உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் வீர மரணம்

பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் வீர மரணம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காஷ்மீர்: காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில், இந்திய ராணுவ வீரர் ஒருவர், வீர மரணம் அடைந்தார்.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள், சுற்றுலா பயணியரை சுற்றி வளைத்து, ஹிந்துக்களை அடையாளம் கண்டு 26 பேரை குடும்பத்தினர் முன் சுட்டுக் கொன்றனர். இதற்கு பதிலடியாக, புதன்கிழமை அதிகாலையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில், 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில், 9 பயங்கரவாத தளங்களை இந்தியா தாக்கியது. இதில், 80 பேர் வரை மரணம் அடைந்ததாக தெரிகிறது.இந்தியாவின் 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையைத் தொடர்ந்து, காஷ்மீரில் உள்ள பூஞ்ச் பகுதியில், பொதுமக்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் பாகிஸ்தான், எல்லை தாண்டிய தாக்குதலில் ஈடுபட்டது. இதில், குறைந்தது 15 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்; 54 பேர் காயமடைந்தனர்.இந்நிலையில், காஷ்மீர் பூஞ்ச் பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் எல்லை மீறி நடத்திய தாக்குதலில், இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளார். 5 எப்.டி., ரெஜிமென்ட் பிரிவை சேர்ந்த ராணுவ வீரர் தினேஷ் குமார், வீர மரணம் அடைந்துள்ளதாக, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பூஞ்ச் ​​பகுதியில் அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒற்றுமையுடன் நிற்பதாக, இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

தர்மராஜ் தங்கரத்தினம்
மே 09, 2025 07:58

தியாகிக்கு அஞ்சலி... ஜெய் ஹிந்த் .... ஜெய் பாரத் .....


Kasimani Baskaran
மே 08, 2025 03:43

இராணுவம் தீவிரவாதிகளின் மரணத்தில் பங்கேற்கிறது என்றால் அதை இராணுவத்தாக்குதலாக எடுத்துக்கொண்டு இறங்கி அடிப்பதைத்தவிர வேறு வழியில்லை.


Karthik
மே 08, 2025 05:54

Well said..


Kasimani Baskaran
மே 08, 2025 03:42

வீர வணக்கங்கள்.


Bala
மே 08, 2025 01:09

பாகிஸ்தானின் இந்த தாக்குதலுக்கும் இந்தியா தக்க பதிலடி தரவேண்டும். வேறு வழியில்லை. அவர்கள் திருந்தப்போவதில்லை


Priyan Vadanad
மே 08, 2025 00:57

ஆக்டொபஸின் ஒயரை காலை வெட்டிவிட்டோம் என்று மார்தட்டிக்கொள்ள முடியவில்லை. எல்லா கால்களையும் வெட்டுவதே சரி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை