உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உளவு தகவல் சேகரிப்புக்கு அதிநவீன கருவி; பறக்க விட்டு சோதனை செய்தது இந்தியா!

உளவு தகவல் சேகரிப்புக்கு அதிநவீன கருவி; பறக்க விட்டு சோதனை செய்தது இந்தியா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டி.ஆர்.டி.ஓ., சார்பில் உளவு தகவல் சேகரிப்பு மற்றும் கண்காணிப்புக்கான அதிநவீன கருவி, வான்வெளியில் 17 கிலோமீட்டர் உயரத்தில் பறக்க விடப்பட்டு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.மத்தியப் பிரதேசத்தின் ஷியோபூரில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.,) உளவு தகவல் சேகரிப்பு மற்றும் கண்காணிப்புக்கான அதிநவீன கருவியை, வான்வெளியில் 17 கிலோமீட்டர் உயரத்தில் பறக்கவிட்டு சோதனை மேற்கொண்டது. இந்த சோதனை வெற்றி அடைந்தது.இது குறித்து புகைப்படங்களை வெளியிட்டு, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு கூறியிருப்பதாவது: 17 கிமீ உயரத்திற்கு அதிநவீன கருவியை வானில் பறக்கவிட்டு, முதல் விமான சோதனை வெற்றிகரமாக நடந்தது. உளவுத்துறை, கண்காணிப்பை மேம்படுத்த சோதனை நடத்தப்பட்டது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.உளவு தகவல் சேகரிப்புக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனை வெற்றி அடைந்தது ஒரு மைல்கல் என டி.ஆர்.டி.ஓ., தலைவர் சமீர் தெரிவித்தார். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் இந்த சோதனை நடந்துள்ளது. சோதனையை வெற்றிகரமாக முடித்ததற்காக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், டி.ஆர்.டி.ஓ.,வை பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Karthik Raghavendran J
மே 06, 2025 00:35

இது, ஏற்கனவே சீனாவால் பறக்கவிடப்பட்டு, அமெரிக்காவால் மிகவும் முயற்சி செய்து சுட்டு வீழ்த்தப்பட்ட பலூன் போன்றது தான். இது கிட்டத்தட்ட இரண்டாம் உலகப்போர் டெக்னாலஜி. அதில் அனுப்பப்படும் சென்சார்கள் தான் முக்கியம். சில்க் போன்ற பலூனை தற்போதய குறிவைத்து எளிதில் சுட்டு வீழ்த்த முடியாது.


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 04, 2025 10:50

டி ஆர் டி ஓ வில் சேர ஆர்வமாக இருந்தேன் .... முதல் வகுப்பில் தேறியிருந்தாலும் நேர்காணலுக்கு கூட அழைக்கப்படவில்லை ... கொடுப்பினை இல்லை ....


சுந்தர்
மே 04, 2025 09:45

உளவுத் தகவல்களை யாருக்கும் தெரிவிக்க வேண்டாமே


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 04, 2025 10:53

drdo developed spying device என்று இணையத்தில் தேடினால் கிடைக்கிறது ....... இன்றைய உலகில் ரகசியம் என்று எதுவுமில்லை போல ....


Immanuel Prince
மே 04, 2025 09:19

வெளிநாட்டு ட்ரோன்ஸ் இப்போது இந்திய எல்லைகளில் பறப்பதையும் இந்தியா கண்காணிக்க வேண்டும்


புதிய வீடியோ