உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காசாவில் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதற்கு அதிர்ச்சி அளிக்கிறது: இந்தியா வருத்தம்

காசாவில் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதற்கு அதிர்ச்சி அளிக்கிறது: இந்தியா வருத்தம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: காசாவில் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதற்கு அதிர்ச்சி அளிக்கிறது என மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீன பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே கடந்த 2023ம் ஆண்டு அக்டோபரில் போர் துவங்கியது. காசாவில் இஸ்ரேல் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.அந்த வகையில், காசாவின் முக்கிய மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பத்திரிகையாளர்கள் உள்பட 21 பேர் உயிரிழந்தனர். இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:காசாவில் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது மற்றும் மிகவும் வருந்தத்தக்கது. மோதலில் பொதுமக்கள் உயிரிழப்புகளை இந்தியா எப்போதும் கண்டித்து வருகிறது. இஸ்ரேலிய அதிகாரிகள் ஏற்கனவே விசாரணையை தொடங்கியுள்ளனர் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

தஞ்சை மன்னர்
ஆக 27, 2025 21:38

அப்பாடா நாமளும் சொல்லி வச்சாச்சு .


Gnana Subramani
ஆக 27, 2025 21:33

வருத்தம் அல்ல. கண்டனம் தெரிவிக்க வேண்டும்


JaiRam
ஆக 27, 2025 19:11

முதல்ல இஸ்ரேல் பிணை கைதிகளை விடுவிக்க வேண்டும். அது வரை இந்த வெறி பிடித்த ஜிகாதி கும்பல்களுக்கு கருணை காட்ட கூடாது. பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் மூர்க்க ஆதரவாளர்கள்


என்றும் இந்தியன்
ஆக 27, 2025 17:55

காசாவில் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதற்கு ???ஆகா ஓகோ எதற்கு???போர் என்று வரும்போது ஒரு சிறு குழந்தை கூட குண்டு பட்டு இறக்கும் ஆகவே இது ஒரு செய்தியே இல்லை.


அப்பாவி
ஆக 27, 2025 16:04

ஆஹா.. ஓஹோ...


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஆக 27, 2025 15:05

இந்தியாவின் சித்தாந்தம் இஸ்ரேலிடம் எதிர் பார்காதிங்க?? பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் நுழைந்து பொது மக்களை சுட்டு சாகடிக்கலாம் ஆனால் நாம் மட்டும் தீவிரவாதிகளை தான் சுடவேண்டும்.. அப்புறம் எப்படி பொதுமக்கள் உயிரிழப்பின் பாதிப்பு பாகிஸ்தானுக்கு தெரியும். இந்த மாதிரி சித்தாந்தத்தால் தான் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக அன்னியரிடம் அடிமை பட்டு கிடந்தோம். உப்புக்கு ஊறுகாயிக்கு உபயோகமில்லா சட்டங்கள், அளவுக்கு மிஞ்சிய அனைத்து வகையான கட்டுப்பாடற்ற சுதந்திரம், மனிதாபிமானம் என்ற பெயரில் அந்நிய நாட்டு ஊடுருவல்களை கண்டுகொள்ளாமல் இருப்பது, நாட்டில் எது நடந்தாலும் எல்லாவற்றிற்கும் பொறுமை, பொறுமை சமாதானம் அஹிம்சை என்று இருந்தால் வேடிக்கை பார்த்து வியந்து கொண்டு இருக்க முடியுமே தவிர உலக நாடுகள் போல் நம்மால் இருக்க முடியாது.....!!!


R. SUKUMAR CHEZHIAN
ஆக 27, 2025 13:19

வாழ்த்துகள் இஸ்ரேல் சண்டை நடக்கும் இடத்தில் இவர்களுக்கு என்ன வேலை, முதல்ல இஸ்ரேல் பினைகைதிகளை விடுவிக்க வேண்டும் அது வரை இந்த வெறி பிடித்த ஜிகாதி கும்பல்களுக்கு கருணை காட்ட கூடாது.


Perumal Pillai
ஆக 27, 2025 13:11

Terrorists moonlighting as journalists


Sree
ஆக 27, 2025 12:25

அருமையான தாக்குதல்


Anand
ஆக 27, 2025 12:24

குண்டு வீசி சண்டை நடக்கும் இடத்தில் இவனுங்களுக்கு என்ன வேலை?


புதிய வீடியோ