மேலும் செய்திகள்
பொது லாரியில் பைக் மோதி வாலிபர் உயிரிழப்பு
25-May-2025
ஐதராபாத்: வியாட்நாமில் ஏற்பட்ட சாலை விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த மருத்துவ மாணவர் உயிரிழந்தார்.தெலங்கானா மாநிம் குமுரம் பீம் அஷிபாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் அர்ஷித் அர்ஜூன் மற்றும் பிரதிமா. இவர்கள் துணி வியாபாரிகள். இவர்களது மகன் அர்ஷித் அஷ்ரித் (21). வியட்நாமில் எம்பிபிஎஸ் படித்து வருகிறார். கன் தோ நகரில், நண்பர் ஒருவருடன் டூவிலரில் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்தார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம், எதிரே இருந்த சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது.இச்சம்பவத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் இருவரும் படுகாயமடைந்தனர். அதில் இந்திய மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நண்பர் படுகாயத்துடன் சிகிச்சை பெறுகிறார். இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
25-May-2025