உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்திய முதலீடு: ஜகா வாங்கிய டெஸ்லா

இந்திய முதலீடு: ஜகா வாங்கிய டெஸ்லா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: எலான் மஸ்க்கின் 'டெஸ்லா' நிறுவனம் இந்தியாவில் தொழிற்சாலை துவங்க திட்டமிட்டு வந்த நிலையில், அந்நிறுவன அதிகாரிகள் இதற்கான முயற்சிகளை தொடராததால், டெஸ்லா இந்திய சந்தையில் நுழைவது தற்போது கேள்விக்கு உள்ளாகியுள்ளது.மின்சார கார் தயாரிப்பில், உலகின் முன்னணி நிறுவனமாக எலான் மஸ்கின் டெஸ்லா விளங்குகிறது. சீனாவில் அந்நிறுவனத்திற்கு கார் தயாரிக்கும் ஆலை உள்ள நிலையில், இந்தியாவிலும் ஆலை துவங்க திட்டமிட்டது. இது தொடர்பாக இந்திய அரசும், டெஸ்லா நிறுவனமும் பேசி வந்தன.இதற்காக எலான் மஸ்க் இந்தியா வர இருந்தார். அவரது வருகையின் போது, டெஸ்லா மின் வாகன உற்பத்தி ஆலை மற்றும் விற்பனை பிரிவு உள்ளிட்டவற்றிற்கு, பல கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு திட்டங்களை அறிவிப்பார் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரது வருகை, பார்லி., தேர்தல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.மோடி பிரதமராக பதவி ஏற்றபோதும், எலான் மஸ்க் தன் வாழ்த்து பதிவில், இந்தியாவில் தன் நிறுவனம் உற்சாகமான பணிகளைச் செய்ய ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்து இருந்தார். இதையடுத்து, டெஸ்லா நிறுவனத்தின் இந்திய முதலீடுகள் உறுதிப்படுத்தப்பட்டதாக தொழில்துறையினரால் கருதப்பட்டது.இந்த நிலையில், டெஸ்லா நிறுவனத்தின் அதிகாரிகள், முதலீடு சம்பந்தமாக இந்திய அதிகாரிகளை தொடர்பு கொள்வதை நிறுத்தி உள்ளதாக, 'புளும்பெர்க்' அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நிதி பிரச்னைகள் காரணமாக, இந்தியாவில் புதிய முதலீடுகளை மேற்கொள்ளும் திட்டம் எதுவும் டெஸ்லாவிடம் இல்லை என்று கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

R.Varadarajan
ஜூலை 08, 2024 03:25

இந்தியாவை கவிழ்ப்பதில் ஆர்வம் கொண்டவன் இவன். இவனை உள்ளே விடக்கூடாது. இவன் வெளி தாட்டில் தயாரிக்கப்பட்ட கார்களை இந்தியாவிற்கு கொண்டுவந்து விற்று பணத்தை நன்நாட்டிற்கு எடுத்துச்செல்வானாம். நோகாமல் நோன்பு கும்பிட இவனுக்கு இந்திய அரசு அனுமதி கொடுக்கவேண்டுமாம். ஆட்சியில் இருப்பது கொணங்கி அரசல்ல கன்மதை அவன்உணரவேண்டும். அவனுடைய கார்கள் இந்தியாவிற்குள் ஓடுவது சிரமம். உள்நாட்டு தயாருப்புகளுக்கே முதலிடம் தரவேண்டும்.


venugopal s
ஜூலை 07, 2024 01:32

எலான் மஸ்க்கும் நம் ஜீயைப் பார்த்து நன்றாகவே வாயால் வடை சுடக் கற்றுக் கொண்டு விட்டார் போல் உள்ளதே!


Kannan Iyer
ஜூலை 06, 2024 11:37

மின் கார் உற்பத்தியில் டாட்டாவுடன் கடும் போட்டி தவிர்க்க முடியாது என்பது ஜகா வாங்க முக்கிய காரணமாக இருந்திருக்கும்


Jai
ஜூலை 06, 2024 11:03

இங்கு தேர்தல் முடிந்தவுடன் EVM மெஷினை வைத்து எதிர்க்கட்சிகள் முக்கியமாக இந்தி கூட்டணி கட்சிகள் அரசியல் செய்தனர். அந்த சமயத்தில் எலான் மஸ்க் இந்த எதிர்க்கட்சிகள் அமலில் சேர்ந்து கொண்டு வருங்காலத்தில் AI, EVM மெஷின்களை ஹேக் செய்யும் என்று மொக்கையாக அறிக்கை விடும்பொழுது தெரிந்துவிட்டது எலான் மஸ்க் கேட்ட சலுகைகளை மத்திய அரசு வளைந்து கொடுக்கவில்லை. சீனாவில் உள்ள ஃபேக்டரியில் கார்களை தயாரித்து இங்கு உள்ளூர் தயாரிப்புகளை மட்டுப்படுத்தலாம் என்று நினைத்த அவர் எண்ணம் நிறைவேறவில்லை. இங்கு tata மற்றும் மகேந்திரா இதற்கான ஆராய்ச்சி செய்து கொண்டு உள்ளனர். கூடிய விரைவில் அவர்கள் சீன கார்களுக்கு போட்டியான கார்களை வெளியிடுவார்கள். உள்ளூர் தயாரிப்புகளை பாதுகாக்க மத்தியில் உள்ள பிஜேபி அரசு எடுத்த முயற்சி பாராட்டுக்கு உரியது. இதே இந்தி கூட்டணி அமைந்திருந்தால் இந்தி கூட்டணியில் உள்ள இரண்டு கட்சிகளை வளைத்து எலான் மஸ்க் இதை சாதித்திருப்பார். நாட்டிற்கு ஏன் வலதுசாரி ஆட்சி தேவைப்படுகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 06, 2024 14:51

இடதுசாரி ஆட்சி நாட்டின் நன்மையைக் கருதாது என்பது உண்மையே .........


தத்வமசி
ஜூலை 06, 2024 10:56

டெஸ்லா கார்கள் மிகவும் விலை உயர்ந்தவை. அவற்றை வாங்க விரும்புபவர்களுக்கு இந்தியாவில் தயாரித்தால் தான் வாங்குவார்கள் என்பது இல்லை. வெளிநாட்டில் இருந்து வாங்கவும் வசதி உள்ளவர்கள் மட்டுமே வாங்க இயலும். அதனால் இங்கு வருவதால் எந்த பயனும் இல்லை.


பாமரன்
ஜூலை 06, 2024 10:26

தவறான முடிவு... டெஸ்லாவின் உற்பத்தி நம்பர்களுக்கு இந்திய சந்தையை கைவிட்டு வெகுகாலம் தாங்க முடியாது. டெஸ்லா ஒன்றும் லெக்ஸஸ் ஃபெராரி மாதிரி லக்சரி கார் கிடையாது... இதேபோல் மனநிலையில் இருந்து லேட்டா முழிச்சிக்கிட்டு பின்னர் இந்திய சந்தைக்கு சீரியஸாக வந்த Volkswagen, Kia போன்றவை இன்னும் காலூன்ற முடியாமல் கஷ்டப்படுகின்றன. டெஸ்லா வர மத்திய அரசு கொள்கைகளையும் மாற்றம் செய்தது நிச்சயமாக கேள்விக்குள்ளாக்கப்படும்... பார்ப்போம்


மோகனசுந்தரம்
ஜூலை 06, 2024 09:39

அப்பா நிம்மதி இண்டியா கூட்டணியின் மைண்ட் வாய்ஸ்


ஆரூர் ரங்
ஜூலை 06, 2024 09:27

சுதேசி நிறுவனங்கள் பிழைக்கும். நல்லதே நடந்துள்ளது.


M Ramachandran
ஜூலை 06, 2024 09:26

இஙகு குப்பை கொட்டமுடியாது என்று நங்கு தெரிந்து விட்டது. இஙகு உள்ள மோட்டார் கம்பேணிக்குள்ளேயே பலத்த போட்டி நிலவுகிறது. டெஸ்லாவிற்கு இங்கே வந்தால் அதன் விலை விற்பனய் க்கு கட்டு படி ஆகாது .


அருண், சென்னை
ஜூலை 06, 2024 09:17

இண்டியா கூட்டணனியின் வெற்றி (TESLA hesitation) வளரும் இந்தியாவின் தோல்வி


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை