உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விண்வெளியில் சாதனை படைக்க தயாராகும் இந்தியா: 230 மீ., தொலைவில் விண்கலன்கள்

விண்வெளியில் சாதனை படைக்க தயாராகும் இந்தியா: 230 மீ., தொலைவில் விண்கலன்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: விண்வெளியில் ஒருங்கிணைப்புக்காக விண்வெளிக்கு னஅனுப்பப்பட்ட இரண்டு விண்கலன்களுக்கு இடையிலான தூரம் 230 மீ., ஆக குறைந்துள்ளதாக இஸ்ரோ கூறியுள்ளது.இதனையடுத்து இந்த விண்கலன்கள் விரைவில் ஒருங்கிணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.சர்வதேச விண்வெளி மையத்தைப் போல, வரும் 2035ம் ஆண்டுக்குள் தனி விண்வெளி மையத்தை அமைக்க இந்தியா முயற்சித்து வருகிறது. இதன் முன்னோட்டமாக, இரு செயற்கை கோள்களை விண்வெளியில் இணைக்கும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது.இதற்காக, கடந்த டிச.,30ம் தேதி , தலா 220 கிலோ எடை கொண்ட சேஸர், டார்கெட் ஆகிய விண்கலன்களை உள்ளடக்கிய ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள், பி.எஸ்.எல்.வி. சி60 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. அதோடு, 24 ஆய்வு கருவிகளும் அனுப்பி வைக்கப்பட்டன.இதைத் தொடர்ந்து, ஜன.,07 இரு விண்கலன்களை ஒருங்கிணைக்கும் ஆய்வுப்பணியை மேற்கொள்ள இஸ்ரோ திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தரைக்கட்டுப்பாட்டு மையத்தின் நிலைப்படுத்துதலில் ஒப்புதல் பெற முடியாததால், இரு விண்கலன்களையும் ஒருங்கிணைக்கும் திட்டத்தை மீண்டும் ஒத்திவைப்பதாக இஸ்ரோ அறிவித்தது. இந்த விண்கலன்கள் நேற்று 1.5 கி.மீ., தூரத்தில் இருந்தன. இது இன்று காலை 500 மீ., ஆக குறைக்கப்பட்டது.இந்நிலையில், இஸ்ரோ இன்று மாலை வெளியிட்ட அறிக்கையில், '' இரண்டு விண்கலங்களும் 230 மீ., இடைவெளியில் உள்ளது. அனைத்து சென்சார்களும் மதிப்பீடு செய்யப்பட்டது. விண்கலன்கள் நல்ல நிலையில் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இதனையடுத்து செயற்கைக்கோள் ஒருங்கிணைப்பு விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு விண்கலன்களையும் இணைக்கும் முயற்சி வெற்றி பெற்றால், விண்வெளியில் இருவிண்கலன்களை ஒருங்கிணைக்கும் தொழில்நுட்பத்தை பெற்ற 4வது நாடு இந்தியாவாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Parivel
ஜன 11, 2025 22:16

உங்கள் அறிவிற்கு தாங்கள் அமெரிக்காவில் பிறந்து இருக்க வேண்டியவர் தலைவரே.....இப்படியே பல கருத்துக்களை அள்ளி விடுங்க தல...


Mediagoons
ஜன 11, 2025 21:54

கார்போரேட்டுகள் மேலும் மேலும் கொள்ளையடிக்க மட்டுமே உதவும். மக்களுக்கு எந்த பயனும் இல்லை


N Sasikumar Yadhav
ஜன 11, 2025 22:12

முரசொலி வாசகரே விண்வெளி ஆராய்ச்சியை பற்றி தெரிந்து கொள்ள உங்களுக்கு தகுதியில்லை நீங்க எப்போதும்போல திராவிட மாடல் களவானிகளுக்கு சொம்படித்து 200 ரூபாய் வாங்குங்க .


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 11, 2025 21:47

வெற்றிகள் குவியட்டும் .....


Ramesh Sargam
ஜன 11, 2025 20:43

சாதனை படைக்கிறார்கள் நமது விண்வெளி வீரர்கள், விஞ்ஞானிகள் மற்றும் விண்வெளித்துறை அலுவலர்கள். அவர்களுக்கு நம் வாழ்த்துக்கள். மறுபக்கம் நம் வாக்கால் ஆட்சியில் அமர்ந்திருக்கும் அரசியல்வாதிகள் நமக்கு சோதனை கொடுக்கிறார்கள்.


முக்கிய வீடியோ