உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி

ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் 'டார்லிடோ' ('ஸ்மார்ட்') அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் இன்று வெற்றிகரமாக மேற்கொண்டனர்.ஒடிசா மாநில கடற்கரைப் பகுதியில் உள்ள அப்துல்கலாம் தீவில் இருந்து இன்று சூப்பர்சோனிக் ஏவுகணையின் உதவியுடன் டார்லிடோ எனப்படும் ஸ்மார்ட் அமைப்பின் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்திய கடற்படையின் திறனை மேம்படுத்த பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வடிவமைத்த சூப்பர்சோனிக் ஏவுகணையின் இந்த சோதனை வெற்றியடைந்தது.'டார்லிடோ' என்பது அடுத்த தலைமுறை ஏவுகணை அடிப்படையிலான இலகுரக குழல் வடிவ நீர்மூழ்கி குண்டாகும்; இதனை இந்திய கடற்படையின் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் திறனை மேம்படுத்த பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வடிவமைத்து உருவாக்கியுள்ளது. நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த அடுத்த தலைமுறை ஏவுகணைகள், இந்திய கடற்படையின் திறனை மேலும் அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Manmathan
மே 04, 2024 21:39

இந்தியா வல்லரசு நாடாக மாறட்டும்


Rajendra kumar
மே 01, 2024 19:56

மோடிஜீ பிரதமராக இருக்கும் போது நம் நாடு வல்லரசாக மாறும் என்பதில் ஐயமில்லை


Rajendra kumar
மே 01, 2024 19:52

பிரதமராக மோடி இருக்கும் போது, நாட்டின் பாதுகாப்பு மிகவும் பலமானதாக, ஒரு வல்லரசாக மாறும் என்பதில் ஐயமில்லை


V.A.Sivakumaran
மே 01, 2024 19:20

நாட்டின் பாதுகாப்பிற்கு உழைக்கும் அனைவருக்கும் பாராட்டுக்கள்??


V.A.Sivakumaran
மே 01, 2024 19:20

நாட்டின் பாதுகாப்பிற்கு உழைக்கும் அனைவருக்கும் பாராட்டுக்கள்??


Srinivasan Krishnamoorthi
மே 01, 2024 15:28

வாழ்த்துக்கள்


Kumar Kumzi
மே 01, 2024 15:07

நாடு பாதுகாப்பாக இருக்க வேண்டும் மோடி மீண்டும் மோடி ஆட்சி


subramanian
மே 01, 2024 14:29

பாரத மாதா ஜெய் வந்தே மாதரம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தயாரிக்க வேண்டும் நீர் மூழ்கி கப்பல் அணுகுண்டு தாங்கி தாக்குதல் தயாரிக்க வேண்டும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை