உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி ஏற்படுத்த இந்தியா முயற்சி

பாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி ஏற்படுத்த இந்தியா முயற்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பயங்கரவாதிகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் பாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் பாகிஸ்தான் மீது மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்நாட்டுடனான சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து என பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gc3wmvzh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், அடுத்த கட்டமாக பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் இரண்டு நடவடிக்கைகளை எடுக்க இந்தியா திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.இது தொடர்பாக டில்லி வட்டாரங்கள் கூறியதாவது: பிரான்ஸ் தலைநகர் பாரிசை தலைமையிடமாக கொண்டு எப்.ஏ.டி.எப்., எனப்படும் சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பு குழு இயங்கி வருகிறது. இந்த குழு பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பது மற்றும் சட்ட விரோத பணபரிமாற்றம் ஆகியவை எந்தெந்த நாடுகளில் நடக்கிறது என்பதை கண்காணித்து அதன்படி நடவடிக்கை எடுக்கும். இந்த உத்தரவை நிறைவேறற்றும் வரை சம்பந்தப்பட்ட நாடு ' கிரே' பட்டியலில் வைக்கப்படும். கடந்த 2018 ம் ஆண்டு பாகிஸ்தான் 'கிரே' பட்டியலில் வைக்கப்பட்டு இருந்தது. பிறகு பயங்கரவாதத்திற்கு நிதி கிடைப்பதை தடுக்க நடவடிக்கை எடுப்பதாக பாகிஸ்தான் உறுதியளித்ததை தொடர்ந்து, அந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, மீண்டும் பாகிஸ்தானை 'கிரே' பட்டியலுக்கு கொண்டு செல்ல முயற்சி செய்ய இந்தியா திட்டமிட்டு உள்ளது. இதன் மூலம், அந்நாட்டிற்கு வெளிநாட்டு நிதி கிடைப்பது தடைபடுவதுடன், வெளிநாட்டு முதலீடுகளும் குறையும். விரைவில், எப்ஏடிஎப் அமைப்பு அதிகாரிகளை சந்தித்து பேசவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.இரண்டாவதாக ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நிதியம் பாகிஸ்தானுக்கு 7 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி அளிக்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கையெழுத்தானது. இந்த நிதியை பயங்கரவாத செயல்களுக்கு தவறாக பாகிஸ்தான் பயன்படுத்துவதாகவும் புகார் அளிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

N thirumalsi
மே 03, 2025 06:38

பாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி ஏற்படுத்த இந்தியா முயற்சி இந்தவாசகத்தில் இந்தியா முயற்சி இந்த தலைப்பை வெளிநாடு பத்திரிகைகள் பயன்படுத்தினால் சரி நம்நாட்டில் அல்லது நமது பரததேசம் என்று எழுதினால் நாட்டுபர்ட்டுடன் இறுக்கும்


Murugan Guruswamy
மே 02, 2025 23:03

ஏற்கனவே பாகிஸ்தான் பிச்சை எடுக்கும் நிலைமைதான், இந்த போர் மட்டும் முடிந்தால் சோமலியாவை மிஞ்சி விடுவார்கள், எல்லாமே மத தீவிரவாதம் காரணம், இதில் அவர்களுடைய மதம்தான் சிறந்தது என்று தம்பட்டம் வேறு


பாமரன்
மே 02, 2025 22:11

அலோ எச்சூச்மீ பகோடாஸ்... இந்த காமெடிக்கு நீங்க எழுத வேண்டிய கருத்து என்னன்னா... சேம்பரம் காலத்தில் கரன்ஸி பிரிண்டிங் மிஷுனு அவனுவளுக்கு குடுத்ததை திரும்ப வாங்கனும்னு சொல்லனும்... ஆக்சுவலா இதை ஆன்கோயிங் அறுவை வேலை நிறுத்தத்துல (அட surgical strike அப்பிடின்னு எழுதி / படிச்சு போரடிச்சிடுத்து) சேர்த்துக்கனும்...


Bhakt
மே 02, 2025 22:47

தினமலர், இந்த நபர் பற்றிய தகவல்களை NIA விடம் பகிருங்கள்.


N Sasikumar Yadhav
மே 02, 2025 22:53

உன்னய மாதிரியான கோபாலபுர கொத்தடிமைகளால் மட்டுமே இப்படி கேவலமாக யோசிக்க தோனும்


சந்திரசேகரன்,துறையூர்
மே 02, 2025 22:55

ஏலே பக்கோடா நீ எழுதுவதுதான் Bore அடிக்குது இனிமே காமெடி பண்றோம்ங்கிற நெனப்புல எரிச்சல் வர்ற மாதிரி இது போன்ற தத்து பித்து கருத்துகளை போடாதே பேசாம போயிரு அங்கிட்டு...


V Venkatachalam
மே 02, 2025 23:16

பாமரனுக்கு பசி நிதி மந்திரியா இருந்தப்ப போரடிக்கல அப்பிடீன்னும் பசி நிதி மந்திரியா இல்லாத இப்ப போரடிக்குதுன்னா நாம் புரிஞ்சிக்கணும். மேலும் பாமரனுக்கு பிடித்த மாதிரி பாகிஸ்தானுக்கு நிதி தடங்கல் வராம இந்தியா பாத்துக்கணும். கூட இருந்து குழி தோண்டறது என்பது இதுதான்.


Naga Subramanian
மே 03, 2025 06:34

Are you a waste land?


raja
மே 03, 2025 07:24

இதோ வந்துட்டான் ல...அண்ணாவுக்கு வாங்கின பக்கோடாவையே ஆட்டைய போட்டவனொட கொத்தடிமை...இவனுக்கும் சோணமுத்தனுக்கும் பக்கோடான்ன ரொம்ப பிடிக்கும் போல...


vivek
மே 03, 2025 09:13

இந்த பாமரன் அறிவுக்கு. 200 ரூபாய்க்கு 201 ரூபாய் கொடுக்கலாம்....சமச்சீர் பகொடாவிருகு எவளோ அறிவு


vivek
மே 03, 2025 09:14

உன்னை எப்படி வீட்டுக்கு உள்ள விடுறாங்க..பகோடா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை