உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ட்ரோனில் இருந்து ஏவுகணையை ஏவி சோதனை: இந்தியா சாதனை

ட்ரோனில் இருந்து ஏவுகணையை ஏவி சோதனை: இந்தியா சாதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ட்ரோனில் இருந்து ஏவுகணையை ஏவி சோதனை செய்து இந்தியா சாதனை படைத்துள்ளது.ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூலில் ட்ரோனில் இருந்து ஏவுகணையை ஏவி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு நடத்தியது. இந்த சோதனை வெற்றி அடைந்தது என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.இது குறித்து சமூக வலைதளத்தில் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:இந்தியாவின் பாதுகாப்புத் திறன்களுக்கு ஒரு பெரிய ஊக்கமாக, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூலில் ட்ரோனில் இருந்து ஏவுகணையை ஏவி சோதனைகளை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.இந்த சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் தொடக்க நிறுவனங்களுக்கு வாழ்த்துக்கள். இந்த வெற்றி முக்கியமான பாதுகாப்பு தொழில்நுட்பங்களை உற்பத்தி செய்யத் தயாராக உள்ளது என்பதை நிரூபிக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

சுந்தர்
ஜூலை 25, 2025 22:30

இதையெல்லாம் வெளில சொல்லாதீங்க... Wartimeல முடிச்சுட்டு சொல்லுங்க.


ஸ்ரீனிவாசன் ராமஸ்வாமி
ஜூலை 25, 2025 19:17

உள் நாட்டு துரோகி களை முதலில் ஒழித்து கட்ட வேண்டும்.


Anand
ஜூலை 25, 2025 17:01

வாழ்த்துக்கள்...


Rathna
ஜூலை 25, 2025 16:40

கடந்த கால மரக்கட்டை இரண்டாம் உலக போர் துப்பாக்களில் இருந்து கடந்த 10 ஆண்டுகளில் மீண்டு நாட்டின் பாதுகாப்பு வளர்ந்து உள்ளது. நமக்கு இருக்கும் உள்நாட்டு வெளி நாட்டு எதிரிகளில் இருந்து மீள இது தேவை. பாராட்டுக்கள்,


Nada raja
ஜூலை 25, 2025 15:09

ஜெய்ஹிந்த்


உண்மை கசக்கும்
ஜூலை 25, 2025 14:58

மிக சிறந்த சாதனை. வாழ்த்துக்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை