உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவின் ஆப்பரேஷன் சிந்தூர் முடியவில்லை: இனி வாலாட்டினால் உடனே பதிலடி

இந்தியாவின் ஆப்பரேஷன் சிந்தூர் முடியவில்லை: இனி வாலாட்டினால் உடனே பதிலடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தருவதில் புதிய பாய்ச்சலை காட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 'பாகிஸ்தானின் அத்துமீறலுக்கான இந்தியாவின் பதிலடி முன்பை விட அதிவேகத்துடன் இருக்க வேண்டும். துப்பாக்கி குண்டுகளுக்கு பீரங்கிகளால் பதில் அளியுங்கள்' என, முப்படைகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டு இருப்பது, 'ஆப்பரேஷன் சிந்துார்' இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதை எதிரிகளுக்கு உணர்த்தியுள்ளது.கடந்த 7ம் தேதி அதிகாலை துவங்கி நான்கு நாட்கள் நீடித்த இந்தியா - பாக்., போர், நேற்று முன்தினம் நிறுத்திக் கொள்ளப்படுவதாக அறிவிப்பு வந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vjzfqptk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0முழுமையான மற்றும் உடனடி போர் நிறுத்தத்துக்கு இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் முதலில் அறிவித்தார்.அதை தொடர்ந்து, 'இரு தரப்புக்கும் பொதுவான இடத்தில் பேசி பிரச்னைக்கு தீர்வு காணப்படும்' என, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ அறிக்கை வெளிட்டார். ஆனால், இந்த முறை பேச்சு நடத்தும் விவகாரத்தில் மத்திய அரசு மிக தெளிவான நிலைப்பாட்டில் இருப்பதாக அரசு தரப்பில் இருந்து தகவல் கசிந்துள்ளது. அதாவது, காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாடு மத்தியஸ்தம் செய்வதை இந்தியா விரும்பவில்லை.அதே நேரம் காஷ்மீர் விவகாரத்தில் பேச்சு என்பது, பாக்., ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியை நம்மிடம் திருப்பி ஒப்படைப்பது குறித்து மட்டுமே இருக்க வேண்டும் என்பதே அந்த முடிவு.மேலும், இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத்தை ஏவிவிடும் பாக்., அரசின் செயல் தொடரும் வரை, சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும் என்பதையும் அரசு அதிகாரிகள் தெளிவுபடுத்தி உள்ளனர்.போர் நிறுத்தம் என்று அறிவித்தும் கூட, பாக்., வாலாட்டுவதை நிறுத்தவில்லை. அங்கொன்றும், இங்கொன்றுமாக அவ்வப்போது தாக்குதல்களை தொடர்கிறது.'அதற்கான பதிலடி இந்த முறை மிகத் தீவிரமாக இருக்க வேண்டும்' என, முப்படைகளுக்கும் பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.'ஆப்பரேஷன் சிந்துார் இன்னும் முடியவில்லை. பாக்., படைகள் வாலாட்டினால் அதற்கான பதிலடி முன்பை விட அதிவேகத்துடன் இருக்க வேண்டும். துப்பாக்கி குண்டுகளுக்கு பீரங்கிகளால் பதில் அளியுங்கள்' என, பிரதமர் தெரிவித்துள்ளதாக அரசு தரப்பு கூறுகிறது.மேற்கு எல்லையில் கடந்த, 10 - 11 நள்ளிரவில் பாக்., படைகள் நடத்திய தாக்குதல்களை, ராணுவதலைமை தளபதி உபேந்திர திவேதி ஆய்வு செய்தார். அதன் பின், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி மேற்கு எல்லையில் ஏதேனும் தாக்குதல் நடந்தால், உத்தரவுகளுக்காக காத்திருக்காமல் உடனடியாக பதிலடி தரும் முடிவை எடுக்க ராணுவ தளபதிகளுக்கு முழு அதிகாரத்தை வழங்கியுள்ளார். இது தொடர்பாக, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி நேற்று காலை ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், இந்தியா - பாக்., ராணுவ அதிகாரிகளிடையே இன்று பகல் 12:00 மணிக்கு அடுத்த கட்ட பேச்சு நடக்கவுள்ளது. இதற்கிடையே, இந்தியா விமானப் படை வெளியிட்ட அறிக்கை: ஆப்பரேஷன் சிந்துாரில் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை துல்லியமாகவும், தொழில்முறையுடனும் வெற்றிகரமாக நிறைவேற்றினோம். தேசிய நோக்கங்களுக்காக திட்டமிட்டு, விவேகமான முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆப்பரேஷன் சிந்துார் தொடர்கிறது. உறுதியில்லாத தகவல்களை பரப்புவதை தவிருங்கள்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நிதானத்தை கடைபிடிப்போம் பாகிஸ்தான் அரசு அறிவிப்பு

பாக்., வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ஷபாகத் அலிகான் கூறியதாவது:இந்தியா உடனான போர் நிறுத்தத்தை உண்மையாக செயல்படுத்துவதில் பாக்., உறுதியாக உள்ளது. நிலைமையை பாக்., படையினர் பொறுப்புடனும், நிதானத்துடனும் கையாளுகின்றனர். போர் நிறுத்தத்தை சுமுகமாக செயல்படுத்துவதில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், இந்தியாவை தொடர்பு கொண்டு தீர்வு காண்போம். நிதானத்தை கடைப்பிடிக்கும்படி, முப்படைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

RAMAKRISHNAN NATESAN
மே 12, 2025 17:21

2029


RAMAKRISHNAN NATESAN
மே 12, 2025 17:20

2029 தேர்தல் பிரச்சாரத்துல காங்கிரஸ்-திமுக ஊழல் கூட்டணி கதற வாய்ப்பு ..... எப்படி ?


maruthu pandi
மே 12, 2025 15:35

அடுத்து பிரதமர் திரு யோகி அவர்களாக இருக்கட்டும் . ஒவ்வொரு இந்தியனும் கொதித்துப்போய் தங்கள் உயிரை தியாகம் செய்ய தயாராகி வரும்போது இந்த சமாதானம் யாருக்காக ? ...இன்னும் எதனை அப்பாவி உயிர்களை நாம் பலியிட போகிறோம் அய்யா ? இந்த பாவிகளை ஈன பிறவிகளை வேரருக்கா விடில் இவர்கள் அடுத்த பழி தீர்க்கும் நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் . இது போல ஒரு சந்தர்ப்பம் இனி கிடைக்காது . மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது . சிக்கிய பாக் ஓநாயை தப்ப விட்டு விட்டோம்


Vijay D Ratnam
மே 12, 2025 14:32

கடந்த முப்பது ஆண்டு காலமாக அமேரிக்கா, பிரிட்டன் போன்ற மேற்கத்திய நாடுகளுக்காகதான் நாங்கள் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்தோம், பயங்கரவாதத்தை வளர்த்துக்கொண்டு இருந்தோம் அந்த மோசமான செயலுக்கான தண்டனையை நாங்கள் ரொம்பவே அனுபவித்து விட்டோம் என்று ஸ்கை நியூஸ் சேனலுக்கு பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் க்வாஜா ஆசிப் தெளிவாக பேட்டி கொடுத்தாரே. அந்த விஷயத்தை சர்வதேச மீடியாக்கள் எப்படி கேஷுவலாக ஸ்கிப் செய்கிறார்கள் என்பதை சீன எலும்புத்துண்டுக்கு வாலாட்டாத சில இந்திய மீடியாக்கள் வெளிப்படுத்த வேண்டும். ஆயுத விற்பனையில் கோலோச்சும் அமேரிக்கா பெயரை பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் மீடியாவில் இழுத்து விட்டவுடன் இந்தியா பாகிஸ்தான் விவகாரத்தில் நாங்கள் தலையிடமாட்டோம் என்று சொல்லிக்கொண்டு இருந்த அமேரிக்கா பதற்றத்துடன் அரக்கப்பரக்க இறங்கி மத்தியஸ்தம், போர் நிறுத்தம், அமைதி, பேச்சுவார்த்தை என்று சாத்தான் வேதம் ஓத வந்துடிச்சி. இஸ்ரேலிடம் ரஷ்யாவிடம் இந்த அமைதி ஒப்பாரியை வைத்ததா இந்த அமேரிக்கா. இஸ்லாமிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டது இந்தியா மட்டுமல்ல, வந்து விழுந்த அம்பு பாகிஸ்தானும்தான். ஆனால் எய்த ஓநாய்கள் சேஃப்டியாக இருப்பதை என்று உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்ட மீடியாக்கள் தயாரா ? அரை கிலோ மைதாமாவுக்கு கூட வக்கற்று நிற்கும் பாகிஸ்தான் மக்கள் முதலில் இதை உணரவேண்டும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 12, 2025 15:49

பன்றிஸ்தான் மந்திரி வாய் திறந்துக்கும், அமெரிக்கா நேரிடையா உள்ள பூந்தத்துக்கும் சம்பந்தம் இருக்கிறதா தெரியல .... அணுவாயுத கன்ட்ரோல் ரூம், டிசெம்பிள்ட் அணுவாயுத பாகங்கள் / சேமிப்புக் கிடங்கு இப்படிப்பட்ட இடங்களில் ப்ரஹ்மோஸ் மூலம் தாக்குதல் நடந்ததே காரணமாகத் தெரிகிறது .... அதன் பிறகே அவர்கள் பெரியண்ணனிடம் கெஞ்சி இருக்கிறார்கள் ...


Rathna
மே 12, 2025 14:20

பாக்கிஸ்தான் IMF கடன் $ 2.3 பில்லியன் டாலர் வருவதற்கு முன்னாலேயே $ 1.5 பில்லியன் டாலர் வரை - 10000 கோடி - இந்த போரில் செலவு செய்து உள்ளது. 7-8 போர் விமானங்கள், கிட்ட தட்ட 10 க்கும் மேற்பட்ட விலை மதிப்புள்ள ரேடார்கள், 1000 வரை டிரோன்கள், படையை சேர்த்ததற்கான செலவு, விமான தளங்களில் அழிவு ஆகியவை அடங்கும். பாகிஸ்தானின் ராணுவ தலைமையிடம் ராவல் பிண்டியில் இந்தியா விமான மற்றும் பிரமோஸ் ஏவுகணை தாக்குதல் நடத்தும் போது பாக்கிஸ்தான் ராணுவ தளபதி முல்லா முனிர் , தனது ராணுவ பதுங்கு குழியில் உயிருக்கு பயந்து தங்கி இருந்தது இப்போது வெளி வந்துள்ளது.


Riyas
மே 12, 2025 12:52

எதுக்கு இந்த சமாதான பேச்சு... நாம் வில்லை போல் இருக்க வேண்டும். சண்டை போட நமக்கு எப்போதும் பயம் இல்லை. இதை போல் திரும்ப நடக்காது என்று யாரும் சொல்ல முடியாது... இன்னும் கொஞ்சம் தான் இருக்கிறது என்று இருக்கும் போது ஏன் விட்டு வைக்க வேண்டும்.


ramesh
மே 12, 2025 11:10

இனிமேல் தீவிரவாதிகள் மூலம் பாக்கிஸ்தான் தாக்கினால் தீவிரவாதிகளை வளர்க்கும் இடமான பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை கைப்பற்றும் வரை போர் நடத்தவேண்டும் . நமது புது மாநிலமாக சேத்து கொள்ள வேண்டும் . பாகிஸ்தான் நமக்குக்கு தேவை இல்லை . சேர்த்தால் வறுமை தான் இந்தியாவிடம் வந்து ஒட்டி கொள்ளும்


raj
மே 12, 2025 13:00

Laughed once read.


ramesh
மே 12, 2025 10:08

முதலில் இந்தியா ராணுவம் பாகிஸ்தான் ஐ அடித்து நொறுக்கியது மிகவும் வரவேற்க தக்கது .3 ஆம் நாள் போரில் பாகிஸ்தான் ட்ரொன் களை தடுத்து சிறப்பாக செயல் பட்டது .ஆனால் பாகிஸ்தான் தளங்களை முதலில் தாக்கியது போல் தாக்கி இருக்க வேண்டும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நம் ராணுவம் கைப்பற்றும் வரை போரை தொடர்ந்து நடத்தி இருக்கவேண்டும் . நம் ராணுவம் சிறப்பாக செயல் பட்டாலும் முடிவு ஏமாற்றம் அளித்து இருக்கிறது . நாம் டிரம்ப் மத்தியஸ்தத்தை கேட்டு இருக்க கூடாது . இப்போது பாகிஸ்தான் நாங்கள் தான் வெற்றி பெற்றோம் என்று கொக்கரிக்கிறது


Nellai tamilan
மே 12, 2025 09:38

லாகூர் நகரத்தை தரைமட்டம் ஆக்கி இருக்க வேண்டும். பதிலடி பதிலடி என்று சொல்லிக் கொண்டு இருந்தால் ஒரு பயனும் இல்லை. அடிப்பதற்கு ஆள் இல்லாமல் எதிரியை அழிக்க வேண்டும். பழைய மோடியாக களத்தில் இறங்குங்கள் இல்லையென்றால் போர் சமயத்தில் மட்டும் யோகிக்கு பொறுப்பு கொடுங்கள்.


makesh
மே 12, 2025 09:35

மோடி சொன்னதுபோலவே செய்தி. இதுவரை பிரதமர் மக்களுக்கு உரை நிகழ்த்தவே இல்லை. ஊடகங்கள் அவர்களுக்கு தோன்றுவதை எழுதுகிறது


சமீபத்திய செய்தி