மேலும் செய்திகள்
தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை சீர்குலைக்கும் ராகுல்
4 hour(s) ago | 26
டில்லியில் நடந்தது பயங்கரவாத தாக்குதல் தான்; ஓவைசி திட்டவட்டம்
5 hour(s) ago | 2
மாஸ்கோ: ரஷ்யா சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அந்நாட்டில் இரண்டு புதிய இந்திய தூதரங்களை திறந்து வைத்தார். பின்னர் அவர், 'இந்தியா ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே உறவுகள் மேலும் வலுப்பெறும்' என்று தெரிவித்தார். ரஷ்யாவிற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். அவர் அங்கு அந்நாட்டின் அதிபர் புடினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இந்நிலையில், இன்று யெகாடெரின்பர்க் மற்றும் கசான் நகரங்களில் புதிய துணைத் தூதரகங்களை ஜெய்சங்கர் திறந்து வைத்தார். திறப்பு விழாவில், ரஷ்யாவின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்ட்ரி ருடென்கோ மற்றும் ரஷ்யாவுக்கான இந்தியத் தூதர் வினய் குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.பின்னர் ஜெய்சங்கர் பேசியதாவது: இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், சுற்றுலா, பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம், கல்வி உள்ளிட்ட துறைகளில் உறவு வலுபெறும். ரஷ்யா மற்றும் இந்தியாவின் ராஜதந்திர வரலாற்றில் இது மிக முக்கியமான நாள். இந்த நாட்டில் மேலும் இரண்டு துணைத் தூதரகங்களை திறந்த இந்த நாள் எங்களுக்கு ஒரு முக்கியமான நாள்.கடந்த சில மாதங்களாக, இந்தத் தூதரகங்களை நிறுவுவதற்கான தொடர்ச்சியான பணிகள் நடந்து வந்தன. ரஷ்ய அரசிடம் இருந்து பெறப்பட்ட ஆதரவை இந்தியா அங்கீகரிக்கிறது. தொழில்நுட்பம், அறிவியல், பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் உறவை வலுப்படுத்த, துணைத் தூதரகத்தைத் திறப்பது உத்வேகத்தை அளிக்கும்.இரண்டு புதிய தூதரகங்கள் திறக்கப்படுவதன் மூலம், இந்தியா-ரஷ்யா உறவுகள் மேலும் வலுப்பெறும். இது நிச்சயமாக எங்கள் உறவில் ஒரு புதிய மாற்றத்தை கொண்டுவரும் என்று நான் நம்புகிறேன். சுற்றுலாவை ஊக்குவிக்கவும், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கல்வி மற்றும் கலாச்சார உறவுகளை வலுப்படுத்தவும் தூதரகங்கள் பேருதவியாக இருக்கும். இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார். மகிழ்ச்சி
மாஸ்கோவில் இந்திய சமூகத்தினரை ஜெய்சங்கர் சந்தித்து கலந்துரையாடினார். இந்தப் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, இந்திய நண்பர்களிடையே உரையாடியதில் மகிழ்ச்சி என ஜெய்சங்கர் பதிவிட்டுள்ளார். மரியாதை
முன்னதாக, மாஸ்கோவில் மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் ஜெய்சங்கர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
4 hour(s) ago | 26
5 hour(s) ago | 2