உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காற்று, சோலார் மின் உற்பத்தியில் ஜெர்மனியை முந்தியது இந்தியா!

காற்று, சோலார் மின் உற்பத்தியில் ஜெர்மனியை முந்தியது இந்தியா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கடந்த 2024ம் ஆண்டில் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பதில் இந்தியா ஜெர்மனியை முந்தி, உலகின் 3வது பெரிய நாடாக மாறியது.புவி வெப்பமயமாதல், கடல் நீர்மட்டம் உயர்வு போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக, காற்று மின்சாரம், சோலார் எனப்படும் சூரிய சக்தி மின்சாரம் ஆகியவற்றுக்கு உலகம் முழுவதும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.குறிப்பாக சோலார் மின் உற்பத்திக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருக்கிறது. உலகளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி, பயன்பாடு குறித்து சர்வதேச ஆய்வு நிறுவனம் எம்பர், தகவல்களை சேகரித்து ஆய்வு மேற்கொண்டது.அந்த நிறுவன அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலகளாவிய மின்சார உற்பத்தியில், 41 சதவீத மின்சாரம் கடந்த ஆண்டு அணு மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முறைகளில் உற்பத்தி செய்யப்பட்டது. 2024ல் இந்தியா காற்று மற்றும் சூரிய சக்தி மூலமாக 215 (TWH) டெராவாட் ஹவர்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்துள்ளது. இந்த உற்பத்தித்திறன், கடந்த ஐந்து ஆண்டுகளில் இரட்டிப்பாக உயர்ந்துள்ளது.மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியா மிகவும் தாமதமாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் இறங்கினாலும், அதிவேகத்தில் மின் உற்பத்தி திறனை அதிகப்படுத்தி வருகிறது. இதன் மூலம், உலக அளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் மூன்றாம் இடத்தில் இருந்த ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளி, இந்தியா அந்த இடத்தை கைப்பற்றியுள்ளது.அதேநேரத்தில் முதல் இடத்தில் இருக்கும் சீனா 1,826 (TWH) டெராவாட் ஹவர்ஸ்யும், 2வது இடத்தில் இருக்கும் அமெரிக்கா 757 (TWH) டெராவாட் ஹவர்ஸ்யும் உற்பத்தி செய்துள்ளன.கடந்த 2024ம் ஆண்டு இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியில் 22 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் அணு மின்சாரம் மூலம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

மிகவும் முக்கியம்

இது குறித்து ஆய்வு செய்த எம்பர் எரிசக்தி நிறுவன நிர்வாக இயக்குனர் மெக்டொனால்ட் கூறியதாவது: உலகளாவிய சூரிய மின் உற்பத்தி மூன்று ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளது. உலக அளவில் அதிகரித்து வரும் மின்சார தேவையை பூர்த்தி செய்வதில் இது மிகவும் முக்கியமானது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Senthil kumar
ஏப் 08, 2025 17:32

L T - 112 KW வரை வைத்திருக்கும் சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு மேற்கூரை சோலார் அமைக்க மானியங்களை அரசுகள் அறிவித்தால் சிறு மற்றும் குறு தொழில்கள் உயிர் பெற வாய்ப்புள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக தொழில் நகரங்கள் திருப்பூர் மாற்றும் கோவை - யில் உள்ள பல சிறு மற்றும் குறு நிறுவனங்கள் சமாதிநிலையை அடைந்துள்ளன.


Ramesh Sargam
ஏப் 08, 2025 11:30

அப்பவும் இந்தியாவில் மின் கட்டணம் பல மாநிலங்களில் ரொம்ப அதிகமாக உள்ளது.


lana
ஏப் 08, 2025 10:30

இந்திய மக்கள் தொகை மற்றும் பரப்பளவு மோடி வந்து அதிகம் ஆகிவிட்டதா. இந்த வீனா போன குன்றிய விடியல் அரசு கமிஷன் கேட்பதை விட்டு இந்த மாதிரி ஆக்கப்பூர்வமான வேலை செய்யலாமே


M. PALANIAPPAN, KERALA
ஏப் 08, 2025 10:26

எல்லா துறைகளிலும் இந்தியா முன்னேற வாழ்த்துக்கள்


R Dhasarathan
ஏப் 08, 2025 10:15

தமிழ் நாட்டில் பிரதம மந்திரி சூரிய சக்தி மானிய திட்டம் சரியான முறையில் மக்களிடம் கேரளா போல் சேரவில்லை. அரசின் பங்கு மிகவும் அவசியம்.


அப்பாவி
ஏப் 08, 2025 09:45

ஜெர்மனியின் பரப்பளவு 3 லட்சம் ச.கிமீ. மக்கள் தொகை 8 கோடி. இந்தியா பரப்பளவு 32 லட்சன் ச.கிமீ. மக்கள் தொகை1500 மில்லியன். அவிங்களோட போட்டி பிட்டு முந்திட்டோம் கோவாலு.


V Ramanathan
ஏப் 08, 2025 09:57

200 sanctioned


Sakthi,sivagangai
ஏப் 08, 2025 11:12

உன்னையெல்லாம் வெளியே வெரட்டி விடாமல் எப்படித்தான் வீட்ல ஒக்கார வச்சி கஞ்சி ஊத்துறாங்களோ உடம்பு பூரா விஷம்.


Kumar Kumzi
ஏப் 08, 2025 12:52

பரம்பரை திராவிஷ கொத்தடிமை...


Gopalakrishnan Balasubramanian
ஏப் 08, 2025 14:41

இவங்க காலத்துல பூஜ்யம் இருந்துதாம் 3-வது வந்ததை நக்கல் அடிக்க வந்துட்டாரு ஆமாம், நீங்க எந்த பல்கலைல சார்- ஆ இருக்கீங்க


Oru Indiyan
ஏப் 08, 2025 09:44

மிகவும் நல்லது. விரைவான முன்னேற்றம் நம் நாட்டிற்கு மிகவும் நல்லது.


புதிய வீடியோ