உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மெட்ரோ ரயில் சேவையில் அமெரிக்காவை விரைவில் இந்தியா முந்திவிடும்!

மெட்ரோ ரயில் சேவையில் அமெரிக்காவை விரைவில் இந்தியா முந்திவிடும்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மெட்ரோ ரயில் சேவையில் அமெரிக்காவை விரைவில் இந்தியா முந்திவிடும் என மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர் மனோகர் லால் கட்டார் தெரிவித்து உள்ளார்.இது தொடர்பாக மனோகர் லால் கட்டார் கூறியதாவது: இந்தியாவின் செயல்பாட்டு மெட்ரோ நெட்வொர்க் 26 நகரங்களில் 1,090 கி.மீ. நீளத்திற்கு விரிவடைந்துள்ளது. இந்தியா அமெரிக்காவை முந்தி உலகின் இரண்டாவது பெரிய மெட்ரோ ரயில் சேவைகளை கொண்ட நாடாக மாறும் தருவாயில் உள்ளது.இந்தியா தற்போது உலகளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது, சீனா மற்றும் அமெரிக்கா மட்டுமே இந்தியாவை விட முன்னிலையில் இருக்கின்றன. பல்வேறு இந்திய நகரங்களில், 900 கி.மீ. மெட்ரோ திட்டங்கள் முழு வீச்சில் தீவிரமாக நடந்து வருகிறது. அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் அமெரிக்காவை இந்தியா விஞ்சிவிடும். அந்தளவுக்கு பல்வேறு இந்திய நகரங்களில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன.இந்தியாவில் தயாரிப்போம் முயற்சியின் கீழ், 75% மெட்ரோ ரயில் பெட்டிகளும், சிக்னலிங் உபகரணங்கள் இப்போது உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன. நாடு முழுவதும் தினசரி பயணிகளின் எண்ணிக்கை 1.2 கோடியைத் தாண்டியது. இவ்வாறு மனோகர்லால் கட்டார் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Kasimani Baskaran
டிச 21, 2025 07:54

சிங்கப்பூர் கட்டமைப்பு சிக்கலானது. 600+ சதுர கிலோ மீட்டர் பரப்பளவு. 2040க்குள் 300 நிலையங்கள் உள்ள கட்டமைப்பு இருக்கும். 90களில் இரண்டு தடங்கள் மட்டும் இருந்தன. இப்பொழுது 6 தடங்கள். உச்ச நேரத்தில் 2 நிமிடத்துக்கு ஒரு வண்டி உண்டு. 60 லட்சம் மக்கள் தொகையில் பெரும்பகுதி வேலை செய்வோர். சில நிமிடம் தாமதம் என்றாலும் உற்பத்தித்திறன் குறையும். பலர் கேள்வி கேட்பார்கள். கட்டமைப்புக்களை உருவாக்கி, புதிப்பித்து பராமரிப்பது அவ்வளவு எளிதல்ல. பணம் தண்ணீர் போல செலவு செய்ய வேண்டும். அரசும் அள்ளிக்கொடுக்கிறது.


Kasimani Baskaran
டிச 21, 2025 07:34

ஒரு நாட்டை இன்னொரு நாட்டோடு ஒப்பிடுவது தவறான அணுகுமுறை. அமெரிக்காவில் வீட்டுக்கு நாலு வாகனம் வைத்திருப்பார்கள். பல நகரங்களில் பொது போக்குவரத்து என்பதே வாடகை கார் மற்றும் டாக்சி மட்டுமே. 60-100 மைல் நீளமுள்ள லாஸ் ஏஞ்சல்சுக்கு பொது போக்குவரத்து என்பதே மிக குறைவு. ஆனால் சான் பிரான்ஸிஸ்கோ நகருக்கோ ஓரளவு வசதி உண்டு. ஜப்பானில் கிட்டத்தட்ட அணைத்து நகரங்களிலும் ரயில் கட்டமைப்பு பிரமிக்க வைப்பது என்றால் அது மிகையாகாது. பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளில் கூட அது பொருந்தும். பொது போக்குவரத்து என்பது மக்கள் தொகையின் மற்றும் பொருளாதாரத்தின் அடிப்படையில் எடுக்க வேண்டிய முடிவு.


சண்முகம்
டிச 21, 2025 05:49

அமெரிக்காவின் ரயில் சேவை படு மட்டம். இதை முந்துவதில் பெருமை இல்லை.


vivek
டிச 21, 2025 07:30

அப்போ ஷேர் ஆட்டோவில் போயவிடு


naranam
டிச 21, 2025 03:29

சீனா ஜப்பான் சிங்கப்பூர் போன்ற நாடுகளுடன் ஒப்பிட வேண்டும்..


ramkumar
டிச 20, 2025 23:09

இது எல்லாம் வரலாற்று சாதனை தான்


புதிய வீடியோ