உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆப்கனுக்கு கை கொடுத்த இந்தியா: 21 டன் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

ஆப்கனுக்கு கை கொடுத்த இந்தியா: 21 டன் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானுக்கு 21 டன் நிவாரண பொருட்களை அந்நாட்டுக்கு இந்தியா அனுப்பி உள்ளது. ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் அந்நாட்டையே உலுக்கி உள்ளது. ஆயிரக்கணக்கானோர் பலியாகி இருக்கின்றனர். ஏராளமானோரை காணவில்லை. 5000க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாகி இருக்கின்றன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=isb5ewkj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆப்கானிஸ்தானில் தற்போதுள்ள சூழலை கருத்தில் கொண்டு அந்நாட்டுக்கு உதவுவதாக இந்தியா அறிவித்தது. அதன்படி அந்நாட்டுக்கு 21 டன் எடையில் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளது. இது குறித்து மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் எக்ஸ் வலைதள பதிவில் கூறியதாவது; நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு நிவாரண உதவிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. காபூலுக்கு வான் வழியாக நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றன. மருந்து பொருட்கள், போர்வைகள், சக்கர நாற்காலிகள் என விமானம் மூலம் 21 டன் நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. அங்குள்ள நிலைமையை இந்தியா தொடர்ந்து கண்காணித்து வருகிறது. வரும் நாட்களில் மேலும் நிவாரண பொருட்கள் அங்கு அனுப்பி வைக்கப்படும்.இவ்வாறு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

ManiMurugan Murugan
செப் 03, 2025 22:23

அருமை


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 03, 2025 14:34

அப்பாவிகள் மற்றும் தமிழர்கள் கவனிக்கவும்


Mecca Shivan
செப் 03, 2025 13:01

சனாதனம் சந்தானம் என்று குறைக்கும் அபிராஹ்மிக் அடிமைகளின் கவனத்திற்கு


N.Purushothaman
செப் 03, 2025 11:40

ஆப்கானிஸ்தானில் கஜினி முஹம்மதுன்னா யாருன்னே தெரியாத நிலையால் பாரத பள்ளிகளில் அவன் எத்தனை முறை படையெடுத்து வந்தான்ங்கிற வரை கதை விட்ட காலத்தை மறந்து நாம் என்ன செய்தோம், செய்கிறோம் என்பதை கொண்டு வர வேண்டிய தருணமிது ...


Anand
செப் 03, 2025 11:25

மதவாத நாட்டிற்கு மனிதாபிமான முறையில் நிவாரண பொருட்களை அனுப்பும் நமது அரசை மதவாதம் என கூறும் இங்குள்ள மதமாரி கழிசடைகளின் கருத்து என்னவாக இருக்கும்?


தமிழன்
செப் 03, 2025 11:08

நமது நாட்டின் செயல் நான் இந்தியன் என்று அண்டை நாட்டினரிடம் சொல்லும் அளவிற்கு பெருமையாக உள்ளது


SP
செப் 03, 2025 10:27

தாயுள்ளம் கொண்டது நமது இந்தியா அதற்காக பெருமைப்படுகிறோம்


Manaimaran
செப் 03, 2025 10:13

தவறாண முடிவு


Durai Kuppusami
செப் 03, 2025 09:40

Thanks thiru prime minister modiji


ஆரூர் ரங்
செப் 03, 2025 09:14

மத வேறுபாடு பார்க்காமல் மனித நேயத்துடன் ஒரு அடிப்படைவாத இஸ்லாமிய நாட்டுக்கும் உதவி செய்யும் அரசை இங்குள்ள கழிசடை கட்சிகள் மதவாத அரசு என அழைப்பது அபத்தம்.


Baba Bhagwaan
செப் 03, 2025 10:24

தங்கள் கருத்து அருமை


bgm
செப் 03, 2025 11:31

அண்ணன் ஆரூறார் கருத்துக்கள், பதிவுகள் மிகவும் தரவுகளின் அடிப்டையில் இருக்கும்.


சமீபத்திய செய்தி