உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சர்வதேச விமான போக்குவரத்து துறையில் இந்தியாவின் பங்கு அபரிமிதம்: பிரதமர் மோடி பெருமிதம்

சர்வதேச விமான போக்குவரத்து துறையில் இந்தியாவின் பங்கு அபரிமிதம்: பிரதமர் மோடி பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சர்வதேச விமான போக்குவரத்து துறையில் இந்தியா முக்கிய பங்கு வகிப்பதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார்.சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் சார்பில் ஆண்டு விழாக் கூட்டம் புதுடில்லியில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது; உலக விமான போக்குவரத்து துறையில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. பூமியில் நகரங்களுக்கு மத்தியிலான பகுதிகளில் மட்டும் நமது பயணம் கட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கிறது.விண்வெளிக்கு பயணம் என்பதை வணிகமயமாக்கி அதை மனிதர்கள் பயணிக்கும் வண்ணம் மாற்ற வேண்டும் என்ற கனவில் மனிதர்கள் இருக்கின்றனர்.அதற்கு இன்னும் சிறிதுகாலம் இருக்கிறது என்பது உண்மையே. இந்த மாற்றம், புதுமைக்கான ஒரு பெரிய மாற்றமாகவும், விமான போக்குவரத்து எவ்வளவு பெரிதாக இருக்கும் என்பதையே காட்டுகிறது. அதை கட்டமைப்பதற்கான மூன்று வலுவான அம்சங்கள் நம்மிடம் உள்ளன. முதலாவதாக அதற்கான சந்தையும், மனிதவளமும் புதுமையை படைக்க விரும்பும் திறமையான மக்களும் உள்ளனர். செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ், எரிசக்தி துறைகளில் புதிய சகாப்தங்களை கண்டுபிடிப்பவர்களாக உள்ளனர். மூன்றாவதாக தொழில்துறைக்கான கொள்கை உள்ளது. இந்த 3 திறன்களின் அடிப்படையில் நாட்டின் விமான போக்குவரத்து துறையை வேறு ஒரு புதிய உச்சத்துககு கொண்டு செல்ல வேண்டும்.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Raja k
ஜூன் 02, 2025 22:49

இந்தியாவில் விமான போக்குவரத்து துறையில் தமிழ்நாடு முதலிடம் அதை சொல்லுங்க முதலில், ஒரு வாரத்தில் தமிழகத்தில் இருந்து மட்டும் 450 க்கும் மேல் விமான பயனங்கள் பறக்கின்றன, வாரத்தில் 55,000 பேர்க்குமேல் ரிசர்வேசனில் இருக்கிறார்கள், இரண்டாவது இடத்தில் கருநாடகா 270 விமானபயனங்களுடன் இருக்கிறது,, மூன்றாவது இடத்தில் மாகாராஸ்டிரா 220 பயணங்களுடன் இருக்கிறது,, , தமிழகம்தான் டாப்பில் யாரும் தொடமுடியாத இடத்தில் இருக்கிறது, இதை வெளியே சொல்ல மனசு வரவில்லை,


Columbus
ஜூன் 02, 2025 21:02

Day time landing charges are a lot more than night time landing charges.


vivek
ஜூன் 02, 2025 20:00

இன்னும் சிலர் அப்பாவி தனமாக கருத்து போடுகிறது கோவாலு


அப்பாவி
ஜூன் 02, 2025 18:56

எல்லா ஃப்ளைட்டும் நடுராத்தியில் வந்து இறங்குது. நாம முக்கியம்னா பகல் நேரத்தில் இயக்குங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை