உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவின் விண்வெளி பயணத்தில் பெருமைமிக்க மைல்கல்; பிரதமர் மோடி பாராட்டு

இந்தியாவின் விண்வெளி பயணத்தில் பெருமைமிக்க மைல்கல்; பிரதமர் மோடி பாராட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நமது நிருபர்

'புளூபேர்ட் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது, இந்தியாவின் விண்வெளி பயணத்தில் ஒரு பெருமைமிக்க மைல்கல்' என இஸ்ரோ விஞ்ஞானிகளை பிரதமர் மோடி பாராட்டி உள்ளார்.ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று (டிசம்பர் 24) காலை 8.54 மணிக்கு எல்.வி.எம்., 3 ராக்கெட் வாயிலாக, 'புளூபேர்ட்' செயற்கைக்கோள் விண்ணில் பாய்ந்தது. திட்டமிட்டப்படி துல்லியாக நிலை நிறுத்தப்பட்டது என இஸ்ரோ தெரிவித்தது.இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கை: இந்திய விண்வெளித் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம். இந்திய மண்ணிலிருந்து ஏவப்பட்ட மிகப்பெரிய செயற்கைக்கோளான அமெரிக்காவின் 'புளூபேர்ட்' LVM3-M6 ராக்கெட் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் ஒரு பெருமைமிக்க மைல்கல்லைக் குறிக்கிறது. வணிக ரீதியில் ராக்கெட்டுகளை ஏவுவதில், உலக சந்தையில் முக்கிய இடத்தை இந்தியா பிடித்துள்ளது. வளர்ச்சி அடைந்த மற்றும் தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவை நோக்கிய நமது முயற்சிகளின் பிரதிபலிப்பாகும். நமது கடின உழைப்பாளிகளான விண்வெளி விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு வாழ்த்துக்கள். விண்வெளி உலகில் இந்தியா தொடர்ந்து உயர்ந்து வருகிறது.இந்திய இளைஞர்களால் இயக்கப்படும் நமது விண்வெளித் திட்டம் மிகவும் மேம்பட்டதாகவும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் மாறி வருகிறது. எல்.வி.எம்., 3 ராக்கெட் செயல்திறனை வெளிப்படுத்துவது வாயிலாக, ககன்யான் போன்ற எதிர்காலப் பணிகளுக்கான அடித்தளங்களை வலுப்படுத்துகிறோம். வணிக ஏவுதள சேவைகளை விரிவுபடுத்துகிறோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

muthukrishnan Bagavathi
டிச 24, 2025 18:02

Hearty Congratulation to ISRO .... Yet another milestone in Indian Space Programs under PM Modi leadership ....


Harindra Prasad R
டிச 24, 2025 13:39

அமெரிக்கா சென்று சொம்பு துக்கலாமே ?


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 24, 2025 13:33

பலருக்கு ஜெலுசில் தேவைப்படும் .......


பாலாஜி
டிச 24, 2025 13:24

எப்போது சந்திர மண்டலத்தில் கால் பதிக்கப் போகிறார்?


vivek
டிச 24, 2025 14:32

நீ குடும்பதுடன் டாஸ்மாக் போகும்போது....


Raja k
டிச 24, 2025 12:19

அமெரிக்கா 77 டன் கொண்ட வின்வெளிநிலையத்தையே ஒரே உந்துதளில் விண்ணுக்கு அனுப்பி உள்ளது, ஆனால் இப்போதுதான் இந்தியா 6.1 டன் கொண்ட செயற்கைகோளை விண்ணுக்கு அனுப்புகிறது,


vivek
டிச 24, 2025 12:30

அப்போ நீ அமெரிக்கா போயிடு..நீ எங்களுக்கு தேவையில்லாத ஆணி...


venkat
டிச 24, 2025 16:09

தேச விரோத எண்ணம் எப்படி தோன்றுகிறது.. எப்படி அடுத்த தேசத்தை புகழ்ந்து தாய் நாட்டை தாழ்த்தி பார்க்க தோன்றுகிறது..


V RAMASWAMY
டிச 24, 2025 12:15

Hearty Congratulations ISRO Team and Bharat Government. This is called Model Government.


cpv s
டிச 24, 2025 12:05

jai shree ram


சமீபத்திய செய்தி