உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியா - சீனா உறவு மேம்பட்டுள்ளது: ஜெய்சங்கர்

இந்தியா - சீனா உறவு மேம்பட்டுள்ளது: ஜெய்சங்கர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' 2020ம் ஆண்டுக்கு பிறகு, சமீபத்தில் இந்தியா - சீனா இடையிலான உறவு மேம்பட்டு உள்ளது, '' என லோக்சபாவில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.கடந்த 2020ம் ஆண்டு லடாக் எல்லையில் இந்தியா- சீன வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அங்கு இரு நாட்டு ராணுவ வீரர்களும் குவிக்கப்பட்டனர். இதனால், இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் பதற்றம் நிலவிவந்தது. தொடர்ந்து இரு நாட்டு அதிகாரிகளும் பேச்சு நடத்தி வந்த நிலையில், சுமூக முடிவு ஏற்பட்டு வீரர்கள் வாபஸ் பெறப்பட்டனர்.இந்நிலையில் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு குறித்து லோக்சபாவில் ஜெய்சங்கர் அளித்த விளக்கம்: சமீபத்தில் இந்தியா - சீனா இடையிலான உறவு மேம்பட்டு உள்ளது.தூதரக ரீதியில் நடந்து வந்த தொடர் பேச்சுவார்த்தை காரணமாக, நமது உறவில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. எல்லைப் பிரச்னைக்கு நேர்மையான, சுமூகமான மற்றும் இரு தரப்பும் சுமூகமாக ஏற்றுக் கொள்ளும் முடிவை எடுப்பதற்கு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட இந்தியா உறுதிபூண்டுள்ளது. எல்லையில் சீனப்படைகள் குவிக்கப்பட்ட காலத்தில், கடினமான சூழ்நிலையிலும், கோவிட் சவாலுக்கு மத்தியிலும் இந்திய ஆயுதப்படையினர் உடனடியாகவும், விரைவாகவும் பணியாற்றினர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Barakat Ali
டிச 03, 2024 19:58

கடந்த ஒரு வருடத்தில் "இந்தியா சீனா இடையே உறவு மிகவும் மோசமடைந்துள்ளது" என மூன்று முறை சொன்னீர்கள் .....


அப்பாவி
டிச 04, 2024 08:40

அதுவா... அது வேற வாயி


Anantharaman Srinivasan
டிச 03, 2024 19:28

சுமூக உறவு உறவு என்று ஏட்டில் எழுதிவைப்போம்.... நடைமுறையில் பிணக்கு...


இறைவி
டிச 03, 2024 17:58

உண்மைதான். காப்பர் என்கிற செப்பு உலோகத்தை இந்தியா ஏற்றுமதி செய்த காலம் போய் சீனாவிடம் இறக்குமதி செய்ய வேண்டிய இடத்திற்கு இந்தியாவை தள்ளியது யாரப்பா? தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் இயற்கையை அழிக்கிறது என்று பொய் பரப்பி, அனுப்பி ஆயிற்று ஆனால் அதே தூத்துக்குடியில் தமிழ் நாடு மின்சார வாரியமும், உர தொழிற்சலைகளும் செய்யாத பாதிப்பையா ஸ்டெர்லைட் செய்து விட்டது. சீனாவிடம் காசு வாங்கிய கும்பல் இன்று இறக்குமதி அதிகம் என்று கருத்து போடுகிறது.


அப்பாவி
டிச 03, 2024 17:09

இருக்காதா பின்னே. சீன இறக்குமதியை அதிகமாக்கிட்டே இருக்கம்ல.


Sakthi,sivagangai
டிச 03, 2024 17:40

எப்படியாச்சும் நீ அந்த பாஞ்சி லட்சத்தை வாங்கிரு..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை