உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சியை முறியடித்தது இந்திய ராணுவம்; லாகூரில் வான் பாதுகாப்பு கவச வாகனம் அழிப்பு!

பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சியை முறியடித்தது இந்திய ராணுவம்; லாகூரில் வான் பாதுகாப்பு கவச வாகனம் அழிப்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியாவின் பல நகரங்களில் ஏவுகணை மற்றும் டுரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ராணுவம் செய்த முயற்சி முறியடிக்கப்பட்டு உள்ளது,'' என இந்திய ராணுவம் கூறியுள்ளது. மேலும், லாகூரில் வான் பாதுகாப்பு கவச வாகனத்தையும் அழித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

பதிலடி

பஹல்காமில் நடந்த தாக்குதலை தொடர்ந்து, அதற்கு பதிலடி அளிக்கும் வகையில், பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் மற்றும் விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதனால் நிலைகுலைந்து காணப்படும் பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவம் உரிய பதிலடி கொடுத்து வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jbbqrgmy&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

உறுதி

இந்நிலையில், இந்திய ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடந்த தாக்குதலுக்கு பிறகு நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், அந்நாட்டின் ராணுவ தளங்கள் குறிவைக்கப்படவில்லை என தெளிவாக விளக்கமளிக்கப்பட்டது. மேலும், இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தினால், அதற்கு உரிய பதிலடி அளிக்கப்படும் எனவும் உறுதியாக தெரிவித்தோம்.

முறியடிப்பு

ஆனால் மே 07 மற்றும் 08 ஆகிய இரவுகளில் அவந்திபோரா, ஸ்ரீநகர், ஜம்மு, பதன்கோட், அமிர்தசரஸ், கபுர்தலா, ஜலந்தர், லூதியானா, ஆதம்பூர், பதிண்டா, சண்டிகர், நல்,பலோடி, உத்தர்லாய் மற்றும் பூஜ் உள்ளிட்ட வடக்கு மற்றும் மேற்கு இந்தியாபகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் டுரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இவை அனைத்தும் வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது. பல இடங்களில் சிதறி கிடக்கும் அதன் உதிரி பாகங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம், எல்லையில் பாகிஸ்தானின் தாக்குதல் உறுதி செய்யப்பட்டது.

லாகூரில்

இன்று காலை பாகிஸ்தானின் பல இடங்களில் உள்ள வான் பாதுகாப்பு ரேடர்கள் மற்றும் அமைப்புகள் மீது இந்திய ஆயுதப்படைகள் தாக்குதல் நடத்தின. பாகிஸ்தானை போல், அதே வேகத்தில் இந்தியா பதிலடி கொடுத்தது. இதில், லாகூரில் உள்ள வான் பாதுகாப்பு கவச வாகனம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

கட்டாயம்

ஜம்மு காஷ்மீரின் குப்வாரா , பாரமுல்லா, உரி, பூஞ்ச், மெந்தார் மற்றும் ரஜோரி செக்டாரில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பீரங்கிகள் மற்றும் மோர்ட்டர் மூலம் கொண்டு பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் 3 பெண்கள், 5 குழந்தைகள் உள்ளிட்ட 16 அப்பாவிகள் உயிரிழந்துள்ளனர். இதனால், இங்கும், பாகிஸ்தானின் தாக்குதலை நிறுத்த இந்தியா பதிலளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இவ்வாறு அந்த அறிக்கையில் இந்திய ராணுவம் கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Vellaichamy G
மே 08, 2025 20:18

நமது நாடே ஶ்ரீ நரேந்திர மோடி ஜி பக்கம் உள்ளது. எனவே நாம் பாதுகாப்பாக இருப்போம். அகண்ட பாரதம் நமது இலக்கு.


Nagarajan D
மே 08, 2025 19:38

எவனா இருந்தாலும் அவன் நம்மை அடிக்க நினைக்கும் போதே அவனை அடித்து முடித்து விட வேண்டும்...இந்த பாகிஸ்தான் எனும் நாடே இல்லாமல் போனால் தான் பாரதம் அமைதியாக இருக்கும்.


chidhambaram
மே 08, 2025 19:28

சீக்கிரம் இஸ்லாமாபாத்தை அடிக்கணும் .......பாகிஸ்தான் இருக்க கூடாது


Kasimani Baskaran
மே 08, 2025 19:07

பாகிஸ்தானை அடிக்க இதுதான் சரியான தருணம்.


Madras Madra
மே 08, 2025 17:56

உலகம் முழுமைக்கும் மிக பெரும் அச்சுறுத்தல் இவர்கள்


Mr Krish Tamilnadu
மே 08, 2025 17:25

நடக்கின்ற நிகழ்வுகள் நேரடி போரை நோக்கி செல்கின்றன. நாம் தற்காப்பு என்றே இல்லாமல், ஒரு குறிப்பிட்ட பொறுமைக்கு பிறகு, ஆக்கிரமிப்பு காஷ்மீரை கைப்பற்றும் முயற்சியில் இறங்க வேண்டும். நாம் கைப்பற்றும் பகுதிகளை நமது பகுதிகளாக ஆணித்தரமாக இனி பயன்படுத்த நாம் தயார் ஆக வேண்டும். நமது இழப்புகளை நாம் மீட்கும் திட்டங்களை தெளிவாக திட்டமிட வேண்டும்.


Srinivasan Srisailam Chennai
மே 08, 2025 17:16

பாகிஸ்தான் ராணுவத்தை தாக்கவில்லை அங்கு இருக்கும் தீவிரவாதிகளை தான் தாக்கினோம் இந்தியா தீவிரவாதிகள் என்பவர்கள் பாகிஸ்தான் ராணுவத்தின் ஒரு பகுதியே ஆகும் எனவே அவர்களுக்கு கோவம் வரத்தான் செய்யும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவிடம் முழுவதுமாக வரும் வரை அமைதி அங்கு திரும்பாது


Karthik
மே 08, 2025 16:20

ஜெய்ஹிந்த் ஜெய் ஜவான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை