உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வளர்ந்த நாடுகளை விட இந்தியாவில் ரயில் டிக்கெட் கட்டணம் குறைவு; லோக்சபாவில் மத்திய அரசு பதில்

வளர்ந்த நாடுகளை விட இந்தியாவில் ரயில் டிக்கெட் கட்டணம் குறைவு; லோக்சபாவில் மத்திய அரசு பதில்

புதுடில்லி: வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் ரயில் டிக்கெட்டுகளின் விலை மிகவும் குறைவு என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறி உள்ளார்.லோக்சபாவில் கேள்வி நேரத்தின் போது காங்கிரஸ் எம்பி எம்.கே. விஷ்ணு பிரசாத் பேசினார். அப்போது, கொரோனா காலத்திற்கு முன்பு இருந்ததை போலவே, மூத்த குடிமக்களுக்கும் ரயில் டிக்கெட் தள்ளுபடியை மீண்டும் வழங்க அரசு திட்டமிட்டு உள்ளதா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பதில் வருமாறு; நாட்டில் டிக்கெட் விலைகளை குறைவாக வைத்திருக்க ரயில்வே கடந்த ஆண்டு ரூ.60,000 கோடி மானியத்தை வழங்கி இருக்கிறது. இந்தியாவில் டிக்கெட் விலை என்பது அண்டை மற்றும் வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது, அங்குள்ள விலையில் 5 முதல் 10 சதவீதம் தான் உள்ளது.அண்டை நாடுகளுடன் பார்க்கும்போது இங்கு மிகவும் மலிவு விலையில் டிக்கெட் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Gajageswari
டிச 11, 2025 06:07

கட்டணம் பிரச்சினை அல்ல. போதிய பொது போக்குவரத்து நாடு வளர தேவை. ரயில் துறையில் முதலீடுகள் 4 மடங்கு உயர்த்த வேண்டும்


theruvasagan
டிச 10, 2025 22:27

டாலருக்கு நிகரான வளர்ந்த நாடுகள் கரன்சிகளின் மதிப்பு அளவுக்கு இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிக்கும்படி உங்களால் செய்ய முடிந்தால் ரயில் கட்டணத்தை உயர்த்தலாம். உங்களால் செய்ய முடியுமா.


Vijay D Ratnam
டிச 10, 2025 20:58

இது பெருமை படக்கூடிய விஷயம் இல்லை. இந்தியாவில் ரயில்வே டிக்கட் மிக மிக குறைவு. நியாயமான ரேட் ஃபிக்ஸ் பண்ணவேண்டும். மக்கள் நியாயமான விலையில் டிக்கட் எடுக்க தயங்கமாட்டார்கள். மக்கள் எதிர்பார்ப்பது டைமிங், கனேக்டிவிட்டி, பங்க்சுவாலிட்டி, செக்யூரிட்டி, க்ளீன்.இந்த ஐந்தை மட்டும்தான். பிஹார், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் டிக்கட் எடுக்காமல் பயணிக்கும் நபர்கள் அதிகம். அவர்களை பிடித்து பைன் போடுவதை சதவிகித அடிப்படையில் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கலாம். விரட்டி விரட்டி பிடித்து பைன் போடுவான். சென்னை டு திருநெல்வேலிக்கு 400 ரூபாய் சார்ஜ். அதே தூரம் கொண்ட லாஸ் ஏஞ்சலஸ் டு சான் ப்ரான்ஸிஸ்கோ 80 டாலர் 7200 ரூபாய் சார்ஜ். அதே தூரம் கொண்ட பாரிஸ் தி ஃப்ராங்ஃபர்ட் 80 யூரோ 8500 ரூபாய் சார்ஜ். அங்கே ரயில்கள் சுத்தமாக பராமரிக்கப்படுகிறது என்றால் அதற்கான சார்ஜ்.


Suresh
டிச 10, 2025 20:45

இந்தியர்களுக்கு ஒரு கியூவிலே எப்படி நிற்க வேண்டும் என்று தெரியாது. கியூ என்றால் என்னவென்று அமெரிக்க-ஐரோப்பிய நகரங்கள் சென்று கற்றுக்கொள்ளுங்கள். இதேபோல வாகன நெரிசலில் எப்படி கார் ஓட்ட வேண்டும் என்றும் தெரியாது. பொதுசொத்தினை எப்படி பயன்படுத்த வேண்டும் என்றும் தெரியாது. ஐரோப்பிய நகரங்களில் டிராம் வண்டு, பஸ், ரயில்களை எப்படி பொதுமக்கள் சுத்தமாக வைத்திருக்கின்றனர் என்று போய்ப் பாருங்கள். அரசாங்கத்தினை குறை சொல்வதை விட்டு மக்கள் முதலில் திருந்தவேண்டும். புதிதாக வந்தே பாரத், வந்தே பாரத் ஸ்லீப்பர், அம்ரித் பாரத் என்று ரயில்கள் வரப்போகின்றன. இவற்றை சேதப்படுத்தாமல் வைத்திருந்தாலே போதுமானது


Barakat Ali
டிச 10, 2025 20:10

ரெயில் டிக்கெட் கட்டணம் குறைவாக இருக்கலாம் ..... ஆனால் மனிதர்களுக்கானவையா இந்திய பயணியர் ரெயில்கள் ????


ஆரூர் ரங்
டிச 10, 2025 20:02

பயணிகள் ரயில் இயக்குவதால் 43 சதவீதம் நஷ்டம் ஏற்படுகிறது. சரக்கு போக்குவரத்து ரயில் மூலமே அது சரிக்கட்டபடுகிறது. கட்டண சலுகைக்காக சரக்குக் கட்டணத்தை ஏற்றினால் விலைவாசி உயரும்.


Skywalker
டிச 10, 2025 17:44

Indian railways need to improve a lot, lots of unreserved and illegally travelling passengers in reserved coaches disturbing passengers who paid, huge sanitation issue, poor hygiene in trains and train stations, stop comparing with others, less talk more work


Siva Subramaniam
டிச 10, 2025 17:41

Please compare any service in our country with a similarly grown country. Always compare an apple to apple, orange to orange.


முருகன்
டிச 10, 2025 17:27

நாம் இன்னும் வளரவில்லை ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கோமரா கூட கிடையாது விபத்து அறியும் கருவி கிடையாது இது போல் நிறைய உள்ளது


vivek
டிச 10, 2025 18:25

ஆமாம் , முருகன் டிக்கெட் வாங்குவதும் கிடையாது..ஓசி பயணம் தான். .. ஹி.. ஹி


Premanathan S
டிச 10, 2025 17:16

டிக்கெட் கட்டணமும் குறைவு சேவை தரமும் மிக மிக குறைவு இதில் வெறும் பீத்தல் நல்ல நாடு நல்ல நிர்வாகம்


rama adhavan
டிச 10, 2025 19:31

நம் நாட்டில் உள்ளது போல் சேவை தரத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட எந்த வெளிநாட்டிலும் இல்லை. சொல்லப்போனால் எந்த வசதியும் இல்லை. மெட்ரோ ரயில் பிளாட்போர்ம் போல் தான் இருக்கும்.எனவே எதையும் தெரிந்து கொள்ளமல் கருத்து போட வேண்டாமே.


புதிய வீடியோ