உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவின் மிக நீளமான ரயில் சுரங்கப்பாதை; ரயில்வே துறையில் அடுத்த மைல்கல்

இந்தியாவின் மிக நீளமான ரயில் சுரங்கப்பாதை; ரயில்வே துறையில் அடுத்த மைல்கல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ரிஷிகேஷ்: உத்தரகண்டில் அமைக்கப்பட்டு வரும் நாட்டின் மிக நீளமான ரயில் சுரங்கப்பாதையின் இறுதிகட்ட பணிகளை ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பார்வையிட்டார்.மலை பிரதேசமான உத்தரகண்டின் ரிஷிகேஷ் மற்றும் கர்ணபிரயாக் இடையே ரயில்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 16 சுரங்கப்பாதைகள், 12 துணை சுரங்கங்கள் என மொத்தம் 213 கி.மீ., தொலைவுக்கு ரயில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்படுகின்றன. அதில், 195 கி.மீ., தொலைவிலான பணிகள் நிறைவு பெற்று விட்டன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vaoy6koy&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த நிலையில், இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, தேவ் பிரயாகை மற்றும் ஜனாசு இடையே மலையை குடைந்து சுமார் 14.58 கி.மீ., தொலைவு ரயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இது இந்திய ரயில்வே துறையின் புதிய மைல் கல் திட்டமாகும். ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசத்தில் தற்போதுள்ள ரயில் மற்றும் சாலை சுரங்கப்பாதைகளை பின்னுக்கு தள்ளி, நாட்டின் மிக நீளமான போக்குவரத்து சுரங்கப்பாதையாக இது மாறியுள்ளது. இந்த சுரங்கப்பாதை ஓரிரு ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த சுரங்கப்பாதையின் இறுதிகட்ட பணிகளை, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். இந்த சுரங்கப்பாதையின் மூலம் உத்தரகண்ட்டின் மலை மாவட்டங்களுக்கு செல்லும் பயண நேரம் வெகுவாக குறையும். ஆன்மிக தலங்கள், சுற்றுலா மற்றும் உள்ளூர் மக்களின் தொழில் வளர்ச்சிக்கு இந்த ரயில் சுங்கப்பாதை மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ramesh Sargam
ஏப் 17, 2025 13:01

காங்கிரஸ் ஆட்சியில் நீடித்திருந்தால் இதுபோன்ற வளர்ச்சிகளை நாம் பார்த்திருக்கவே முடியாது.


Murugan
ஏப் 17, 2025 11:08

The Perfect PM india of India .Modi Gi great leader working only for the nation,no one inthe world.


M Ramachandran
ஏப் 17, 2025 09:05

மகிழ்ச்சியான செய்தி. தென் கோடி மூலையிலிருந்து வடக்கோடி பயணம் விரைவு மாற்றம் நம் நாட்டின் வளர்ச்சி முன்னேற்றம் எங்கோ போய் கொண்டிருக்கு. ஆனால் வைத்தெறிச்சலில் உள்ள அற்ப பதர்கள் நாடுகள் தீவீர வாதிகள் மூலம் குண்டு வைத்து அச்ச படுத்த பார்க்கின்றன. மாநில அரசுகள் சரியான சுய நல மற்ற அரசாக நாட்டு பற்று மிக்க தாக அமைதல் வேண்டும். அப்போது தீவிர வாதம் தலை தூக்காது


நல்லதை நினைப்பேன்
ஏப் 17, 2025 08:12

மகிழ்ச்சி. திரு மோடி அவர்கள் தலைமையில் நாடு வெற்றி நடை போடுகிறது. வாழ்க பாரதம். வாழ்க ஹிந்துஸ்தான்.


VENKATASUBRAMANIAN
ஏப் 17, 2025 08:09

ஐம்பது வருடம் ஆண்ட காங்கிரசால் செய்யமுடியாததை பத்து வருடங்களில் பாஜக செய்துள்ளது. சீனாவுக்கு குடை பிடித்ததை தவிர காங்கிரஸ் ஒன்றும் செய்யவில்லை. இதுதான் வரலாறு.


சமீபத்திய செய்தி