உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியா- இந்தோனேஷியா பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி ஒப்பந்தம் இறுதி கட்டம்

இந்தியா- இந்தோனேஷியா பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி ஒப்பந்தம் இறுதி கட்டம்

புதுடில்லி: இந்தியா - இந்தோனேஷியா இடையேயான பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி ஒப்பந்தப்பம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.ரஷ்யாவுடன் இணைந்து பிரம்மோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணையை இந்தியா வடிவமைத்து வருகிறது. இந்த அதிவேக ஏவுகணை 450 கி.மீ. தொலைக்கு சென்று எதிரி இலக்கை தாக்கும் திறன் பெற்றது.இதனை போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிகள், போர் விமானங்கள் மற்றும் நிலத்தில் இருந்து ஏவ முடியும். நம் ராணுவத்தின் முப்டைகளிலும் பிரம்மோஸ் செயல்பாட்டில் உள்ளது.இதையடுத்து இந்தியா- பிலிப்பைன்ஸ் இடையே 2022-ல் ரூ. 412 கோடியில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து முதற்கட்டமாக பிரம்மோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணையை இந்தியா பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு ஏற்றுமதி செய்தது.இந்நிலையில் இந்தியா - இந்தோனேஷியா இடையே 450 மில்லியன் டாலர் மதிப்பில் 'பிரம்மோஸ்' ஏவுகணைகளை வாங்கிட ஏற்கனவே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கான ஒப்பந்தம் நேற்று இறுதி கட்டத்தை எட்டியது. இது தொடர்பாக வரும் 26-ம் தேதியன்று டில்லியில் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இந்தோனேஷியா அதிபர் இந்தியா வருகிறார். அப்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

shanker
ஜன 17, 2025 07:48

450 மில்லியன் டாலர் என்பது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 36,000 கோடி ரூபாய் வருகிறது. இந்த தகவல் உண்மையாக இருக்குமா?


அப்பாவி
ஜன 16, 2025 11:56

சீனாவிடமிருந்து புல்லட் ட்ரெயின். ரஷ்யாவிடமிருந்து ஆயில். இந்தியாவிடமிருந்து ப்ரமோஸ். ப்ரிக்ஸ் அங்கத்தினர் நேத்திக்கி ஆயாச்சு. கனெக்ஷன் புரியுது கோவாலு.


அப்பாவி
ஜன 16, 2025 11:53

இதை வாங்குறதுக்கும் இந்தோனேஷியாவை BRICS ல ஃபுல் மெம்பரா முந்தாநாள் சேத்துக்கிட்டதுக்கும் தொடர்பு இருக்குமா கோவாலு?


Kasimani Baskaran
ஜன 16, 2025 07:51

சீனாவுடன் உரசலில் இருக்கும் பல நாடுகள் பிரமோஸ் வாங்கி வைத்து இருக்கிறார்கள். ஆனால் சீனா அமெரிக்காவிடம் பொருளாதார ரீதியாக மல்லுக்கட்டுவதில் கவனம் செலுத்தி வருகிறது.


Barakat Ali
ஜன 16, 2025 11:52

PLA வுக்கு போர்களில் ஈடுபட்ட அனுபவம் இல்லாமலிருக்கலாம் .... ஆனால் சீனாவுக்கு ராணுவ ரீதியில் அமெரிக்காவே கூட ஒரு பொருட்டல்ல ....


Kasimani Baskaran
ஜன 16, 2025 13:47

அடிப்படையில் 99% ஒரு பிள்ளை குடும்பம்.. ஆகவே போர் என்று வந்தால் முதலில் ஜுட் விடுவது அவர்களாகத்தான் இருக்கும். ஆகவே இராணுவ பலம் பயன் தராது.


கிஜன்
ஜன 16, 2025 02:59

இந்தோனேசியாவிற்கு எதிரிகள் என்று யாரும் இல்லை .... எதற்கு பிரமோஸ் வாங்குகிறார்கள் ? சமீபத்தில் தான் சீனாவுடன் புல்லட் ரயில் விட்டார்கள் ..... பிரமோசை ரிவர்ஸ் இன்ஜினியரிங் பண்ணவோ அல்லது நமக்கு வேண்டாத நாடுகளுக்கு கைமாற்றி விடவோ கூடாது .... நமது தொழில்நுட்பம் பலருக்கும் தெரிந்துவிடும் ....


சமீபத்திய செய்தி