உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாங்க தங்கங்களா..! 29 பதக்கங்களை வென்ற இந்திய பாராலிம்பிக் வீரர்களுக்கு டில்லியில் உற்சாக வரவேற்பு

வாங்க தங்கங்களா..! 29 பதக்கங்களை வென்ற இந்திய பாராலிம்பிக் வீரர்களுக்கு டில்லியில் உற்சாக வரவேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பாரிசில் இருந்து திரும்பிய இந்திய பாராலிம்பிக் வீரர்களுக்கு டில்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பாராலிம்பிக் போட்டி கடந்த ஆக. 28ல் துவங்கியது. நேற்று நிறைவு பெற்றது. இதில் 168 நாடுகளை சேர்ந்த 4,400 மாற்றுத்திறனாளி நட்சத்திரங்கள் மனஉறுதியுடன் சாதித்தனர். இந்தியா சார்பில் 84 பேர், 12 வகையான போட்டிகளில் பங்கேற்றனர். தடகளம், பாட்மின்டன், துப்பாக்கி சுடுதல், வில்வித்தை, ஜூடோ என 5 போட்டிகளில் அசத்திய நமது நட்சத்திரங்கள் மொத்தம் 29 பதக்கங்கள் பெற்று தந்தனர்.

29 பதக்கம், 18வது இடம்!

பாரிஸ் பாராலிம்பிக்கில் 7 தங்கம் உட்பட 29 பதக்கம் வென்ற இந்தியா, பதக்கப்பட்டியலில் 18வது இடம் பிடித்தது. முதலிடத்தை சீனா தட்டிச் சென்றது. இந்நிலையில், இன்று (செப்.,10) பாரிசில் இருந்து திரும்பிய இந்திய பாராலிம்பிக் வீரர்களுக்கு டில்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் மேள தாளத்துடன் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. பாராலிம்பிக் வீரர்களுடன் மகிழ்ச்சியாக மொபைல் போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.டோக்கியோ பாராலிம்பிக்கில் (2021) இந்தியாவுக்கு 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என 19 பதக்கம் கிடைத்திருந்தது. பாராலிம்பிக்கில் 1968 முதல் 2021 வரை இந்தியா (9 தங்கம், 12 வெள்ளி, 10 வெண்கலம்) மொத்தம் 31 பதக்கம் வென்றது. இம்முறை பாரிசில் மட்டும் 29 பதக்கங்கள் கிடைத்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

D.Ambujavalli
செப் 10, 2024 18:58

படையும் பட்டாளமுமாக சென்ற நம் 'ஒலிம்பிக் வீரர்கள்' செய்யாததை நம் மாற்றுத்திறனாளி வீரர்/ வீராங்கனைகள் செய்து சாதித்திருக்கின்றனர் பாராட்டுக்கள், இந்தியா என்ற நாடு கூட விளையாட்டில் முன்னிற்கிறது என்று உலகுக்கு காட்டி மானம் காத்த கண்மணிகளுக்கு வாழ்த்துக்கள் பல 1


ram
செப் 10, 2024 16:59

இங்கு ஒரு பெண்மணிக்கு ஐம்பது கோடிக்கு மேல் அரசு செலவு செய்தது, நன்றாக தின்னு உடம்பை பெருத்துக்கொண்டு, பதக்கம் வாங்க முடியாமல், இந்த அரசு மேல் பழியினை போட்டுவிட்டு, இப்போது தேச துரோக கட்சியில் சேர்ந்து விட்டது. மத்திய அரசு அந்த பெண்மணியிடம் இருந்து செலவு செய்த பணத்தை திரும்ப வாங்க வேண்டும். இதுபோல ஆட்களுக்கு செலவு செய்வதற்கு பதிலாக இதுமாதிரி பார ஒலிம்பிக் வீரர்களுக்கு செலவு செய்யலாம் எவ்வளவு வேணாலும்.


Ganapathy
செப் 10, 2024 18:22

நோட்டீஸ் கூட கொடுக்காம டிரைனிங் காலத்தில் திடீரென ராஜினாமா செஞ்சதுக்கு ரயில்வே நம்ம வரீல திரும்ப கொடுத்த சம்பளத்தை வசுலிக்கணும் வட்டியோட.


Ganapathy
செப் 10, 2024 14:47

அரசியல் செய்யாம விதிகளை மதிச்சு நமக்கா பதக்கங்கள் கொண்டுவந்தது மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது...வாழ்துக்கள்..


sivakumar Thappali Krishnamoorthy
செப் 10, 2024 11:01

மனமார்ந்த வாழ்த்துக்கள் ..


புதிய வீடியோ