உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறும்; நாட்டு மக்களுக்கு மோடி கடிதம்

உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறும்; நாட்டு மக்களுக்கு மோடி கடிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக விரைவில் இந்தியா வளர்ச்சி பெறும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.இது தொடர்பாக நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தீபாவளி பண்டிகையின் புனிதமான தருணத்தில், உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அயோத்தியில் ராமர் கோவில் பிரமாண்டமாக கட்டப்பட்ட பிறகு இது இரண்டாவது தீபாவளி.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0juk9vm2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ராமர் நீதியை நிலைநாட்டவும், அநீதியை எதிர்த்துப் போராடவும் தைரியம் அளித்துள்ளார். இதற்கு ஒரு சின்ன உதாரணத்தை கடந்த மாதம் நாம் அனைவரும் பார்த்தோம். ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியா நீதியை நிலைநாட்டியது. அதுமட்டுமின்றி, அநீதியைப் பழிவாங்கியது.

பெரிய சாதனை

இந்த தீபாவளி குறிப்பாக சிறப்பு வாய்ந்தது, ஏனெனில், முதல் முறையாக, தொலைதூரப் பகுதிகள் உட்பட நாடு முழுவதும் பல மாவட்டங்களில் விளக்குகள் ஏற்றப்பட்டது. இந்த மாவட்டங்களில் நக்சலிசம் வேரோடு அழிக்கப்பட்டுள்ளது. சமீப காலங்களில், பலர் வன்முறையை கைவிட்டு சரணடைந்து வருகின்றனர். நமது நாட்டின் அரசியலமைப்பின் மீது நம்பிக்கையை வெளிப் படுத்துவதைக் கண்டிருக்கிறோம். இது தேசத்திற்கு ஒரு பெரிய சாதனை. இந்த வரலாற்று சாதனைகளுக்கு மத்தியில், சமீபத்திய நாட்களில் நாடு அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களிலும் இறங்கியுள்ளது. நவராத்திரியின் முதல் நாளில், ஜிஎஸ்டி வரிகள் குறைக்கப்பட்டது.இதனால், மக்கள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை சேமித்து வருகின்றனர்.

மூன்றாவது நாடு

பல நெருக்கடிகளைச் சந்திக்கும் உலகில், இந்திய பொருளாதாரம் சிறப்பாக உள்ளது. உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக விரைவில் இந்தியா மாறும்வளர்ச்சி அடைந்த இந்தியா மற்றும் தன்னம்பிக்கை கொண்ட நாடு என்ற பயணத்தில் வெற்றி பெறுவதற்கு குடிமக்களாகிய நமது முதன்மையான பொறுப்பு, தேசத்திற்கான நமது கடமைகளை நிறைவேற்றுவதாகும்.

சுதேசி பொருட்கள்

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்கி சுதேசி என்று நாம் பெருமையுடன் கூறுவோம்.'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற உணர்வை ஊக்குவிப்போம். அனைத்து மொழிகளையும் மதிப்போம். தூய்மையைப் பேணுவோம். நமது ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்போம். நமது உணவில் சமையல் எண்ணெய் பயன்பாட்டை 10% குறைத்து கொள்ள வேண்டும். யோகா பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இந்த முயற்சிகள் அனைத்தும் நம்மை வளர்ச்சி அடைந்த இந்தியாவை நோக்கிய நமது பயணத்தில் வெற்றியை உருவாக்கும்.

நல்லிணக்கம்

தீபாவளி தினத்தில், ஒரு விளக்கில் மற்றொரு விளக்கு ஏற்றும்போது, ​​அதன் ஒளி குறையாது. மாறாக அது மேலும் வளரும் என்பதையும் நமக்குக் கற்பிக்கிறது. அதே மனப்பான்மையுடன், இந்த தீபாவளியன்று நமது சமூகத்திலும் சுற்றுப்புறத்திலும் நல்லிணக்கம், ஒத்துழைப்பு ஆகியவற்ற பேணுவோம். மீண்டும் ஒருமுறை, உங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 43 )

R Dhasarathan
அக் 21, 2025 21:54

உன்மையான சுதந்திர போராளிகள் நமது இன்ஜினியர்கள் தான்... சுயசார்பு அமல்படுத்த வேண்டும் என்றால் நமது இன்ஜினியர்கள் தான் செய்ய வேண்டும். அதற்கான வாய்ப்புகளை அரசு முழு மூச்சுடன் செய்து தரவேண்டும். கோவிட் சமயத்தில் எவ்வளவு பெரிய தவறு செய்தார்கள் சிறு குறு தொழில் செய்பவர்களுக்கு இந்த அரசு. சுயசார்பு தான் தேவை, இது தான் மோடியிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்...


தாமரை மலர்கிறது
அக் 21, 2025 18:55

உலகின் மூன்றாவது பெரிய பணக்கார பொருளாதார நாடாக இந்தியா அடுத்தாண்டு முன்னேறும்.


Venugopal S
அக் 21, 2025 17:43

பிரதமரும் நிதி அமைச்சரும் சும்மா இருந்தாலே மூன்றாமிடத்தை விரைவாக அடைந்து விடும்!


Haja Kuthubdeen
அக் 21, 2025 17:43

ஒரு 2% பணக்காரன் கையில்தான் ஒட்டுமொத்த பணமும் அடங்கி கிடப்பதா பல தடவை செய்திகள் வந்திருக்கு...


N Sasikumar Yadhav
அக் 21, 2025 22:57

கோபாலபுரம் மற்றும் இத்தாலிய கான்கிராஸும்


Haja Kuthubdeen
அக் 21, 2025 17:39

முதல் இரண்டு நாடுகள் என்னன்னு சொல்லுங்கப்பா...


KOVAIKARAN
அக் 21, 2025 17:22

இங்கு எதிர்மறையான கருத்துக்களை பதிவு செய்திருக்கும் தினமலர் வாசர்களுக்கு ஒரு வேண்டுகோள். சமீப காலங்களாக ஒரு 12 நிமிட whatsapp வீடியோ ஒன்று பரவலாக போய்க்கொண்டிருக்கிறது. அந்த வீடியோவில் ஆங்கிலத்தில் பேசுபவர் ஒரு அமெரிக்க பொருளாதார நிபுணர். நான் இன்று காலையில் தான் எனக்கு என் நண்பர் அனுப்பிய அந்த வீடியோவை பார்த்துப் படிக்க நேர்ந்தது. அந்த வீடியோவில், அவர் கூறுவது என்னவென்றால், தற்சமயம் அமெரிக்கா இந்தியாவின் வளர்ச்சியைப் பார்த்து பயப்படுகிறது என்பதுதான். ஏன் அவ்வாறு பயப்படுகிறது என்பதற்கு பத்து காரணங்களைக் கூறுகிறார். அந்த வீடியோ கிடைத்தால் பார்த்து விபரம் தெரிந்து கொள்ளுங்கள். நான் அந்த விடியோவை என்னுடைய கம்ப்யூட்டரில் சேமித்து உள்ளேன்.


N Sasikumar Yadhav
அக் 21, 2025 23:00

நீங்க சொல்வது நூறு சதவீத உண்மையான தகவல் . ஓஷியும் இலவசமும் வாங்கி ஓட்டுப்போட பழகிய கோபாலபுர நிரந்தர கொத்தடிமைகளுக்கு நீங்க சொல்வதை ஏற்றுக்கொள்ள கூடிய பக்குவம் இன்னும் வளரவில்லை . வளரவும் வளராது


அப்பாவி
அக் 21, 2025 15:32

கடிதமா? எனக்கு எதுவும் வரலியே.


GMM
அக் 21, 2025 15:11

இந்தியாவை 3 வது பொருளாதார நாடக முன்னேற்ற முடியும். ஆனால், நிலை நிறுத்த முடியுமா? ராணுவம் தன் பலத்தை உலகிற்கு காட்டி வருகிறது. அமெரிக்கா, சீனா இந்திய போர் யுக்தி புரியாமல் அமைதி?. பிஜேபி இந்தியாவை பொருளாதார நாடாக ஆக்கி விடும். இன்று இலவச பலன் என்றால் நாளை அதன் இழப்பை மீட்ட வேண்டும். நீதிமன்ற பணிகள் விதிகள் படி இயங்க வேண்டும்.


R. SUKUMAR CHEZHIAN
அக் 21, 2025 14:24

"அனைத்து மொழிகளையும் மதிப்போம். தூய்மையைப் பேணுவோம். நமது ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்போம். நமது உணவில் சமையல் எண்ணெய் பயன்பாட்டை 10% குறைத்து கொள்ள வேண்டும். யோகா பயிற்சி மேற்கொள்ள வேண்டும்." போன்ற நமது பிரதமரின் ஆக்கபூர்வமான நேர்மறை கருத்தை பார்த்து சமூகவிரோத, தேசதுரோக, மதமாற்ற கும்பல்கள் கடுப்பாகி வயித்தெரிசல் கொண்டு எதிர்மறையான குப்பை சிந்தனைகளை தங்கள் தரதுக்கு ஏற்றார் போல பதிவிட்டு கொள்வர். வாழ்க தமிழ் வளர்க பாரத ஒற்றுமை.


திகழ்ஓவியன்
அக் 21, 2025 14:20

இவர் பேசுவதை பார்த்தல் எங்கே நடந்துவிடுமோ என்கிற பயம் 1000 % அதிகரிக்கிறது , அப்புறம் ரிசல்ட் பார்த்த வுடன் ?


Kumar Kumzi
அக் 21, 2025 15:30

ஏன் சும்மா கதறுற


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை