உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெரும்பான்மை மக்களின் கருத்துபடியே இந்தியா இயங்கும்: நீதிபதி சர்ச்சை கருத்து

பெரும்பான்மை மக்களின் கருத்துபடியே இந்தியா இயங்கும்: நீதிபதி சர்ச்சை கருத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பிரயாக்ராஜ்: “இது இந்தியா; இங்கு பெரும்பான்மை மக்களின் கருத்துபடி தான் இந்த நாடு இயங்கும்,” என, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கூட்டம் நேற்று நடந்தது. இதில், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் சேகர் குமார் யாதவ், தினேஷ் பதக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வாரிசுரிமை

அப்போது, 'பொது சிவில் சட்டம்: அரசியலமைப்பின் தேவை' என்ற தலைப்பில் நீதிபதி சேகர் குமார் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

நம் நாட்டை ஹிந்துஸ்தான் என சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. இங்கு வசிக்கும் பெரும்பான்மை மக்களின் விருப்பப்படியே நாடு இயங்க வேண்டும். இங்கு, சட்டம் உண்மையில் அவர்களுக்கு ஏற்பவே செயல்படுகிறது. பொதுவாக ஒரு குடும்பத்திலோ அல்லது சமூகத்திலோ, பெரும்பான்மையினரின் நலனுக்கும், மகிழ்ச்சிக்குமான நன்மைகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. மதம், பாலினம், ஜாதி ஆகியவற்றை பொருட்படுத்தாமல், அனைத்து குடிமக்களுக்கும் பொருந்தும் தனிப்பட்ட சட்டங்களின் தொகுப்பை உருவாக்க, பொது சிவில் சட்டம் முயல்கிறது.இது திருமணம், தத்தெடுப்பு, வாரிசுரிமை போன்றவற்றை உள்ளடக்கும். பிற சமூகத்தில் நடைமுறையில் உள்ள பலதார திருமணம், முத்தலாக் போன்ற நடைமுறைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. எங்கள் தனிச்சட்டம் அதை அனுமதிக்கிறது என்று அந்த சமூகத்தினர் சொன்னால், அதை ஏற்க முடியாது. நம் சாஸ்திரங்களிலும், வேதங்களிலும் தெய்வ மாகக் கருதப்படும் பெண்ணை நாம் அவமரியாதை செய்ய முடியாது. நான்கு மனைவியர் இருக்க உரிமை கோரவும் முடியாது. தங்களின் கலாசாரம், மரபுகளை பிற சமூகத்தினர் பின்பற்ற வேண்டும் என ஹிந்துக்கள் எதிர்பார்க்கவில்லை. அதேசமயம், இந்த நாட்டின் கலாசாரம், சிறந்த ஆளுமைகள் மற்றும் இந்த மண்ணின் கடவுள்கள் அவமதிக்கப்பட மாட்டார்கள் என்பதை அவர்கள் நம்புகின்றனர்.

சகிப்புத்தன்மை

நம் நாட்டில் சிறிய விலங்குகளைக்கூட துன்புறுத்தக் கூடாது என கற்பிக்கப்படுகிறது. இதனால் தான், நாம் சகிப்புத்தன்மையுடனும், இரக்கத்துடனும் இருக்கிறோம். பிற சமூகங்களில் விலங்குகளை கொன்று அதை உண்ணுகின்றனர். அவர்கள் சகிப்புத் தன்மையுடனும், இரக்கத்துடனும் இருப்பர் என நீங்கள் எப்படி எதிர்பார்க்கிறீர்கள்?ஒரு நாடு என்றால் ஒரு சட்டம், ஒரு தண்டனை சட்டம் இருக்க வேண்டும் என்பது தெளிவாகும் நாள் வெகுதுாரத்தில் இல்லை. இதை ஏற்றுக்கொள்ளாமல், தங்கள் சொந்த கொள்கைகளுடன் இருப்பவர்கள் இங்கு நீண்ட காலம் நீடிக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

Anbunathan S
டிச 13, 2024 08:35

ஒரு காலத்துல பத்திரிக்கை வாசகர்கள நம்பி இருந்துச்சு.இப்ப.. சார் கொஞ்சம் கவனிங்க.


Anbunathan S
டிச 13, 2024 08:27

Superna


NATARAJAN R
டிச 10, 2024 21:05

இது ஒன்றும் சர்ச்சை கருத்து இல்லை. தமிழக அமைச்சர் சிறுபான்மை மக்களிடையே பேசும் போது இது உங்கள் அரசு என்று பேசலாம். தவறு இல்லை. தமிழக அமைச்சர் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசலாம். தவறு இல்லை. இந்தியாவில் இருந்து கொண்டு, பாகிஸ்தான் வாழ்க என்று கோஷம் போடலாம். தவறு இல்லை. இந்துக்களின் நம்பிக்கை பற்றி கேவலமாக எத்தனை வீடியோக்கள் வேண்டுமானாலும் வெளியிடலாம். தவறு இல்லை. ஒரு குறிப்பிட்ட சமூகத்தை பற்றி எவ்வளவு கீழ் தரமான விமர்சனம் வைத்து ஊடகங்களில் விவாதம் செய்யலாம்.தவறு இல்லை. அரசு மற்றும் சிறுபான்மை மதங்கள் பற்றி எது பேசினாலும் உடனே கைது. இந்து மதம் பற்றி என்ன விமர்சனம் வைத்தாலும், கை கட்டி அரசு வேடிக்கை பார்க்கலாம்.தவறு இல்லை. இந்து ஆலயங்களை மட்டும் அரசு தலையிட்டு தேவை இல்லாமல், நீதிமன்றம் பல உத்தரவு பிறப்பித்தும் அதை மதிக்க மறுத்து, ஆகம, பூஜை விக்ஷயங்களில தலையிடலாம்.தவறு இல்லை. "பிற மத வழிபாடு", நிர்வாகம் ஆகியவற்றை கண்டு கொள்ளாமல் இருக்கலாம்.தவறு இல்லை. ஒரு முதல்வர், இந்து பண்டிகைகளுக்கு" மட்டும் "வாழ்த்து" சொல்லாமல் மற்ற மத பண்டிகைகளுக்கு, "வாழ்த்து" சொல்லலாம். தவறு இல்லை. ஆனால், ஒரு நீதிபதி, ஒரு கருத்து சொன்னால் தவறு. உடனே அவரை நீதிபதி பதவியை விட்டு நீக்க வேண்டும். நல்ல வேடிக்கை.


vijayhind
டிச 10, 2024 16:37

சபாஷ் நீதிபதி சார்


Rajasekar Jayaraman
டிச 10, 2024 09:26

ஆண்மையுள்ள நீதிபதி.


Mohammad ali
டிச 10, 2024 20:51

Super


AMLA ASOKAN
டிச 10, 2024 09:13

RSS ன் அடிப்படை கோட்பாடு , கொள்கையை தான் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கூட்டத்தில் வெளிப்படையாக முழக்குகிறார் . நீதிபதிக்குண்டான மேலாடையை கழற்றி எறிந்து விட்டு அரசியல்வாதியாக இவர் என்ன வேண்டுமானாலும் பேசலாம் . இவருடைய தீர்ப்புகள் சட்டதை புறந்தள்ளி , மத அடிப்படையில் தான் வழங்கப்படும் . நீதித்துறையின் நம்பகத்தன்மையை மக்கள் இழந்து விடுவார்கள் .


ஆரூர் ரங்
டிச 10, 2024 11:02

திமுக மாவட்ட செயலாளராக இருந்தவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். திமுக அரசியல் சட்டத்தையே எரித்த கட்சி. கூட்டிக் கழித்துப் பார்த்தால் அந்த நீதிபதி எப்படி பணியாற்றியிருப்பார் என்பது புரியும். தவிர காங்கிரஸில் பொறுப்பு வசித்தவர்களும் ஏன்..சட்டக் கல்வித்தகுதி கூட இல்லாதவர்கள் கூட நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட வரலாறுண்டு. காங் சட்ட அமைச்சர் ஒருவரின் கூற்று என்ன தெரியுமா? ஆளும் அரசின் கொள்கைபடிதான் நீதித்துறை நடந்து கொள்ள வேண்டும் WE NEED A COMMITTED JUDICIARY என்றார்.


GMM
டிச 10, 2024 08:00

பொது சிவில் சட்டம் அவசியம். இந்து மதத்தில் சிறுவர் திருமணம், உடன்கட்டை ஏறுதல், விதவை திருமணம் போன்றவை சட்டம் மூலம் நீதிமன்றம் தடுக்க முடிந்தது. காலத்திற்கு ஏற்ப நடைமுறையை இந்துவில் ஏற்று கொண்டனர். இஸ்லாம் பல தார திருமணம், முத்தலாக் போன்ற தனி சட்டம் கூடாது. தனிமனித உரிமையும் அல்ல. ஒரு நாடு என்றால், ஒரு சட்டம், ஒரு தண்டனை அவசியம். பெரும்பான்மை கருத்து எல்லா இடத்திலும் பொருந்தாது.


Minimole P C
டிச 10, 2024 08:00

Well and rightly said by the judge.


orange தமிழன்
டிச 10, 2024 07:57

சபாஷ் சரியான கருத்து


பேசும் தமிழன்
டிச 10, 2024 07:44

அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும்...... இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளும் ஆட்களுக்கு அரசின் எந்த சலுகைகளும் கிடைக்க கூடாது ....மாறாக அவர்களிடம் இருந்து அதிக வரி வசூலிக்க வேண்டும் ......இதில் மதத்துக்கு இடமில்லை .....நாட்டின் வளர்ச்சிக்காக ஒரு தரப்பினர் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் செயலை செய்தால் .....மற்றொரு தரப்பு மக்கள் தொகையை அதிகரிக்கும் செயலை செய்தால் and எப்படி நாடு உருப்படும் ???


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை