உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியா தயாரித்து வரும் அக்னி-5 பதுங்கு குழியை அழிக்கும் ஏவுகணைகள்!

இந்தியா தயாரித்து வரும் அக்னி-5 பதுங்கு குழியை அழிக்கும் ஏவுகணைகள்!

புதுடில்லி: அக்னி-5 பதுங்கு குழியை அழிக்கும் ஏவுகணையை (பங்கர் பஸ்டர் ஏவுகணை) பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி. ஆர்.டி.ஓ.,) தயாரித்து வருகிறது. இந்த ஏவுகணை நிலத்தடியில் 80 முதல் 100 மீட்டர் ஆழம் வரை ஊடுருவிச் செல்லும் வகையில், வடிவமைக்கப்பட்டு உள்ளது. கடந்த ஜூன் 22ம் தேதி, ஈரானின் 3 அணுசக்தி நிலையங்களில் அமெரிக்கா இதுவரை பயன்படுத்தப் படாத ஜி.பி.யூ-57 பதுங்கு குழி அழிக்கும் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த பங்கர் பஸ்டர் குண்டு மீது அனைத்து உலக நாடுகளின் கவனமும் சென்றது. தற்போது உலக நாடுகள், சக்திவாய்ந்த புதிய ஏவுகணை அமைப்பை உருவாக்குவதன் மூலம் எதிர்கால போர்களுக்கு தயாராகி வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7orhuem4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 அந்த வகையில், அக்னி-5 பதுங்கு குழியை அழிக்கும் ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி. ஆர். டி. ஓ.,) தயாரித்து வருகிறது. இந்த ஏவுகணை நிலத்தடியில் 80 முதல் 100 மீட்டர் ஆழம் வரை ஊடுருவிச் செல்லும் வகையில், வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதன் சிறப்புகள் பின்வருமாறு:* 7,500 கிலோகிராம் எடையுள்ள பதுங்கு குழி அழிக்கும் ஏவுகணையை போர்க்கப்பலில் கொண்டு சென்று ஏவ முடியும்.* கான்கிரீட் அடுக்குகளுக்கு அடியில் புதைக்கப்பட்டிருக்கும் கடினமான எதிரி தளங்களைத் தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த ஏவுகணை, வெடிப்பதற்கு முன்பு 80 முதல் 100 மீட்டர் நிலத்தடியில் ஊடுருவும் திறன் கொண்டது.* அமெரிக்காவைப் போல, பெரிய, விலையுயர்ந்த குண்டுவீச்சு விமானங்களை விநியோகிப்பதற்கு பதிலாக, இந்தியா பதுங்கு குழிகளை தாக்கும் குண்டுகளை தயாரித்து வருகிறது.* ஏற்கனவே உள்ள அக்னி-5 ஏவுகணை 5,000 கிலோமீட்டர்கள் தூரம் வரை சென்று இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது.* அக்னி-5ன் இரண்டு புதிய வகைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஒன்று தரைக்கு மேலே உள்ள இலக்குகளை துல்லியமாக குறி வைத்து தாக்குதல் நடத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.* மற்றொன்று கடினமான நிலத்தடி உள்கட்டமைப்பில் துளையிட்டு தாக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ராமகிருஷ்ணன்
ஜூலை 01, 2025 06:52

பயங்கரவாதிகளுக்கு பதுங்குகுழி பாதுகாப்பானது என்ற எண்ணம் வராது. நல்லது. ராணுவத்தின் முன்னேற்றம் குற்றவாளிகளின் குற்ற செயல்களை பார்த்து மாற்றம் அடைவது தான்


SUBBU,MADURAI
ஜூலை 01, 2025 06:45

India is preparing to its most advanced indigenously developed hypersonic missile ET-LDHCM Extended Trajectory-Long Duration Hypersonic Cruise Missile under project Vishnu 1 Speed Mach 8 11000 km/h 2 Range 1500 km 3 Designed for both conventional and nuclear missions.


Kasimani Baskaran
ஜூலை 01, 2025 04:05

டிரோன்களை அழிக்கும் சிறப்பான தொழில் நுணுக்கம் தவிர இதுவும் இருப்பதால் இந்தியாவை போரில் எளிதாக வென்று விட முடியாது. விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள்...


R Barathan
ஜூன் 30, 2025 21:26

மிகவும் அருமையான தயாரிப்பு. நம் தேசத்திற்கு இப்போது இது மிகவும் அவசியம். இதேபோல் ஊழல் அரசியல் வாதிகளை அழிக்க ஒரு ஏவுகணை தயாரித்தால் நம் நாட்டிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


Ramesh Sargam
ஜூன் 30, 2025 20:23

சிறப்பு. வாழ்த்துக்கள். இதேபோன்று பதுங்கி பதுங்கி லஞ்சம் வாங்குபவர்களை கண்டறிந்து அழிக்க ஏதாவது ஒரு ஆயுதம் கண்டுபிடித்தால் நாட்டில் ஊழல் ஒழியும்.


SUBBU,MADURAI
ஜூன் 30, 2025 20:19

Brazil is interested in Indias Akash air defence system PM Modi set to sign major DEFENCE pacts with Brazil during his July 5–8 visit.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை