உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பொற்கோவிலை பாக். தாக்குதலில் இருந்து காத்தது எப்படி; மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராணுவம்

பொற்கோவிலை பாக். தாக்குதலில் இருந்து காத்தது எப்படி; மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராணுவம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி; பாகிஸ்தானின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து பொற்கோவிலை பாதுகாத்தது எப்படி என்று இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.மே 8 மற்றும் 9 தேதிகளில் இந்தியா, பாகிஸ்தான் இடையே டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தான் தாக்குதலை இந்திய ராணுவம் துல்லியமாக தாக்கி அனைத்து ஏவுகணைகளையும் அழித்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=p814g0i0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது பஞ்சாப் அமிர்தசரஸ் பொற்கோவில் மீது பாக். ராணுவம் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்களை நடத்தியது. ஆனால் இந்திய ராணுவம் மிக திறமையாக செயல்பட்டு அனைத்து தாக்குதல்களையும் முறியடித்தது.இதுகுறித்து இந்திய ராணுவ 15வது படை பிரிவு மேஜர் ஜெனரல் கார்த்திக் சேஷாத்ரி கூறியதாவது; பொற்கோவிலை நோக்கி ஏவப்பட்ட டிரோன்கள், ஏவுகணைகளை இந்திய வான்படை வழிமறித்து தாக்கி அழித்தது. அவர்களிடம் (பாகிஸ்தான்) சரியான இலக்குகளை இல்லை என்பதை கண்டறிந்தோம். இருப்பினும், பொற்கோவில் முக்கிய இலக்காக இருக்கலாம் என்று யூகித்து, அதை பாதுகாக்க நவீன வான் பாதுகாப்பு சாதனங்களை தயார்படுத்தினோம். பாக். தாக்குதல்களை முறியடித்து, பொற்கோவிலுககு ஒரு கீறல் கூட விழாமல் பாதுகாத்தோம்.அதன் பின்னர், பாக். பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கும் நிலைகளை குறி வைத்து தாக்குதல் நடத்தி அவற்றை அழித்தோம். இவ்வாறு அவர் கூறினார்.தொடர்ந்து, ஆகாஷ் ஏவுகணை அமைப்பு எல் 70 வான் பாதுகாப்பு துப்பாக்கிகள் உள்ளிட்ட வான் பாதுகாப்பு அமைப்புகள் எவ்வாறு பொற்கோவிலை பாதுகாத்தது என்பது பற்றிய விரிவான செயல்விளக்க காட்சியை அவர்கள் வெளிப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Rathna
மே 19, 2025 20:14

1947 இல் பாகிஸ்தானில் மற்றும் ஆப்கானிஸ்தானில் 25 லக்ஷம் சீக்கியர்கள் இருந்தனர். இப்போது பாகிஸ்தானில் 8000 பேரும் ஆப்கானிஸ்தானில் யாரும் இல்லை. அனைவரும் துரத்தப்பட்டனர் அல்லது கொலை செய்யப்பட்டனர். அவர்கள் சொத்துக்கள் கொள்ளை அடிக்கப்பட்டது. இதுதான் உண்மை. ஆனால் காலிஸ்தானிகள் இதை புரிந்து கொள்வதாக இல்லை.


Murthy
மே 19, 2025 19:11

ஆனால் மீனவர்களை மட்டும் காப்பாற்ற வரமாட்டார்கள் . ....


Murugesan
மே 19, 2025 19:58

எதற்காக அடுத்த நாட்டு எல்லையை தாண்டி போறீங்க,,


M S RAGHUNATHAN
மே 19, 2025 16:21

இந்த விவரத்தை தெரிவித்தவர் கார்த்திக் சேஷாத்ரி என்ற தமிழர். ராணுவத்தில் உயர் பதவியான Major General.


தத்வமசி
மே 19, 2025 15:39

சாதாரண சீக்கியர்கள் கட்டாயம் இதை பாராட்டுவார்கள். போலி சீக்கியர்களான காலிஸ்தானிகள் இதை பாராட்டுவார்களா ?


chanakyan
மே 19, 2025 15:25

ராணுவமும் ஊடகமும் இப்படி போட்டி போட்டுக்கொண்டு நாம் வெற்றி பெற்ற வியூகங்களை வெளிப்படையாக விவரிக்கின்றன. இது நாளை எதிரிக்கு சாதகமாகி விடாதா? எப்படி ஜெயித்தார்கள் என்று மண்டை காய விடாமல் நாளை அவர்கள் காப்பியடிக்கவும் வியூகம் மாற்றவும் ஏதுவாக இப்படி வெளிச்சம் போட்டு காட்டுவது சரியா? யாராவது நிபுணர்கள் விளக்கினால் பரவாயில்லை.


Sivasankaran Kannan
மே 19, 2025 15:12

விகடன் போன்ற கழிசடை திராவிட பத்திரிக்கைகள் சேர் இறைக்கும் வேலையே செய்கின்றன..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை