உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வளர்ந்த நாடு என்ற இலக்கை நோக்கி நகரும் இந்தியா; சிவராஜ்சிங் சவுகான்

வளர்ந்த நாடு என்ற இலக்கை நோக்கி நகரும் இந்தியா; சிவராஜ்சிங் சவுகான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா ஒரு வளர்ந்த நாடாக மாறுவதை நோக்கி நிலையாக நகர்கிறது,' என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.ரஷ்யாவுடன் எண்ணெய் வர்த்தகம் செய்வதைக் கண்டித்து, இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவீதம் வரி விதித்தார். மேலும், இந்தியாவை வரிகளின் மஹாராஜா என்று விமர்சித்த டிரம்ப், இந்தியாவின் பொருளாதாரத்தை இறந்து போன பொருளாதாரம் என்று கூறினார். இந்த நிலையில், இந்திய பொருளாதாரம் குறித்து மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பேசியுள்ளார். அவர் கூறியதாவது; 2025-26 நிதியாண்டின் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் பொருளாதாரம் 7.8 சதவீதமாக வளர்ச்சியடைந்தது. இது உலகின் கவனத்தை ஈர்த்தது. இந்த சாதனைக்கு தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமை, துல்லியமான கோட்பாடுகளும், தீர்மானமும் தான் காரணம். நாட்டின் இந்த வளர்ச்சி விவசாயிகள், விஞ்ஞானிகள் மற்றும் 140 கோடி மக்களின் கூட்டு முயற்சியை பிரதிபலிக்கிறது. விவசாயிகளின் விடாமுயற்சி மற்றும் புதுமைகளை ஏற்றுக்கொள்வதால் விவசாயத் துறை 3.7 சதவீதம் வளர்ச்சியை அடைந்துள்ளது. பிரதமர் மோடியின் தலைமையில், நாடு ஒரு வளர்ந்த நாடாக மாறுவதை நோக்கி நிலையாக நகர்கிறது. இந்தியாவின் பொருளாதாரம் நீண்ட ஆரோக்யமானது. பொருளாதார நிச்சயமற்ற சூழலில், இந்தியாவின் விரைவான வளர்ச்சி உலகளவில் கவனமாக பார்க்கப்படுகிறது, இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

அப்பாவி
ஆக 31, 2025 14:53

90 டிகிரி பாலம் கட்டும் போதே நினைச்சேன். உலகில் வேற யாரும் செய்யாத சாதனை செஞ்சு வளர்ந்திருக்கோம்.


Venugopal S
ஆக 30, 2025 22:42

வளர்ந்த நாடு என்ற இலக்கை நோக்கி இந்தியா நகர்கிறது, உண்மை தான்.


vivek
ஆக 31, 2025 00:48

இந்த டாஸ்மாக் அடிமைகள் இல்லையென்றால் எப்போதோ நகர்ந்திருக்கும்


புதிய வீடியோ