உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி: முதலீட்டாளர்களுக்கு ரூ.11 லட்சம் கோடி நஷ்டம்

இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி: முதலீட்டாளர்களுக்கு ரூ.11 லட்சம் கோடி நஷ்டம்

மும்பை: இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம் காரணமாக இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்தன. நிறுவனங்களின் பங்குகள் விலை சரிந்ததால் முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.11 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.உள்நாட்டுப் பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் இன்று (அக்.,3) கடும் வீழ்ச்சியை சந்தித்தன. நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பங்குச்சந்தைகள் செயல்படவில்லை. இன்று வர்த்தகம் துவங்கியதும் சென்செக்ஸ் 1,264.2 புள்ளிகள் சரிந்து 83,002.09 ஆகவும், அதேபோல் தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 345.3 புள்ளிகள் சரிந்து 25,451.60 ஆக இருந்தது.மும்பை பங்குச்சந்தையில், ஹெவிவெயிட் பங்குகளாக கருதப்படும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ், ஏசியன் பெயின்ட்ஸ், லார்சன் அண்ட் டார்போ, ஆக்ஸிஸ் வங்கி, மகேந்திரா அண்ட் மகேந்திரா, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், மாருதி, கோடாக் மகேந்திரா வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஹெச்.டி.எப்.சி பங்குகள் சரிவில் இருந்தன. இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம் காரணமாக பங்குச்சந்தை வீழ்ச்சியை சந்தித்ததாக கூறப்படுகிறது.வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 1,769 புள்ளிகள் சரிந்து, 82,497 புள்ளிகளாகவும், நிப்டி 529 புள்ளிகள் சரிந்து 25,266 புள்ளிகளாகவும் நிறைவுப்பெற்றன. நிறுவனங்களின் பங்குகள் விலை சரிந்ததால் முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.11 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Barakat Ali
அக் 03, 2024 20:51

பெட்ரோலியப் பங்குகளைத் தவிர மற்றவை அநேகமாக திங்கள் முதல் சரியாகிவிடும் ......


Sudha
அக் 03, 2024 18:57

2 முட்டா பசங்க சண்டை போட்டு நம்ம உயிரை எடுக்குறாங்க


ராஜ்
அக் 03, 2024 18:33

சந்தை மதிப்பு தான் குறைந்து உள்ளது


Ramesh Trichy
அக் 03, 2024 17:13

It is right time to buy good stocks..


ramarajpd
அக் 03, 2024 17:10

இதில் நஷ்டம் எல்லாம் ஒன்றுமில்லை. முட்டா#ள்தனமான செய்தி. trading தெரிந்தவர்களுக்கு இதில் நல்ல வருமானம் வரும் short selling மூலம்.


Vasahar Kanjayan
அக் 04, 2024 05:46

உ ர் ரைட் & கரெக்ட்.....


அப்பாவி
அக் 03, 2024 17:00

சீனாவில் பொருளாதார வீழ்ச்சியை தொடர்ந்து சீன அரசு ஏகப்பட்ட சலுகைகளை அறிவித்து, ஸ்ட்டிமுலஸ் என்று பணத்தையும் அள்ளி விட்டிருக்கிறது. இங்கு போட்ட பணத்தை எடுத்து சீனாவில் முதலீடு செய்தால் ஏகப்பட்ட லாபம். எனவே முதலீட்டாளர்கள் இங்கே விற்கத் தொடங்கியிருக்குறார்கள். தவிர, அமெரிக்காவிலும் வட்டி விகிதம் அரை சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. விற்பதற்கு இரான் இஸ்ரேல் யுத்தம் ஒரு சாக்கு. அடுத்த மீட்டிங்கில் ரிசர்வ் வங்கி கெவுனர் வட்டி விகிதத்தைக் குறைப்பாரு. அப்போ நிலைமை கொஞ்சம் சரியாகலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை