உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நியூசி.க்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்டில் டாஸ் வென்றது இந்தியா; விளையாடியது மழை!

நியூசி.க்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்டில் டாஸ் வென்றது இந்தியா; விளையாடியது மழை!

ஹாமில்டன்; இந்தியா, நியூசிலாந்து இடையேயான 3வது ஒருநாள் போட்டியில் இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆனால் மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்ததால் போட்டி வேறு வழியின்றி கைவிடப்பட்டது.இந்தியா கிரிக்கெட் அணி நியூசிலாந்து சென்றுள்ளது. 5 போட்டிகள் கொண்ட டி 20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. டி 20 தொடரை இந்தியா வென்றது. தற்போது ஒருநாள் போட்டிகள் தொடங்கி உள்ளன. முதல் இரண்டு போட்டிகளை வென்று இந்தியா தொடரில் முன்னிலையில் இருக்கிறது. 3வது ஒருநாள் போட்டி, ஹாமில்டனில் இன்று நடைபெற இருந்தது. டாசில் வென்று இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆனால் மழை பெய்ததால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. போட்டி நடுவர் குழுவினர் பலமுறை மைதானத்தின் ஈரத்தன்மையை ஆய்வு செய்தனர். நிலைமை சாதகமாக இல்லாத சூழலில் போட்டிக்கான ஓவர்கள் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மழை பெய்தவண்ணம் இருந்ததால் ஆட்டம் கைவிடப்படுவதாக போட்டி நடுவர் குழுவினர் அறிவித்தனர். இந்தியா டாஸ் வென்றும் மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டது. வெற்றி பெற்றால் தொடரை இந்தியா தன்வசமாக்கிவிடும் என்ற சூழல் இருந்த நிலையில், ஆட்டம் கைவிடப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

V K
நவ 10, 2026 13:56

ஓ அப்படி யா டாஸ் போட்டு மழை வருமா வராத பார்த்து இருப்பாங்களோ


Ramesh Sargam
நவ 10, 2026 12:16

டாஸ் வென்றது இந்தியா. விளையாடியது மழை. போட்டியை பார்க்கமுடியாமல் மனவருத்தத்துடன் வீட்டுக்கு சென்றது மக்கள்.


பிரேம்ஜி
நவ 11, 2026 07:43

மழை வருவது நல்லது. நாடு செழிக்கும். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை