உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதிரடி காட்டிய பிரம்மோஸ்: பாக்., விமானப்படை தளங்களை தகர்த்த 19 ஏவுகணைகள்!

அதிரடி காட்டிய பிரம்மோஸ்: பாக்., விமானப்படை தளங்களை தகர்த்த 19 ஏவுகணைகள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, 19 பிரம்மோஸ் ஏவுகணைகளை இந்திய ராணுவம் பயன்படுத்தியதாக, தகவல் வெளியாகியுள்ளது.காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா தாக்குதல் நடத்தியது. தற்போது, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட இழப்புகள் தொடர்பாக பல்வேறு புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன.தற்போது, சிந்தூர் நடவடிக்கையின் போது 11 பாகிஸ்தான் விமானப்படை தளங்களை இந்தியா 19 பிரம்மோஸ் ஏவுகணைகளைப் பயன்படுத்தி தகர்த்தது. இந்திய விமானப்படை போர் விமானங்கள், எஸ்-400 ஏவுகணை ஆறு பாகிஸ்தான் விமானங்களை வீழ்த்தின. 19 பிரம்மோஸ் ஏவுகணைகள் 11 பாக்., விமானப்படை தளத்தை தகர்த்து உள்ளது.பாகிஸ்தான் சீன JF-17 போர் விமானங்களைப் பயன்படுத்தி இந்திய விமானப்படை தளங்கள் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. ஆனால் அவை எந்த சேதத்தையும் ஏற்படுத்தவில்லை. முரிட்கேயில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைமையகத்தை பிரம்மோஸ் ஏவுகணைகள் தகர்த்தது. துல்லியமான தாக்குதலின் மூலம் முற்றிலும் அழிக்கப்பட்டது.ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, இந்தியா நடத்திய தாக்குதலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து பல்வேறு முக்கிய தகவல்கள் வெளிவந்து கொண்டே இருப்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Iyer
ஜூன் 08, 2025 18:23

இந்த OPERATION SINDOOR னால் பல மகிழ்ச்சிகரமான உண்மைகள் வெளிவந்துள்ளன : 1 பாக்கிஸ்தான் இனி 10 - 15 வருடங்கள் கழித்துதான் போர் செய்வதை பற்றி நினைக்கக்கூடும். 2 இந்தியாவின் BRAHMOS ஏவுகணைகளை எந்த நாடும் எப்படிப்பட்ட RADAR கொண்டும் கண்டுபிடிக்க முடியாது - இது சீனாவே ஒப்புக் கொண்ட உண்மை. 3 சீனாவின் உள்நாட்டு பொருளாதாரம் பாகிஸ்தானைவிட மிக மோசமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. 4 சீனாவில் XI SHINPING - HOUSE ARREST செய்யப்பட்டுள்ளார்


ஸ்ரீனிவாசன் ராமஸ்வாமி
ஜூன் 08, 2025 17:35

தேச விரோத தீய சக்திகள் அலறி துடிக்கும்


SENTHIL NATHAN
ஜூன் 08, 2025 16:06

அங்கே அடிச்சா இங்கே வளிக்கும் யாருக்கு வளிக்கும்??


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை