உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியா தனது சுயமரியாதையை சமரசம் செய்யாது; வர்த்தக ஒப்பந்தம் குறித்து பியூஷ் கோயல் கருத்து

இந்தியா தனது சுயமரியாதையை சமரசம் செய்யாது; வர்த்தக ஒப்பந்தம் குறித்து பியூஷ் கோயல் கருத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வர்த்தக பேச்சுவார்த்தைகளில் இந்தியா தனது சுயமரியாதையை சமரசம் செய்யாது என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். 50% அமெரிக்க வரிகளால் இந்தியா பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் தடைப்பட்டது. இது தொடர்பாக, பியூஷ் கோயல் கூறியதாவது: வர்த்தக பேச்சுவார்த்தைகளில் இந்தியா தனது சுயமரியாதையை சமரசம் செய்யாது. இந்தியா சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களுக்கு தயாராக உள்ளது. வரிகளால் பாதிக்கப்பட்ட தொழில்களை அரசாங்கம் ஆதரிக்கும். உள்நாட்டு தேவையை அதிகரிக்க ஜிஎஸ்டி கவுன்சில் விரைவில் கூடும்.

ஏற்றுமதிகள் அதிகரிக்கும்

ஆனால் எந்தவொரு பாகுபாடும் இந்தியாவின் 140 கோடி குடிமக்களின் தன்னம்பிக்கையையும், சுயமரியாதையையும் பாதிக்கும். நாங்கள் தொடர்ந்து முன்னேறி புதிய சந்தைகளைக் கைப்பற்றுவோம். இந்த ஆண்டு எங்கள் ஏற்றுமதிகள் கடந்த ஆண்டை விட அதிகமாக இருக்கும் என்று நான் நம்பிக்கையுடன் சொல்ல முடியும்.

எந்த பாதிப்பும்...!

ஏற்றுமதியாளர்கள் எந்த பாதிப்பும் சந்திக்காத வகையில் நடவடிக்கைகளை எடுக்க அரசு உறுதியாக உள்ளது. வணிக அமைச்சகத்தில் உள்ள நாங்கள், எங்கள் பணிகள் மூலம், உலகின் பிற பகுதிகளை அடைந்து, கைப்பற்றக்கூடிய பிற வாய்ப்புகளைப் பார்க்கிறோம். உள்நாட்டு நுகர்வை அதிகரிப்பதையும் நாங்கள் பரிசீலித்து வருகிறோம். எனவே, இந்த மாற்றங்களின் தாக்கத்தை விரைவாக நம்மால் உணர முடியும். மேலும் இது முழு உள்நாட்டு உற்பத்தித் துறைக்கும் விரைவான தேவையை அதிகரிக்கும். இவ்வாறு பியூஸ் கோயல் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Tamilan
ஆக 30, 2025 00:22

வேடதாரிகள்


அப்பாவி
ஆக 29, 2025 20:56

இப்பவாச்சும் ஆளுக்கு பாஞ்சி லட்சம் போடுங்க. ஜனங்க போட்டி போட்டுக்கிட்டு பொருள் வாங்குவாங்க.


T.sthivinayagam
ஆக 29, 2025 20:27

இதை டிரம்ப்க்கு ஆதரவாகா பிரதமர் மோடி ஜீ அவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு முன் யோசியுத்து இருக்கனும்


joe
ஆக 29, 2025 19:23

அதிக மக்கள் தொகை கொண்ட இந்திய உலகுக்கு எப்போதும் சம நிலை பொருளாதாரத்தை ஆதரித்து நல்ல வர்த்தகத்தையே கொடுக்கும் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை