டணிக்குள் முக்கிய பிரச்னையாக இருந்தது. பாஜவில் வலுவான உழைக்கும் நெறிமுறைகள் இருக்கிறது. அந்த வேகத்துடன் பாஜ ஒவ்வொரு தேர்தலிலும் உறுதியுடன் போட்டியிடுகிறது. அதேவேளையில் இண்டியா கூட்டணியில் கட்சிகள் சில சமயங்களில் அலட்சியமாக செயல்படுவது தெரியவருகிறது.இவ்வாறு உமர் அப்துல்லா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

KRISHNAN R
டிச 06, 2025 22:12

நல்லவர்கள் கூட்டணி


Ramesh Sargam
டிச 06, 2025 21:06

இண்டியா கூட்டணி already ventilator உதவியுடன் சுவாசிக்கிறது. Ventilator ஐ எடுத்துவிட்டால், ஆட்டம் கிளோஸ்.


Priyan Vadanad
டிச 06, 2025 20:12

தற்போதைக்கு இந்தியாவுக்கு கட்சி சார்பில்லாமல் நமது பிரதமர் தலைமை வேண்டும். தனிப்பட்ட மாநிலத்துக்கு மாநில கட்சித் தலைமை மட்டுமே வேண்டும்.


Priyan Vadanad
டிச 06, 2025 20:05

இவர் சொன்னது தவறு அரைகுறை உயிரோடு சவப்பெட்டிக்குள் அதுவாகவே போய் படுத்துவிட்டது. யாராவது ஆணி அடிக்கவேண்டியதுதான் பாக்கி. 2026 தமிழ்நாடு தேர்தலுடன் சோலி முடிச்சிடும்.


M S RAGHUNATHAN
டிச 06, 2025 21:00

INDI GO


சிட்டுக்குருவி
டிச 06, 2025 20:04

அது எப்போதோ நிரந்தர கோமா நிலையை அடைந்துவிட்டது .இனி தேறுவது கடினமே .


Sowdarpatti Rayarpadi Ramaswamy
டிச 06, 2025 19:46

தமிழ்நாட்டில் மட்டும் நேர்மாறாக இண்டி கூட்டணி வலுவாக உள்ளது. கூட்டணியாக இல்லை திமுக தயவில் உள்ளது என்பதுதான் உண்மை. திமுகவும் அந்த காலத்து லல்லு, முலாயம் சிங் யாதவ், மாயாவதி போன்ற காட்டாட்சி முறையில் இன்று செயல்படுவது NDA வை ஆட்சிக்கு கொண்டுவரும்.


புதிய வீடியோ