உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரில் வெடிக்காத பாக்., குண்டுகளை செயலிழக்க செய்யும் பணியில் ராணுவம் தீவிரம்!

காஷ்மீரில் வெடிக்காத பாக்., குண்டுகளை செயலிழக்க செய்யும் பணியில் ராணுவம் தீவிரம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம், ரஜோரியில் உள்ள எல்லைப் பகுதி அருகே வெடிக்காத பாகிஸ்தான் குண்டுகளை இந்திய ராணுவம் செயலிழக்கச் செய்துள்ளது. ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது.இந்நிலையில், நேற்று (மே 14) பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் இடையே நீண்ட நேரம் நடந்த துப்பாக்கிச் சண்டையில், லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த மூன்று பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.சம்பவம் நடந்த பகுதியில் இருந்து துப்பாக்கிகள், குண்டுகள், வெடி பொருட்கள் உள்ளிட்டவற்றை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். மேலும் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தேடுதல் வேட்டை தொடர்கிறது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம், ரஜோரியில் உள்ள எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே வெடிக்காத பாகிஸ்தான் குண்டுகளை இந்திய ராணுவம் செயலிழக்கச் செய்துள்ளது. எல்லைக் கிராமங்களில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சந்தேகத்திற்கிடமான பொருட்கள், வெடிக்காத குண்டுகள் அல்லது வெடிபொருட்கள் ஏதேனும் இருந்தால் உடனடியாக இந்திய ராணுவம் அல்லது ஜம்மு-காஷ்மீர் போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Rajan A
மே 14, 2025 17:10

இதற்கு கழக கண்மணிகளிடம் ஒப்படைத்த இருந்தால் 1 நிமிடத்தில் சரி செய்திருப்பார்கள். ஒன்றிய அரசின் மெத்தனமான போக்கு கண்டிக்க தக்கது


என்றும் இந்தியன்
மே 14, 2025 16:24

வெடிக்காத பாகிஸ்தான் குண்டுகளை செயலிழக்க செய்வது தவறு. அப்போ அப்போ போராடிக்கிறப்போ பாகிஸ்தான் மேலே இந்த குண்டுகளை வீசி முன் செய்த தவறின் விளைவு இந்நாளில் என்ன செய்யும் என்று உணர்த்த வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை