உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கிழக்கு லடாக்கில் ரோந்து பணி துவக்கியது இந்திய ராணுவம்

கிழக்கு லடாக்கில் ரோந்து பணி துவக்கியது இந்திய ராணுவம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியா - சீனா இடையேயான ஒப்பந்தத்தை தொடர்ந்து, கிழக்கு லடாக்கின் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில், ரோந்து பணியை நம் ராணுவத்தினர் நேற்று துவங்கினர்.கடந்த 2020ல், கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இந்தியா - சீனா ராணுவத்தினர் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து, எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில், இரு நாடுகளின் ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.இதனால், இந்தியா - சீனா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வந்தது. டெப்சாங் மற்றும் டெம்சோக் பகுதியிலும் ராணுவ வீரர்களை முழுமையாக திரும்பப் பெறவும், கூடாரங்களை அகற்றவும், 2020க்கு முந்தைய நிலையை தொடர்வது குறித்தும் இரு நாடுகளுக்கு இடையே தொடர்ந்து பேச்சு நடந்தது. இதில் சமீபத்தில் உடன்பாடு எட்டப்பட்டது. இதன்படி, எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் உள்ள டெப்சாங், டெம்சோக் ஆகிய இடங்களில், இந்தியா - சீனா ராணுவத்தினர் அமைத்திருந்த தற்காலிக கூடாரங்கள் அகற்றப்பட்டன; வீரர்களும் வாபஸ் பெறப்பட்டனர். நான்கு ஆண்டுகளுக்கு பின், தீபாவளி பண்டிகையையொட்டி, எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் உள்ள இந்திய - சீன ராணுவ வீரர்கள் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர். இந்நிலையில், டில்லியில் நம் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:சீனா உடனான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, கிழக்கு லடாக்கின் டெப்சாங், டெம்சோக் ஆகிய பகுதிகளில், பரஸ்பர ஒப்புக் கொள்ளப்பட்ட விதிமுறைகளின்படி, நம் ராணுவத்தினர் சரிபார்ப்பு ரோந்து பணியை துவக்கி உள்ளனர். டெம்சோக்கில் கடந்த 1ம் தேதி ரோந்து பணி துவங்கிய நிலையில், டெப்சாங்கில் நேற்று துவங்கியது. இந்த பகுதிகளில், 2020க்கு முந்தைய நிலை தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Rpalnivelu
நவ 03, 2024 04:45

சீனாவில் ஸிபிங்கும் ராணுவத்துக்கும் ஒத்து வருவதில்லை. . சீன உளவாளிகளான உண்டிக்குலுக்கிகள் மற்றும் இத்தாலிய மாபியா இங்கு உள்ளது எனவே பாரதம் உஷார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை